Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
காலையில் எழுந்ததும் ஏன் வெறும் வயிற்றில் காபி குடிக்கக்கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?
பலருக்கும் காலையில் எழுந்ததும் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். காபியைக் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். காபியில் உள்ள காப்ஃபைன் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றதல்ல.
பலருக்கும் காலையில் எழுந்ததும் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இரவு போதுமான ஓய்வை எடுத்த பின், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க பலரும் காபியையே தேர்ந்தெடுப்பர். ஆனால் பெட் காபி குடிப்பது நல்ல பழக்கம் அல்ல.
பொதுவாக காபியைக் குடிப்பதால் உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் தசை வலி 48% குறைவது, அல்சைமர் நோயின் அபாயம் குறைவது மற்றும் மன இறுக்கத்தால் உண்டாக்கும் தற்கொலை எண்ணங்கள் குறைவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

ஆனால், காபியில் காப்ஃபைன் என்னும் பொருள் உள்ளதால், இது வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. நீங்கள் தினமும் எழுந்தவுடன் ஒரு கப் காபியுடன் தான் அந்நாளை தொடங்குவீர்கள் என்றால், இக்கட்டுரையைத் தவறாமல் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே ஒருவர் வெறும் வயிற்றில் காபியைக் குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அஜீரண கோளாறு
காபியை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, முதலில் அது செரிமான மண்டலத்தில் தனது விளையாட்டைக் காண்பிக்கும். வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது, அது வயிற்றில் அமில உற்பத்தியை தூண்டிவிடும். நீங்கள் ஏற்கனவே ஏதாவது சாப்பிடாமல் நேரடியாக காபியைக் குடித்தால், அந்த அமிலம் வயிற்றின் சுவற்றில் சேதத்தை விளைவித்து, அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

கார்டிசோல் அளவு குறையும்
காபியை காலையில் எழுந்தவுடனேயே வெறும் வயிற்றில் குடிப்பது, உங்கள் சர்க்காடியன் தாளத்தை நாசப்படுத்தக்கூடும். பொதுவாக உடலானது காலையில் கார்டிசோல் என்ற ஹார்மோனை இயற்கையாக வெளியிடுகிறது. இது தான் உங்களை எச்சரிக்கையாகவும், ஆற்றலுடனும் இருக்க வைக்கிறது. வேண்டுமானால் மதிய வேளையில் ஒரு கப் காபியைக் குடியுங்கள். இதனால் உங்கள் கார்டிசோல் அளவு நிலையானதாக இருக்கும்.

சத்துக்களை வெளியேற்றும்
காலையில் எழுந்ததுமே ஒரு கப் காபியை வெறும் வயிற்றில் குடித்தால், அது உடலில் உள்ள பல்வேறு முக்கியமான கனிமச்சத்துக்கள் சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். பொதுவாக காபி உடலில் இருந்து கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை வெளியேறுவதை அதிகரிக்கும். எனவே தான் அதிகளவு காபியைக் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கவலை
காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது, செரடோனின் செயல்முறையை சரியாக நடத்தும் மூளையின் திறன் குறையும். செரடோனின் என்பது ஒரு மகிழ்ச்சியை அளிக்கும் ஹார்மோன். எப்போது மூளையால் இந்த ஹார்மோனை சரியாக செயல்படுத்த முடியவில்லையோ, அப்போது மனதில் கவலை மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படுகிறது. அதிலும் வெறும் வயிற்றில் காபியைக் குடிக்கும் போது, உடலின் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் அளவு அதிகரிப்பதன் மூலம் மன கவலை இன்னும் அதிகரிக்கிறது. அதோடு உங்களை பதற்றமாகவும், பலவீனமாகவும் உணர வைக்கும்.

உடல் வறட்சி
காபியை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலில் இருந்து அதிகப்படியான நீர் சிறுநீரின் வழியே வெளியேறி, உடல் வறட்சிக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் தினமும் போதுமான நீரைப் பருகியும் உடல் வறட்சியை ஏற்படுகிறது என்றால், அது காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் காபி தான் காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பசியின்மை
காலையில் எழுந்ததும் முதல் வேளையாக காபியைக் குடிக்கும் பழக்கம் இருந்தால், காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டுமென்ற எண்ணமே எழாது. ஏனெனில் காபி பசியுணர்வைக் கட்டுப்படுத்திவிடும். அதனால் தான் காபி உடல் எடைக் குறைப்பில் ஒரு முக்கிய பொருளாக விளங்குகிறது. ஒருவர் காபியை ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மட்டும் குடிக்கக்கூடாது.

நச்சுக்கள் வெளியேறுவதைத் தடுக்கும்
காபியை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது கல்லீரலின் வழக்கமான செயலான நச்சுக்களை அகற்றும் பணி கடினமாக்கப்படும். இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டு, உடலிலேயே தேங்க ஆரம்பித்து, உடலின் ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

உயர் இரத்த சர்க்கரை அளவு
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் காபியானது, இன்சுலின் உணர்திறனைக் குறைத்து, உடல் செல்கள் இரத்த சர்க்கரைக்கு சரியான முறையில் பதிலளிப்பதைக் கடினமாக்கி, தமனி பிரச்சனைகள் மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கும் இதய நோய்க்கு வழிவகுக்கிறது.

எப்போது காபி குடிப்பது நல்லது?
காபி குடிப்பதற்கான சரியான நேரத்தை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீங்கள் ஒரு நல்ல ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட்டால், காலை 10 மணி முதல் நண்பகல் வரை எப்போது வேண்டுமானாலும் காபியை எவ்வித அச்சமின்றி குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications