Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
இந்த பிரபலமான பொருட்களை காலை உணவாக ஒருபோதும் சாப்பிட்ராதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!
Foods that must be avoided in breakfast: காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. காலை உணவுதான் நம் உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். காலை உணவை ஒருபோதும் தவறவிடக்கூடாது என்றும் மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.
தற்போதைய பரபரப்பான வாழ்க்கையில் காலை உணவை சமைக்க வேலைக்கு செல்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலான மக்கள் காலை உணவாக உடனடியாக சாப்பிடக்கூடிய துரித உணவை சாப்பிடுகிறார்கள்.

ஆனால், இந்த இன்ஸ்டன்ட் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? இந்த இன்ஸ்டன்ட் உணவுகளில் சில ஆரோக்கியமான உணவுகளாகக் கூட இருக்கும், ஆனாலும் அவை தவிர்க்கப்பட வேண்டியவை. ஆரோக்கியமான, ஆனால் காலை உணவில் தவிர்க்கப்பட வேண்டிய பிரபலமான உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிர்
தயிரில் புரோட்டின் மற்றும் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளது. ஆனால், காலையில் எழுந்தவுடன் தயிர் சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேதத்தில், வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது நிச்சயமாக தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அது நம் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது. எனவே இனிமேல் வெறும் வயிற்றில் ஒருபோதும் தயிர் சாப்பிடாதீர்கள்.
சிட்ரஸ் பழங்கள்
காலை உணவில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் சிட்ரஸ் பழங்களை காலை உணவில் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், வாயு மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும்.
வெள்ளை பிரட்
பெரும்பாலான மக்களின் காலை உணவில் வெள்ளை ரொட்டி ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. பிரெட் மிதமான காலை உணவுக்கு ஒரு எளிய மற்றும் சிறந்த வழியாக இருக்கலாம், ஆனால் காலை உணவாக அதனை சாப்பிட வேண்டாம். வெள்ளை ரொட்டி மாவு மற்றும் குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்டது.
சர்க்கரை உணவுகள்
வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் இனிப்பு சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது நீரிழிவு நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் காலை உணவில் சர்க்கரை பானங்களை சேர்க்கவே கூடாது.
கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்
வேலைக்குச் செல்பவர்களுக்கு காலையில் உணவு தயாரிக்க நேரம் இருப்பதில்லை. அத்தகையவர்கள் கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை நோக்கி செல்கிறார்கள். ஆனால் இதில் உள்ள சோடியத்தின் அளவு இரத்த அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கச் செய்யும். தொடர்ச்சியாக இதனை உட்கொள்வது உங்கள் இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
