Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
விராட் கோலி ஃபிட்டா இருக்க இந்த கருப்பு தண்ணி தான் காரணமாம்.. இதை குடிப்பதால் என்னென்ன நன்மை கிடைக்கும்?
நிறைய பேருக்கு கருப்பு நீர் அல்லது அல்கலைன் நீர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நீரை நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் தினமும் குடித்து வருகிறார்கள் என்பது தெரியுமா?
அதுவும் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையில் சாதனை புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இவ்வளவு ஃபிட்டாக இருக்க காரணம் இந்த கருப்பு நீர் தானாம். அதுவும் இந்த ஒரு லிட்டர் அல்கலைன் நீரின் விலை ரூ.4000 ஆகும். நல்ல கட்டுமஸ்தான உடலை உருவாக்க உதவும் இந்த நீரைக் குடித்தால், இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

பொதுவாக வழக்கமான நீரில் 6.5 மற்றும் 8.5 வரையிலான அளவில் pH இருக்கும். ஆனால் அல்கலைன் நீரில் pH அளவு அதிகமாக இருக்கும். இந்த கருப்பு நீர் சாதாரண பாட்டில் நீரைப் போன்றே பாட்டிலில் விற்கப்படுகிறது. அல்கலைன் நீர் என்பது காரத்தன்மை நிறைந்த நீர். சரி, காரத்தன்மை நிறைந்த அல்கலைன் நீரைக் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம்.
அல்கலைன் நீரில் சாதாரண நீரை விட pH அளவு அதிகம் என்பதால், இது இரத்த ஓட்டத்தில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவுகிறது. அதற்காக அல்கலைன் நீரில் அமிலத்தன்மை முற்றிலும் இல்லை என்பதில்லை, இந்த நீரில் அமிலத்தன்மை குறைவாகவும், காரத்துகள்கள் அதிகமாகவும் இருக்கும். இப்போது அல்கலைன் நீரின் நன்மைகளைக் காண்போம்.
உடல் நீரேற்றத்துடன் இருக்கும்
வழக்கமான நீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டாலும், அல்கலைன் நீர் இருமடங்கு அதிகமாக உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். எனவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்பவர்கள் சாதாரண நீரைக் குடிப்பதை விட, அல்கலைன் நீரைக் குடிக்கும் போது, உடல் போதுமான நீரேற்றத்துடன் இருக்கும் மற்றும் உடல் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும்.
சர்க்கரை நோய்க்கு சிகிச்சை
அல்கலைன் நீர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவி புரிகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த பாகுத்தன்மையை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலுபெறுகிறது.
இரத்த அழுத்தம் குறையும்
பிபி பிரச்சனையைக் கொண்டவர்கள் அல்கலைன் நீரைக் குடிப்பது நல்லது. ஏனெனில் அல்கலைன் நீரில் உள்ள கனிமச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் அபாயம் குறையும்.
எலும்புகளுக்கு நல்லது
அல்கலைன் நீர் உடலில் உள்ள அதிகப்படியான அமில அளவைக் குறைக்கிறது. உடலில் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது எலும்புகளை பலவீனமாக்கி, விரைவில் எலும்புகளை முறியச் செய்யும். எனவே எலும்புகள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமானால் காரத்தன்மை உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் இந்த அல்கலைன் நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.
எடை இழப்பு
அல்கலைன் நீரைக் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அல்கலைன் நீரைக் குடிக்கும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அல்கலைன் நீரைக் குடித்து நன்மை பெறுங்கள்.
புற்றுநோய்க்கு சிகிச்சை
புற்றுநோயாளிகள் அல்கலைன் நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் புற்றுநோய் செல்களானது அமிலத்தன்மை நிறைந்த சூழலில் நன்கு வளர்ச்சி அடையும். ஆனால் அல்கலைன் நீரைக் குடிக்கும் போது, அது அமிலத்தன்மை நடுநிலையாக்குகிறது. ஒருவேளை புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள், அல்கலைன் நீரைக் குடிக்கும் போது, அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அபாயத்தைக் குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
