Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த பழக்கங்கள் இருக்கும் இளைஞர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரும் ஆபத்து ரொம்ப அதிகமாம்...ஜாக்கிரதை!
பெருங்குடல் புற்றுநோயானது இளைய தலைமுறையினரிடையே கடுமையான விகிதத்தில் அதிகரித்து வரும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாக மாறிவருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவேட்டின் படி, இது ஆண்களுக்கு பொதுவான புற்றுநோய்களில் மூன்றாவதாகவும் மற்றும் பெண்களுக்கு பொதுவான புற்றுநோய்களில் இரண்டாவதாகவும் உள்ளது.

இந்த நிலை பெருங்குடலைப் பாதிக்கிறது மற்றும் புற்றுநோயற்ற உயிரணுக்களின் சிறிய தொகுப்பாக தொடங்குகிறது, இது காலப்போக்கில் புற்றுநோயாக மாறும். சமீப காலங்களில், இளைஞர்களிடம் இந்த புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது. இளம் வயதினருக்கு பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய சில ஆபத்து காரணிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் பருமன்
அதிக எடையுடன் இருப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் பருமன் உடலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும், இவை இரண்டும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும்.
குடும்ப பின்னணி
பெருங்குடல் புற்றுநோய் அல்லது பாலிப்களின் குடும்ப வரலாற்றைக் கொண்ட இளைஞர்களுக்கு இந்த அபாயகரமான புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எந்தவொரு நேரடி உறவினருக்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஆபத்து மேலும் அதிகமாகும்.
குடல் அழற்சி நோய்
அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற குடல் அழற்சி நோய் உள்ளவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். குடல் அழற்சி நோய் காரணமாக ஏற்படும் நாள்பட்ட செரிமானப் பாதை அழற்சியானது அசாதாரண மற்றும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
உடல் செயல்பாடுகளில் குறைபாடு
உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை உட்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளை இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். உடல் செயல்பாடுகள் அல்லது உடற்பயிற்சி ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள டிஎன்ஏ-வை பழுதுபார்க்கும் பணியை இவை செய்கிறது. இதில் குறைபாடு ஏற்படும் போது அது புற்றுநோய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்
மோசமான உணவு, அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
புகைப்பிடித்தல்
புகைபிடிக்கும் போது உள்ளிழுக்கும் இரசாயனங்கள் டிஎன்ஏவை அழித்து, ஆரோக்கியமான செல்களை அழிக்கின்றன. இந்த இரசாயனங்கள் பெரிய குடலில் முன்கூட்டிய பாலிப்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இது நாளடைவில் புற்றுநோயாக உருவாகலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


