Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
நைட் நேரத்துல இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்க இதயம் ஆபத்தான நிலைமையில இருக்குன்னு அர்த்தம்.. உஷார்...
Winter Heart Attack Symptoms In Tamil: நமது உடலிலேயே சற்றும் ஓய்வெடுக்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு தான் இதயம். ஏனெனில் இதயம் தான் உடலுறுப்புக்களின் இயக்கத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இரத்தத்தின் மூலம் அனுப்புகிறது.
இப்படி அயராது உழைத்துக் கொண்டிருப்பதால், நமது இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதுவும் ஒருவர் உடலுக்கு முழு ஓய்வை அளிக்கும் இரவு நேரத்தில் ஒருசில அறிகுறிகள் தெரிகிறது என்றால், இதயத்தில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது அல்லது மாரடைப்பு ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.

சமீப காலமாக மக்கள் மாரடைப்பால் அதிகமாக இறந்து வருகிறார்கள். அதுவும் குளிர்காலத்தில் தான் நிறைய பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே நீங்கள் குளிர்காலங்களில் இரவு நேரத்தில் பின்வரும் அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இந்த அறிகுறிகள் எல்லாம் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள். இப்போது அந்த அறிகுறிகளைக் காண்போம்.
இதயம் சேதமடையும் போது என்ன நடக்கும்?
ஏற்கனவே கூறியது போல, இதயம் தான் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. எனவே இந்த இதயத்தில் பிரச்சனை ஏற்படும் போது, ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கப்படும். ஒருவரது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையானது, மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
எனவே ஒவ்வொருவரும் தங்கள் இதய ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். இதயத்தில் இருக்கும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் மரணத்தைத் தவிர்க்கலாம்.
இரவு நேரத்தில் மூச்சுவிடுவதில் சிரமம்
திடீரென்று மூச்சுவிடுவதில் ஒருவர் சிரமப்பட்டால், அது இதயம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதன் முதல் அறிகுறியாகும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சுவாசிப்பதற்கும், இதயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று பலரது மனதில் கேள்வி எழலாம். ஒருவர் படுத்திடுக்கும் போது, உடல் திரவங்களை மறுபகிர்வு செய்யும் போது, நுரையீரலில் திரவம் நிரம்புகிறது. இந்நிலையில் இதயத்தில் ஏற்கனவே பிரச்சனை இருந்தால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
அசாதாரண இருமல்
இரவு நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கிறதா? அப்படியானால் உங்கள் இதயம் ஆபத்தில் உள்ளது அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று அர்த்தம். இருமலானது இதய பாதிப்பை எப்படி உணர்த்துகிறது என்று பலரும் நினைக்கலாம். இதயத்தில் பிரச்சனை இருந்தால், அது நுரையீரலில் திரவத்தை தேங்க வைத்து, இரவு நேரத்தில் காற்றுப்பாதைகளை எரிச்சலடையச் செய்து, இருமலை ஏற்படுத்துகிறது.
இரவில் அதிகமான வியர்வை
இரவு நேரத்தில் உங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வியர்க்கிறது என்றால், இதயத்தின் செயல்பாடு மோசமாக உள்ளது அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதோடு இந்த அறிகுறி தான் பெரும்பாலானோர் புறக்கணிக்கும் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியும் கூட.
இரவில் கால் மற்றும் பாத வீக்கம்
இதயம் பலவீனமாக அல்லது ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் மற்றொரு அறிகுறி தான் கணுக்கால், பாதங்கள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுவது. ஏனெனில் படுக்கும் போது ஈர்ப்பு விசையானது திரவங்களை கால்கள் மற்றும் பாதங்களுக்கு இழுக்கிறது. மேலும், இதயம் பலவீனமாக இருக்கும் போது, இதயத்தால் இரத்தத்தை போதுமான அளவு உடலுறுப்புக்களுக்கு அழுத்த முடியாமல் போகும். இதன் விளைவாக பாதங்களில் திரவங்கள் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறட்டை
சுவாசிப்பதில் ஏற்படும் குறுக்கீடுகள் கார்டிசோன் மற்றும் அட்ரினலின் என்ற இரண்டு அழுத்த ஹார்மோன்களின் எழுச்சியையும் ஏற்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்கள் இதய செயலிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கின்றன. அவை மாரடைப்பையும் தூண்டலாம். எனவே சமீப காலமாக இரவு நேரத்தில் அதிக சப்தத்துடன் குறட்டை விடுகிறீர்கள் என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கும் தெரிகிறது என்றால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











