Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
உங்களுக்கு இப்படி வியர்வை வருதா? அப்ப நீங்க இந்த ஆபத்தில் இருக்கீங்கனு அர்த்தமாம்... ஜாக்கிரதை...!
வியர்வை எப்போதும்நமது அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். ஆனால் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் காற்றழுத்தமானியாகவும் செயல்படுகிறது.
உடற்பயிற்சி, பதட்டம், ஹார்மோன் மாற்றங்கள், காரமான உணவுகள், மது, மருந்துகள் மற்றும் நோய்கள் போன்றவையும் வியர்வையை ஏற்படுத்தும். உங்கள் உடலின் வெப்பநிலை சராசரியை விட உயரத் தொடங்கும் போது அதை குறைத்து வெப்பநிலையை சமநிலையில் வைக்க உடலில் வியர்வை சுரப்பிகள் செயல்பட துவங்கும். இது உடலில் ஏற்படும் சாதாரண உடலியல் எதிர்வினையாகும், இது நம்மை நாமே சரி செய்து கொள்ள உதவுகிறது.

வியர்வையின் செயல்முறை
உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வியர்வை சுரப்பிகளை செயல்பட வைக்கிறது. வியர்வை சுரப்பிகள் உடலில் இருந்து பெரும்பாலும் தண்ணீர் மற்றும் சோடியம் போன்ற பிற தாதுக்களை உற்பத்தி செய்கின்றன, இறுதியில் தோலில் வியர்வைத் துளிகள் உருவாக இவை வழிவகுக்கிறது. வெப்பநிலையை குறைத்து குளிரூட்டும் செயல்முறையைத் தொடங்க தோலின் ஈரப்பதம் காற்றுடன் தொடர்பு கொள்கிறது.
வியர்வை உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வியர்வை, அதிக நன்மைகளை வழங்குகிறது, வியர்வை ஒரு வெப்பநிலை சீராக்கியாகவும் செயல்படுகிறது.
திடீரென அதிகமாக வியர்ப்பது புதிய அறிகுறியாக இருந்தால், ஏதாவது உடல்நல கோளாறு அதைத் தூண்டியிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. இது ஏன் ஏற்படுகிறது என்பதைத் தீர்மானிக்க மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. வியர்வை உங்களைப் பற்றியும் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றியும் சொல்லக்கூடிய சில விஷயங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
மன அழுத்தம்
எதையாவது பற்றியாவது அதிகமாக கவலைப்படும் போதோ அல்லது அதிக பதட்டத்தை உணரும் போதோ, வியர்வை சுரப்பிகள் அதிக வியர்வையை உண்டாக்கும்.
உடல்நல குறைபாடு
அவ்வப்போது வியர்வையுடன் ஏற்படும் துர்நாற்றம், மற்றும் உடல்நலனில் சிறிய மாற்றங்களை உணர்ந்தால், அது நீங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வியர்வைச் சுரப்பிகள் வியர்வை சுரப்பை அதிகரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்து உங்கள் உடல் உங்களை பாதுகாக்க முயற்சிக்கும் அறிகுறியாகும்.
கர்ப்பம்
ஹார்மோன் மாற்றங்கள், இரத்த ஓட்டம் அதிகரிப்பு மற்றும் கர்ப்ப காலத்தில் புதுப்பிக்கப்படும் வளர்சிதை மாற்றம் ஆகியவை வியர்வையை அதிகரிக்கலாம். ஒரு கர்ப்பிணி தாய் முதல் மூன்று மாதங்களுக்கு இரவில் வியர்வையால் ஏற்படும் சிரமங்களை அனுபவிக்க கூடும்.
உடலுக்கு சோடியம் தேவைப்படலாம்
அதிக உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வியர்வை உடலில் உப்பு போன்ற வெள்ளை நிற படிமத்தை ஏற்படுத்தும். இதனால் உடலுக்கு தேவையான சோடியம் பற்றாக்குறை ஏற்படலாம். வியர்க்கும்போது உடல் வெளியிடும் சோடியத்தின் அளவை ஈடுசெய்ய உணவில் சேர்க்கப்படும் சோடியம் அளவை அதிகரிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் சோடிய இழப்பின் அளவை நிரப்ப அதனை ஈடுசெய்யும் பானங்களை குடிக்க வேண்டியது அவசியம்.
காபியின் அளவை குறைக்கலாம்
காஃபின் குடிப்பது உடலின் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதோடு, இது வியர்வை சுரப்பிகளின் செயல்பாடுகளை அதிகப்படுத்தி வியர்வையை உண்டாக்கும். காபி குடிக்கும் போது இது போன்ற மாற்றங்களை கண்டால், அடுத்த கப் காபியைத் தவிர்க்கவும்.
உடல்நல குறைபாடு
இயல்பை விட அதிக அளவில் வியர்வை ஏற்படுவதற்கு நீரிழிவு, தைராய்டு செயலிழப்பு, இதய நோய் மற்றும் மாதவிடாய் போன்ற சில உடல்நல குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். வியர்வை மிகவும் தீவிரமாக ஏற்படுவது மேற்கண்ட ஏதாவது ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
காரணமின்றி அளவுக்கதிகமாக வியர்த்தல்
உடல்நல குறைபாடு அல்லது மன அழுத்தத்துடன் தொடர்பில்லாமல் முகம் அல்லது அக்குள் போன்ற இடங்களில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் எனப்படும் நிலை காரணமாக ஏற்படலாம். அதிர்ஷ்டவசமாக, இந்த நிலைக்கு மருந்துகள், எதிர்ப்பு மருந்துகள், போடோக்ஸ் ஊசி மற்றும் பிற வழிகள் மூலம் சிகிச்சையளிக்க முடியும். மிகவும் மோசமான சந்தர்ப்பங்களில், வியர்வை சுரப்பிகளையும் அகற்றலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
