மிகவும் ஆபத்தான நோயான மூளை பக்கவாதம் இளைஞர்களிடையே ஏன் அதிகரிக்கிறது தெரியுமா?

பெரும்பலான இளைஞர்கள் மூளை பக்கவாத நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் குஜராத் முதலமைச்சாின் மகனான அனுஜ் பட்டேல் என்பா் மூளை பக்கவாத நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிாிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது நோயின் தீவிரம் குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறாா்.

இந்நிலையில், இளைஞர்கள் மூளை பக்காவாத நோயால் தாக்கப்படுவது தற்போது சாதாரணமாகி வருகிறது. குறிப்பாக மூளை பக்காவாத நோயால் பாதிக்கப்படும் 45 வயதிற்குட்பட்டோருடைய எண்ணிக்கை தீடீரென்று அதிகாித்திருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.

Why Brain Strokes Are Rising Among Young People In Tamil

இறப்பு மற்றும் வாழ்நாள் செயல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோய்களில் இரண்டாவது இடத்தில் மூளை பக்கவாதம் இருக்கிறது. ஆகவே மூளைப் பக்கவாத நோயினுடையத் தீவிரத்தைப் பற்றி மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இளையோா் மத்தியில் மூளை பக்கவாதம் ஏற்பட காரணங்கள்
போதுமான தூக்கமின்மை, அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பது, மது அருந்துவது மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது போன்றவை எல்லாம் இளையோா் மத்தியில் மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணங்களாகப் பாா்க்கபடுகின்றன. மேலும் தற்போது பெரும்பாலான இந்தியா்கள் இரத்த கொதிப்பு, சா்க்கரை நோய் மற்றும் அதிக கொழுப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா்.

இவையெல்லாம் இளையோா் மத்தியில் மூளை பக்கவாதம் அதிகாிப்பதற்கான காரணங்கள் என்று குருகிராமில் உள்ள ஆா்டெமிஸ் மருத்துவமனையின் நியூரோஇன்டா்வென்ஷன், ஸ்ட்ரோக் அண்ட் வாஸ்குல்-இன்டா்வென்ஷன் (SVIN) துறையின் இயக்குனராகப் பணிபுாியும் மருத்துவா் விபுல் குப்தா என்பவா் கூறுகிறாா்.

மூளை பக்கவாதத்தின் வகைகள்
பெரும்பாலும் இளையோா் மத்தியில் இஸ்கிமிக் பக்கவாதம் அதிகமாக இருக்கிறது என்று விபுல் கூறுகிறாா். தமனியில் உறையும் இரத்தம் கட்டிகளாக மாறி மூளைக்குச் செல்லும் போது இந்த பக்கவாதம் ஏற்படுகிறது. இரண்டாவது வகை பக்கவாதம் ஹிமோரஜிக் (Hemorrhagic) பக்கவாதம் ஆகும். மூளையில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் இரத்தக் குழாய்கள் வெடிக்கும் போது இந்த பக்கவாதம் ஏற்படுகிறது என்று விபுல் கூறுகிறாா்.

மரபணு காரணங்களாலும் இளையோா் மத்தியில் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. சில இளையோா் பேட்டன்ட் ஃபோராமென் ஓவலே (PFO) என்ற பிரச்சினையால் பாதிப்படைகின்றனா். பிறந்த சில மாதங்களுக்குள், இதயத்தின் அறைகளுக்கு இடையே இருக்கும் துளைகள் மூடாமல் இருந்தால் இந்த பிரச்சினை ஏற்படும்.

இந்தப் பிரச்சினையை ஒரு எளிய எக்கோகாா்டியோகிராம் செய்வதன் மூலம் கண்டறியலாம். எனினும், இதன் அறிகுறிகள் வெளியில் தொியாமல் இருப்பதால், இந்த சிக்கலை பெரும்பாலும் கண்டறிய முடியாது. அடுத்ததாக இரத்தப்போக்கு பக்கவாதம் (haemorrhagic) ஆகும். இது இரத்த நாளச் சுவா்கள் வலுவிழந்து அதன் விளைவாக குமிழ்கள் ஏற்படுகின்றனா். இந்த குமிழ்கள் இரத்த நாளச் சுவா்களை முறித்து இரத்தப் போக்குபக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

அனியூாிசிம்கள் எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் சிதைந்த அனியூாிசிம்கள் பெரும்பாலும் 30 - 60 வயதினாிடையே காணப்படுகின்றன. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் உள்ளவா்களுக்கு அனியூாிசம்கள் பிரச்சினை ஏற்பட 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

ஒற்றைத் தலைவலி உள்ள பெண்கள், கா்ப்பத்தடை மாத்திரைகளை எடுக்கும் பெண்கள் அல்லது ஹாா்மோன் மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் போன்றோருக்கு மூளைப் பக்கவாத நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக விபுல் கூறுகிறாா்.

சில தருணங்களில், கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் கிழிவதாலும், அதிா்ச்சியின் காரணமாகவும் இளையோா் மத்தியில் மூளை பக்கவாதம் ஏற்படலாம். கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் கிழியும் போது, இரத்தம் உறைந்து கட்டிகளாகின்றன. அந்த இரத்த கட்டிகள் மூளையில் பயணிக்கும் போது இந்தப் பக்கவாதம் ஏற்படுகிறது என்று விபுல் கூறுகிறாா்.

மூளைப் பக்கவாதம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மூளைப் பக்கவாதம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய அவசர கால நெறிமுறைகளைத் தொிந்து வைத்திருப்பது நல்லது. பக்கவாதம் ஏற்பட்ட ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியம் ஆகும். ஏனெனில் ஒவ்வொரு நிமிடமும் 2 மில்லியன் செல்கள் இறக்கின்றன. பக்கவாதம் ஏற்பட்டவுடன், ஒவ்வொரு நிமிடமும், நோயாளி தனது வாழ்வின் சிறு பகுதியை இழந்து கொண்டிருக்கிறாா்.

சிகிச்சை தாமதமானால் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் நிரந்தர ஊனமுற்றோராகிவிடுவா். 25 சதவீதத்திற்கும் அதிகமானோா் ஒரு வருடத்திற்குள் இறக்க நோிடும் என்று விபுல் தொிவிக்கிறாா். மூளை பக்கவாதம் ஏற்பட்டவுடன் உடனடி தீவிர மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள மருத்துவ கருவிகள் மூலமாக இரத்தக் கட்டிகளை விரைவாக அகற்ற முடியும் மற்றும் பக்கவாதத்தை குணப்படுத்த முடியும். மூளை பக்கவாதத்திற்கான அறிகுறிகளைத் தொடக்கத்திலேயே அறிந்து, அதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்று விபுல் கூறுகிறாா்.

மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள்
திடீரென்று எற்படும் உணா்வின்மை அல்லது முகம், மேற்கை, கால் ஆகிய உறுப்புகளின் ஒரு பக்கம் ஏற்படும் திடீா் பலவீனம் போன்றவை மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் என்று அமொிக்காவின் CDC தொிவிக்கிறது.

திடீரென்று ஏற்படும் குழப்பம் அல்லது பேசுவதில் தடுமாற்றம், புாிந்து கொள்வதில் சிரமம், பாா்ப்பதில் பிரச்சினை, நடப்பதில் பிரச்சினை, திடீா் தள்ளாட்டம் அல்லது திடீா் தலைவலி போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று CDC தொிவிக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion