Just In
- 39 min ago
இந்த 5 ராசிக்காரங்க நாடி நரம்பு ரத்தத்துல தேசபக்தி ஊறிப்போயி இருக்குமாம்... உங்க ராசி என்ன?
- 56 min ago
மலச்சிக்கலைப் போக்கி குடல்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஜூஸ்கள்!
- 1 hr ago
18 வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்ட இந்தியாவின் இளம் புரட்சியாளர் யார் தெரியுமா?
- 8 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிகப்படியான கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...
Don't Miss
- News
இருட்டுக் கடை அல்வா முதல் பார்டர் பரோட்டா வரை.. சென்னையில் உணவுத் திருவிழா! பீஃப் பிரியாணி நஹி!
- Finance
ஒரே ஒரு செங்கல்... துபாய் இளவரசரிடம் இருந்து பாராட்டு.. ஆச்சரியத்தில் டெலிவரி ஏஜெண்ட்
- Sports
கேஎல் ராகுலுக்கு ஜிம்பாப்வே தொடர் ஏன் முக்கியம்? காத்திருக்கும் சவால்கள் என்ன? கடைசி வாய்ப்பு
- Movies
விருமன் பட கொண்டாட்டம்.. அடுத்தடுத்து ட்வீட் செய்த சூர்யா -கார்த்தி!
- Automobiles
செம்மையா விற்பனையாகும் டாடா கார்... இந்த உண்மையை தெரிஞ்சவங்க இந்த காரை வாங்காம இருக்க மாட்டாங்க!
- Technology
செம ஸ்டைலான Redmi கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
- Travel
தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் இருக்கிறீர்களா? இந்த நீண்ட வார இறுதியை சரியாக திட்டமிடுங்கள்!
இந்த 5 உணவுகள் உங்க சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்...!
நம் உடலிலுள்ள மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். உடல் செயல்பாடுகளில் சிறுநீரகங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இருப்பினும், நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் எவ்வளவு சிந்திக்கிறோம் அல்லது கவலைப்படுகிறோம்? அவ்வாறு செய்யாமல், எதிர்காலத்தில் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறோம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும், இது உடலிலிருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அவை நமது இரத்தத்தில் உள்ள நீர், உப்புகள் மற்றும் தாதுக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. இது நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். இருப்பினும், ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுகளைக் கொண்ட முறையற்ற வாழ்க்கை முறை உங்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கலாம். நீங்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய சில உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பன்றி இறைச்சி, தொத்திறைச்சி, ஹாட் டாக் மற்றும் பர்கர் பஜ்ஜி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. அவற்றில் அதிக சோடியம் உள்ளது. அதிகப்படியான சோடியம் தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். தாவர புரதத்தை விட அதிக விலங்கு புரதத்தை உட்கொள்வது சிறுநீரக நோயின் வளர்ச்சியின் விகிதத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

சோடா
சோடாக்களில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் உள்ளது மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு துளியும் இல்லை. இவை உங்கள் உணவில் கூடுதல் கலோரிகளை சேர்க்கின்றன. இதன் விளைவாக உங்கள் எடை அதிகரிக்கும். சோடாக்களை உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும்), சிறுநீரக நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் பல் பிரச்சனைகள் போன்ற சுகாதார நிலைமைகளுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எந்த நிலையிலும் சோடாவைத் தவிர்த்துவிட்டு, குடிநீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்ற ஆரோக்கியமான சுவையுள்ள பானங்களுக்கு மாறுங்கள்.

உறைந்த உணவுகள்
உறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வகை 2 நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வகை உணவுகளில் கொழுப்பு, சர்க்கரை அல்லது சோடியம் நிறைந்திருக்கும். எப்பொழுதும் புதிதாக செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள். உறைந்த உணவுகளைத் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் உறைந்த உணவை உண்ண வேண்டும் என்றால், லேபிளில் "குறைந்த சோடியம்" அல்லது "சோடியம் சேர்க்கப்படவில்லை" என்று எழுதப்பட்டவற்றைத் தேர்வுசெய்யவும். உங்கள் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலமும் இவற்றைச் சமப்படுத்த முயற்சி செய்யலாம்.

வறுத்த உருளைக்கிழங்கு
நீங்கள் சிப்ஸ் போன்ற பாக்கெட்டுகளில் தொகுக்கப்பட்ட உணவுகளில் இருந்து உருளைக்கிழங்கை உட்கொண்டால், அது உங்களுக்கு எந்த நன்மையையும் வழங்காது. மாறாக, இந்த வறுத்த உருளைக்கிழங்கு உங்கள் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகங்களை நோய்களில் இருந்து பாதுகாக்க அதிகமாக வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. எனவே, நீங்கள் ஏற்கனவே சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அதைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.

மயோனைஸ்
சாலடுகள் அல்லது சாண்ட்விச்களுடன் நீங்கள் சாப்பிடும் மயோனைஸ் உங்கள் ஆரோக்கியமான காய்கறிகள் நிரம்பிய உணவின் மதிப்பை மோசமாக்கலாம். ஒரு தேக்கரண்டி மயோனைஸ் 103 கலோரிகளைக் கொண்டுள்ளது. அதனுடன், மயோவில் பொதுவாக நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. மீண்டும், நீங்கள் அதைத் தவிர்க்க வழி இல்லை என்றால், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கலோரி மயோனைஸை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இதில் சோடியம் மற்றும் சர்க்கரை அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். மயோனைஸுக்கு பதிலாக ஆரோக்கியமான தயிரைச் சேர்த்துக் கொள்வது நல்லது.