Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
காலையில் ஒரு கையளவு ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Soaked Groundnuts Benefits In Tamil: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தான் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைக்கும் பலர் பாதாம், முந்திரி, வால்நட்ஸ், உலர் திராட்சை, வெந்தயம் போன்ற உணவுப் பொருட்களை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறார்கள். இப்படி நட்ஸ்கள், விதைகள் போன்றவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
நட்ஸ்களில் வேர்க்கடலை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. பொதுவாக வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த வேர்க்கடலையை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, உடலில் பலவித அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா?

ஆம், வேர்க்கடலையையும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவது பல நன்மைகளை வழங்கும். இப்போது வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
தினமும் வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக இதய நோய்களின் அபாயம் குறைகிறது.
மூளையின் செயல்பாடு மேம்படும்
நீரில் ஊற வைத்த வேர்க்கடலையில் நியாசின், ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கும். இது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள நியாசின் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் நரம்பியக்கடத்தி உற்பத்திக்கு உதவி புரிகிறது. எனவே மூளை சுறுசுறுப்பாக செயல்பட மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க விரும்பினால், ஊற வைத்த வேர்க்கடலையை உட்கொள்ளுங்கள்.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
வேர்க்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. எனவே சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலையை அச்சமின்றி சாப்பிடலாம். அதுவும் வேர்க்கடலையை ஊற வைத்து சாப்பிடும் போது, இரத்த சர்க்கரை அளவு குறையும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவும்
வேர்க்கடலையில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. அதுவும் தினமும் நீரில் ஊற வேர்க்கடலையை உட்கொண்டு வரும் போது, மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
உடல் எடை கட்டுப்படும்
பொதுவாக நட்ஸ்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது. இப்படி வயிறு நிரம்பி இருப்பதால் அநாவசியமாக ஜங்க் உணவுகளை உட்கொள்வது தடுக்கப்பட்டு, உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
புற்றுநோய் தடுக்கப்படும்
வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதோடு, புற்றுநோயின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது. முக்கியமாக ஊற வைத்த வேர்கடலையை உட்கொண்டு வந்தால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆய்வுகளில் கூட, வாரத்திற்கு 3 முறை ஊற வைத்த வேர்க்கடலையை உட்கொண்டு வருவது, 58 சதவீதம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications