Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஏலக்காய் நீரைக் குடிப்பதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
Cardamom Water Benefits In Tamil: நீண்ட நாள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நாம் உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். நாம் எப்படி சாப்பிடுகிறோமோ, அப்படி தான் நமது உடல் ஆரோக்கியமும் இருக்கும்.
குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் உணவுகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வெறும் வயிற்றில் சத்தான உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.

நம் வீட்டு சமைலறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஏலக்காய். இந்த ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும், ஃப்ளேவரையும் கொடுப்பது மட்டுமின்றி, செரிமானத்திற்கும் நல்லது.
இப்படிப்பட்ட ஏலக்காய் பாரம்பரியமாக நாட்டு மருத்துவத்தில் ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன.
இப்படிப்பட்ட ஏலக்காயை சமையலில் சேர்ப்பதைத் தவிர, காலையில் எழுந்ததும் அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலினுள் ஏராளமான அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? இப்போது ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
செரிமானம் மேம்படும்
செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்கள், காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக ஏலக்காய் நீரை வெறும் வயிற்றில் குடித்தால், அது செரிமான அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்றவற்றைத் தடுக்கும்.
நச்சுக்கள் வெளியேறும்
நீங்கள் உங்கள் உடலை சுத்தம் செய்ய ஒரு அற்புதமான பானத்தை தேடிக் கொண்டிருந்தால், ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். ஏலக்காயில் உள்ள டையூரிக் பண்புகள், உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவு புரிந்து, உடலை சுத்தம் செய்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மெட்டபாலிசம் மேம்படும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இப்படி குடிப்பதால், அந்நீர் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவி புரிந்து, விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த நீரை ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்
நீங்கள் கடுமையான வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் காலையில் ஏலக்காய் நீரை குடியுங்கள். இதனால் ஏலக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவி புரிவதோடு, வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சருமத்திற்கு நல்லது
சரும பிரச்சனைகளை சந்திப்பவர்கள், ஏலக்காய் நீரை தினசரி குடித்து வருவது நல்லது. ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தருகிறது.
இரத்த அழுத்தம் குறையும்
உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் நீரைக் குடித்து வருவது நல்லது. ஆய்வுகளின் படி, ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே ஹை பிபி இருப்பவர்கள், இந்த பானத்தைக் குடித்து வந்தால் பிபி-யை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
சுவாச ஆரோக்கியம் மேம்படும்
ஏலக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இந்த ஏலக்காய் நீரை மழைக்காலத்தில் காலையில் குடித்து வந்தால், அது தொண்டை கரகரப்பு, வறட்சி போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications