Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
World Cancer Day 2025: 90% மக்கள் புறக்கணிக்கும் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்.. நோட் பண்ணி வெச்சுக்கோங்க
World Cancer Day 2025: உலகளவில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக ஏராளமானோரின் உயிரைப் பறிக்கும் கொடிய நோய் தான் புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் மில்லியன் கணக்கானோர் உயிரை இழந்து வருகின்றனர். என்ன தான் மருத்துவ துறையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கொடிய புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும். அதற்கு ஒவ்வொருவரும் புற்றுநோயின் அறிகுறிகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் புற்றுநோய் கட்டிகள் வளரும் இடத்தைப் பொறுத்தது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும வகையில் பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படுவதுண்டு.

அந்த வகையில் இன்று உலக புற்றுநோய் தினம் என்பதால், ஆண்கள், பெண்கள் என இருபாலரிடமும் காணப்படும் சில பொதுவாக புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளானது பெரும்பாலானோரால் புறக்கணிக்கப்படும் அறிகுறிகளாகும். இப்போது புற்றுநோயின் அந்த எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. எடை இழப்பு
திடீரென்று காரணமின்றி உடல் எடை குறையத் தொடங்கினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இது புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாக இருக்கலாம். அதுவும் இப்படியான விவரிக்கமுடியாத எடை இழப்பு வயிறு, கணையம், உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
2. உடல் சோர்வு
ஒருவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருந்தால், அந்நபரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. ஆம், புற்றுநோய் செல்களால் உடலின் ஆற்றலை அழித்து மிகுந்த உடல் சோர்வை உண்டாக்கிவிடும். அதுவும் லுகேமியா, பெருங்குடல் புற்றுநோய் அல்லது வயிற்று புற்றுநோய் போன்றவை இருந்தால் மிகுந்த உடல் சோர்வை ஒருவர் சந்திக்க நேரிடும். எனவே கவனமாக இருங்கள்.
3. சரும மாற்றங்கள்
சருமத்தின் நிறத்திலோ அல்லது அமைப்பிலோ திடீரென்று மாற்றங்களைக் கண்டால் அது தோல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அதுவும் சருமத்தில் திடீரென்று ஒரு புதிய மச்சம் தோன்றி, அது நாளுக்கு நாள் பெரிதாவதைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. தொடர் இருமல் அல்லது தொண்டை கரகரப்பு
சில வாரங்களுக்கு மேலாக ஒருவர் தொடர்ச்சியாக இருமல் அல்லது தொண்டை கரகரப்பை சந்தித்தால், அந்நபருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. இது தவிர இந்த அறிகுறி தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதுவும் நுரையீரல் புற்றுநோயாக இருந்தால், இரத்தம் கலந்த சளி வெளியேறும் மற்றும் மார்பு வலியையும் உண்டாக்கும்.
5. விவரிக்க முடியாத வலி மற்றும் அசௌகரியம்
புற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்நபர் எதை விழுங்கினாலும் சிரமங்களை சந்திக்கலாம். அதோடு திடீரென்று எடை இழப்பு அல்லது உடலில் ஒருவிதமான அசௌகரியத்தை உண்டாக்கும் வலியை சந்திக்கலாம். இப்படி காரணமின்றி ஏதாவது அசௌகரியத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
6. மார்பகம் அல்லது பிற பகுதிகளில் கட்டிகள் அல்லது வீக்கம்
மார்பகம், கழுத்து, அக்குள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் கட்டிகளையோ அல்லது வீக்கத்தையோ கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதுவும் மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் வரும் அபாயம் இருப்பதால், மார்பக பகுதிகளில் ஏதேனும் விசித்திரமான மாற்றங்களை கண்டால், உடனே பரிசோதனை செய்து பாருங்கள்.
7. இரத்தப்போக்கு
மலம் கழிக்கும் போது இரத்தப்போக்கை சந்தித்தால், அது பெருங்குடல், மலக்குடல் போன்றவற்றில் உள்ள புற்றுநோயைக் குறிக்கலாம். அதுவே பெண்கள் விவரிக்கப்படாத இரத்தப்போக்கை யோனியின் வழியே சந்தித்தால், அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றைக் குறிக்கலாம். இருமலின் போது இரத்த வாந்தி எடுத்தால், அது நுரையீரல் புற்றுநோயைக் குறிக்கலாம்.
8. செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனைகள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையவையாக இருந்தாலும், மிகவும் ஆபத்தான புற்றுநோயுடனும் தொடர்பு கொண்டுள்ளது. அதுவும் வயிற்று உப்புசம், குமட்டல், வாந்தி, சிறிது உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வைப் பெறுவது போன்றவை வயிற்று புற்றுநோய், கருப்பை புற்றுநோய் அல்லது கணையப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி அது என்னவென்று பரிசோதனை செய்து பாருங்கள். இதனால், புற்றுநோயாக இருந்தால், அதற்கு சரியான சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications