Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
World Blood Donor Day 2022: யாரெல்லாம் இரத்த தானம் செய்யக்கூடாது தெரியுமா?
தானம் செய்யப்பட்ட இரத்தத்தின் பற்றாக்குறை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதால், ஒருவருவரும் தாம் அதற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உலக இரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்துவதில் கவனம் செலுத்தப்டுகிறது. இந்த நாள் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் "இரத்த தானம் செய்வது ஒற்றுமையின் செயல். இம்முயற்சியில் இணைந்து உயிரைக் காப்பாற்றுங்கள்" என்பதாகும்.

தானம் செய்யப்பட்ட இரத்தம் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆதரவளிக்கவும் உதவுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இரத்த தானம் செய்வதற்கான முக்கியத்துவமும் அவசரமும் கணிசமாக அதிகரித்துள்ளது. தானம் செய்யப்பட்ட இரத்தத்தின் பற்றாக்குறை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதால், ஒருவருவரும் தாம் அதற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இப்போது இக்கட்டுரையில் யாரெல்லாம் இரத்த தானம் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

யாரெல்லாம் இரத்த தானம் செய்ய முடியாது?
ஒருவர் இரத்தத்தை தானம் செய்ய விரும்பும் அளவுக்கு, உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள தேவைகளை அறிந்து கொள்வது அவசியம். தகுதியற்ற ஒருவரிடம் இருந்த எடுக்கப்படும் இரத்தத்தை, நோயாளி ஒருவருக்கு உட்செலுத்தும் போது, அது நோயாளியின் ஆரோக்கியத்தை மோசமாக்கும். எனவே யார் இரத்த தானம் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இப்போது இரத்த தானம் செய்ய ஒருவர் தகுதியற்றவராக இருப்பதற்கான சில காரணங்கள் குறித்து காண்போம்.

சமீபத்தில் இரத்தம் தானம் செய்தவர்
இரத்தத்தை தானம் வழங்க நினைப்பவர் 2 மாதங்கள் அல்லது 56 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே இரத்த தானம் செய்ய வேண்டும். தானமாக வழங்குபவர் நல்ல ஆரோக்கியத்துடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதும் அவசியம் அல்லவா!

கர்ப்பிணி
கர்ப்பிணி பெண்கள் இரத்த தானம் செய்ய தகுதியற்றவர்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் கர்ப்பிணிகள் இரத்த தானம் செய்தால், அது இரும்புச்சத்து குறைபாட்டின் அபாயத்தை மேலும் அதிகரிக்கலாம்.

புதிய துளையிட்டிருந்தால்...
நீங்கள் கடந்த 3 மாதங்களில் உடலில் எங்கேனும் துளையிட்டிருந்தால், அதாவது மூக்கு குத்துவது, தொப்புளில் வளையம், நாக்கில் வளையம் என்று செய்திருந்தால், அவர்களும் இரத்த தானம் செய்வதற்கு தகுதியற்றவராக இருக்கலாம்.

காய்ச்சல் அல்லது சளி
காய்ச்சல் அல்லது சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களும் இரத்த தானம் செய்ய தகுதியற்றவராக இருக்கலாம். இருப்பினும், உடல் நிலை சரியான பின்னர், இத்தகையவர்கள் இரத்தம் தானம் செய்யலாம்.

புதிய டாட்டூ
உடலில் துளையிடுவது போன்றே, கடந்த 3 மாதங்களில் உடலில் புதிய டாட்டூக்களை குத்தியிருந்தால், அத்தகையவர்களும் இரத்த தானம் செய்ய தகுதியற்றவர்களாவர். எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.

எடை குறைவு
நீங்கள் மிகவும் எடை குறைவுடன் இருந்தால், அதாவது 50 கிலோவிற்கு குறைவான எடையில் இருந்தால், இரத்த தானம் செய்ய ஊக்குவிக்கப்படுவதில்லை. இம்மாதிரியான நிலையில் உள்ளவர்கள் இரத்த தானம் வழங்கினால், அது அவரின் ஆரோக்கியத்திற்கு தான் தீங்கு விளைவிக்கும்.

வயது
17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இரத்த தானம் செய்ய தகுதியானவர்கள். இந்த வயதிற்கு பின் எந்த வயதுடையவர்களும் இரத்த தானம் செய்யலாம். ஆனால் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இரத்த தானம் செய்யக்கூடாது.

உயர்/தாழ் இரத்த அழுத்த பிரச்சனை
ஒருவேளை உயர் இரத்த அழுத்தம் அல்லது தாழ் இரத்த அழுத்தம் கொண்டிருந்தால், அத்தகையவர்கள் இரத்த தானம் செய்ய தகுதியற்றவர்களாவர். குறிப்பாக தாழ் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இரத்த தானம் செய்தால், அவர்களின் உடல்நிலை மோசமாகலாம்.

காசநோய்/டிபி
செயலில் உள்ள காசநோயால் பாதிக்ககப்பட்டிருந்தால், இரத்த தானம் செய்ய தகுதியற்றவராக இருக்கலாம். ஏனெனில் காசநோயாளிகளின் உடலில் இருந்து பெறப்படும் இரத்தம் மற்றொருவரின் உடலுக்குள் எளிதில் செல்ல வாய்ப்புள்ளது.

எய்ட்ஸ்
காசநோய் போன்றே எய்ட்ஸ் நோயாளிகளும் இரத்த தானம் செய்ய தகுதியற்றவர்களாவர். ஏனென்றால், இரத்த தானம் செய்பவரின் உடலில் உள்ள எய்ட்ஸ் கிருமிகள் இரத்தத்தைப் பெறுபவரின் உடலுக்குள் எளிதில் செல்லலாம்.
எனவே இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் இரத்த தானம் செய்ய தகுதியுள்ளவரா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு பின் இரத்த தானம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











