Latest Updates
-
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
World Cancer Day 2024: உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...
World Cancer Day 2024: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மக்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக புற்றுநோயால் தான் ஏராளமானோர் இறக்கிறார்கள்.
புற்றுநோய் மிகவும் கொடிய நோய். இந்த புற்றுநோயால் உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் இந்த புற்றுநோயால் ஏராளமானோர் இறந்தும் வருகிறார்கள். என்ன தான் நமது மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், எந்த ஒரு நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் தான், அதை எளிதில் குணமாக்க முடியும்.

குறிப்பாக புற்றுநோயை எடுத்துக் கொண்டால், நிறைய பேருக்கு இன்னும் அதன் அறிகுறிகள் சரியாக தெரியவில்லை. அதோடு புற்றுநோயானது மோசமான உணவுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினாலும் வருகிறது. அதே சமயம் நாம் உண்ணும் சில உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும் என்பது தெரியுமா? கீழே புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்று காட்சியளிக்கும் ப்ராக்கோலி புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டது. இதில் உள்ள சல்போராபேன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்களும் உள்ளன. எனவே இந்த ப்ராக்கோலியை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிட்டால், புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.
பெர்ரி பழங்கள்
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவை நல்ல வண்ணமயமானவை மட்டுமின்றி, சுவையானதும் கூட. மேலும் இதில் அத்தியாவசிய ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயை வரத் தூண்டும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், பெர்ரி பழங்கள் அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
பூண்டு
பூண்டில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றலைக் கொண்டது. அதோடு பூண்டு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆகவே தினசரி உணவில் பூண்டு சேர்த்து வந்தால், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
மஞ்சள்
தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் மஞ்சள். மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சளில் குர்குமின் என்னும் கலவை உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும், புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளையும் கொண்டது. ஆய்வுகளிலும் மஞ்சளை உட்கொள்வதன் மூலம், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், மற்ற பகுதிகளுக்கு பரவுவதைக் குறைக்கவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே மஞ்சளை தினசரி உணவில் சேர்த்து புற்றுநோயின் அபாயத்தைக் குறையுங்கள்.
க்ரீன் டீ
நீங்கள் டீ பிரியர் என்றால், தினமும் பால் டீயைக் குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீயை குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயைத் தூண்டும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலுக்கு பாதுகாப்பு அளிக்கும். ஆய்வுகளில் கூட, க்ரீன் டீ புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது.
தக்காளி
தக்காளியில் சக்தி வாய்ந்த லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே புற்றுநோயில் இருந்து பாதுகாப்பாக இருக்க நினைத்தால், தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
