Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
தினமும் நைட் இந்த பானங்களை குடிச்சுட்டு வந்தா.. இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வெச்சுக்கலாம்.. ட்ரை பண்ணுங்க
World Diabetes Day 2024: உலகில் மில்லியன் கணக்கானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோய். இதில் டைப்-1 சர்க்கரை நோய் உடல் இன்சுலினை உற்பத்தி செய்ய தவறும் போது ஏற்படுவது, அதே சமயம் டைப்-2 சர்க்கரை நோய் என்பது உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாமல் இருக்கும் போது அல்லது அதை எதிர்க்கும் போது ஏற்படுவது ஆகும்.

இந்த சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்க்கரை நோயுடன் வாழ்வது என்பது மிகவும் கொடுமையானது. ஏனெனில் இந்த நோயைக் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் உணவுகளில் மற்றும் பழக்கவழக்கங்களில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
அதோடு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுத்து வர வேண்டும். ஆனால் மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, ஒருசில இரவு நேர பானங்களும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். இன்று உலக சர்க்கரை நோய் தினம் என்பதால், மருந்து மாத்திரைகளின்றி இரத்த சர்க்கரையை கட்டுத்தப்படுத்த உதவும் அந்த இரவு நேர பானங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. புதினா அல்லது சீமைச்சாமந்தி டீ
புதினா அல்லது சீமைச்சாமந்தி டீ போன்ற மூலிகை டீக்கள் ஒருவரது மனதை இதமாக்குவதோடு மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் பயனுள்ளதும் கூட. ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதற்கு இந்த டீயை இரவு தூங்கும் முன் குடிப்பது நல்லது.
2. ஆப்பிள் சீடர் வினிகர்
சமீப காலமாக மக்களிடையே ஆப்பிள் சீடர் வினிகர் பிரபலமாக உள்ளது. இதற்கு அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தான் காரணம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம், அது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
3. பட்டை நீர்
இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் பட்டை. இந்த பட்டையை நீரில் ஊற வைத்து குடிக்கும் போது, அது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். அதுவும் இந்த பட்டை நீரை இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், மருந்து மாத்திரைகளின்றி இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
4. பாதாம் பால்
சர்க்கரை நோயாளிகளுக்கு பாதாம் பால் மிகவும் நல்லது. ஏனெனில் இந்த பாலில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகமாகவும், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளது. அதுவும் இந்த பாலை இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்கும் மற்றும் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களும் கிடைக்கும்.
5. மஞ்சள் பால்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வரும் போது, அது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இந்த மஞ்சள் பாலை இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் அனைத்தும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்யும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
