Latest Updates
-
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்..
கம்ப்யூட்டர்ல வேலை பார்த்து உங்க கை மரத்து போச்சா.. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்...
இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் வேலை என்பது ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலையாக இருந்து வருகிறது. அதிலும் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் மக்கள் சதா அந்த கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் கை வலி, கண் வலி மற்றும் முதுகு வலி போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
சில சமயங்களில் கையை கூட நகர்த்தாமல் லேப்டாப்பில் வேலை பார்க்க வேண்டியிருக்கும். இதனால் கைகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்பொழுது கை வலி, மணிக்கட்டு வலி போன்றவை பொதுவான பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கம்ப்யூட்டரின் பயன்பாடும், மொபைலை தொடர்ந்து தட்டுவதே முக்கிய காரணமாக அமைகிறது. இது அப்படியே போய் கடைசியில் ஒரு நாள்பட்ட சிக்கலில் கொண்டு வந்து விடும்.
கணிணி பயன்பாட்டில் என்ன பிரச்சினை ஏற்படுகிறது?
கார்பன் டன்னல் சிண்ட்ரோம்
கார்பன் டன்னல் சிண்ட்ரோம் என்பது பொதுவாக கைகளில் ஏற்படும் நிலையாகும். நாம் லேப்டாப்பில் வேலை பார்க்கும் போது கை மற்றும் மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதில் கார்பல் டன்னல் என்பது கையின் உள்ளங்கையில் எலும்புகள் மற்றும் தசைநார்கள் மூலம் சூழப்பட்ட ஒரு குறுகிய பாதையாகும். இந்த நரம்புகளில் அழுத்தங்கள் ஏற்படும் போது உணர்வின்மை, கூச்ச உணர்வு, கைவலி மற்றும் கைகளில் பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
டி குவெர்வின் டெனோசினோவிடிஸ்
இது ஒரு வலி மிகுந்த நிலையாகும். லேப்டாப்பின் அதிகமான பயன்பாடு கட்டை விரல் மற்றும் மணிக்கட்டு பகுதியை அதிகமாக பாதிக்கிறது. டி குவெர்வின் டெனோசினோவிடிஸ் என்பது மணிக்கட்டின் கட்டைவிரலின் பக்கவாட்டில் இயங்கும் மற்றும் கட்டைவிரலின் அடிப்பகுதியில் இருக்கும் பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள தசைநார்களில் வீக்கம் ஏற்படும் போது பிரச்சினை ஏற்படுகிறது. இது வலி மற்றும் உணர்வின்மை பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் கைகளை எளிதாக நீங்கள் அசைக்க முடியாது. இதனால் கட்டை விரலின் அடிப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
லேப்டாப் மற்றும் கணினியால் ஏற்படும் கை பாதிப்பை எப்படி தடுக்கலாம்?
கைகளை ரொம்ப கஷ்டப்படுத்தாதீர்கள்
உங்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போனை அதிகம் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் கை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறிது நேரம் உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை உங்கள் கைகளை நன்றாக நீட்டி ஓய்வெடுங்கள்.
வேலை இடத்தை சரியாக அமையுங்கள்
நீங்கள் பணிபுரியும் இடம் மிகவும் முக்கியமானது. அது உங்களுக்கு வசதியாகவும் செளகரியமாகவும் இருக்க வேண்டும். கை மற்றும் மணிக்கட்டு வலியை தடுக்க உங்கள் வேலைச் சூழலை நீங்கள் சரியான முறையில் அமைக்க வேண்டும்.
நீங்கள் வேலை பார்க்கும் கணினியின் கீபோர்டை முழங்கை உயரத்திற்கு வைக்க வேண்டும். அதே மாதிரி வேலை பார்க்கும் போது உங்கள் மணிக்கட்டை நேராகவும் தளர்வாகவும் செளகரியம் வாய்ந்ததாக வைக்க வேண்டும்.
உங்கள் தலை மற்றும் முதுகை நேராக நிமிர்ந்து நிலையில் வைத்து உட்கார வேண்டும்.
உங்கள் உடலில் இருந்து கணிணியின் திரையை 20 அங்குலங்கள் தொலைவில் வைக்க வேண்டும். உங்கள் கண் மட்டத்திற்கும் லேப்டாப் திரை சரியான அளவில் இருக்க வேண்டும்.
மணிக்கட்டுக்கான உடற்பயிற்சிகளை செய்யலாம்
எளிய மணிக்கட்டு உடற்பயிற்சிகள் கைகளில் உள்ள வலியை போக்க உதவுகிறது. மணிக்கட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. முதலில் உங்கள் கைகள் மற்றும் மணிக்கட்டுகளை லேசாக அசைத்துக் கொள்ளுங்கள். ஸ்பான்ஞ் வகை பந்தை கொண்டு கைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். களிமண்ணுடன் விளையாடுதல் போன்ற பயிற்சிகள் உங்கள் கைகளுக்கு நல்ல வலிமையை தரும்.
க்ஷீரபால தைலம் கொண்டு கை மசாஜ் செய்தல்
இந்த தைலத்தை கொண்டு நீங்கள் மசாஜ் செய்யும் போது கை வலியில் இருந்து நீங்கள் விடுபட முடியும். இந்த தைலத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் போன்றவை உள்ளன. உள்ளங்கைகள், மணிக்கட்டுகள் மற்றும் விரல்கள் இவற்றில் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து வரலாம். கீல்வாதம், கார்பல் டன்னல் சிண்ட்ரோம் அல்லது ஃபைப்ரோமியால்ஜியாவுடன் தொடர்புடைய கடுமையான வலியை இந்த மசாஜ் மூலம் போக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











