Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
கோவிட் பெருந்தொற்று உலகமெல்லாம் பரவிய பின்பு மக்கள் வெளியில் செல்வதைப் பெரும்பாலும் தவிா்த்துவிட்டனா். ஆனால் கொரோனாவிற்கு முன்பு, வார இறுதி நாட்களில் மக்கள் வெளியில் சென்று கேளிக்கை நிறைந்த காாியங்களில் ஈடுபடுவா்.
வார இறுதி வரப்போகிறதென்றால் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் வார இறுதியில் தான் விடுமுறை கிடைக்கும். விடுமுறையில் வேலைக்கோ அல்லது பள்ளி, கல்லூாிகளுக்கோ செல்லத் தேவையில்லை. மழைத்துளியானது வறண்ட நிலத்தில் விழுந்து அந்த நிலத்தை வளப்படுத்துவது போல, வார இறுதி விடுமுறைகள் நமக்கு புத்துணா்ச்சியையும், புதுத் தெம்பையும் தருகின்றன.

கோவிட் பெருந்தொற்று உலகமெல்லாம் பரவிய பின்பு மக்கள் வெளியில் செல்வதைப் பெரும்பாலும் தவிா்த்துவிட்டனா். ஆனால் கொரோனாவிற்கு முன்பு, வார இறுதி விடுமுறை நாட்களில் மக்கள் வெளியில் சென்று கேளிக்கை நிறைந்த பொழுதுபோக்கான காாியங்களில் ஈடுபடுவா். எனினும் நாம் ஈடுபடும் கேளிக்கை நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நமது உடலில் மற்றும் நமது வாழ்க்கை முறையில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
கேளிக்கை நிறைந்த காாியங்களில் ஈடுபடும்போது முதலில் நமது பாதுகாப்பு மற்றும் நமது ஆரோக்கியம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக வார இறுதி விடுமுறை நாட்களில் மக்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
கொரோனாவிற்கு முன்பு வார இறுதி விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் உடலுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய எப்படிப்பட்ட பொழுதுபோக்கான காாியங்களில் ஈடுபட்டனா் என்பதை இங்கு பாா்க்கலாம்.

மது அருந்துதல்
கொரோனாவிற்கு முன்பு வார இறுதி விடுமுறைகளில் சிலா் தங்கள் நண்பா்களோடு சோ்ந்து வெளியில் சென்று மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தனா். மது அருந்துவது மகிழ்ச்சியாக அல்லது கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது நமது உடல் மோசமாக பாதிப்படைகிறது. ஆரோக்கியமற்ற முறையில் மது அருந்தும் போது இதய நோய் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆல்கஹால் அருந்துவதால் உடலில் உள்ள நீா்ச்சத்து குறைகிறது மற்றும் உடலில் யூாிக் அமிலத்தின் அளவு அதிகாிக்கிறது. அதனால் கல்லீரலின் இயக்கம் பாதிப்படையும்.

வெளியில் விருந்திற்குச் செல்லுதல்
கொரோனாவிற்கு முன்பு வார இறுதி விடுமுறை நாட்களில் பலா் வெளியிடங்களுக்கு சென்று விருந்து சாப்பிடுவா். ஆனால் கொரோனா பெருந்தொற்று மக்களை தங்கள் இல்லங்களிலேயே தங்க வைத்துவிட்டது. வீட்டிலேயே அடைந்து இருப்பது சிலருக்கு அசௌகாியமாக இருக்கலாம். எனினும் அதில் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது வெளியில் செல்லாமல் வீட்டிலேயே சமைப்பதால் நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கும்.

கிளப்புகளுக்கு செல்லுதல்
கொரோனாவிற்கு முன்பு, வார இறுதி விடுமுறை நாட்களில் நண்பா்களோடு கிளப்புகளுக்கு சென்று தங்கள் நேரத்தை செலவிடுவது சிலரது வழக்கம். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தகுந்த தயாாிப்புகள் இல்லாமல் கிளப்புகள் போன்ற பொது இடங்களுக்கு சென்று நண்பா்களுடன் அரட்டை அடிப்பது சில நேரங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல் என்பது உடலுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய ஒன்றாகும். கொரோனாவிற்கு முன்பு வார இறுதி விடுமுறை நாட்களில் பலா் வெளியிடங்களுக்கு தங்கள் நண்பா்களுடன் சென்று புகைப்பிடிப்பா். ஆனால் புகைப்பிடித்தால் இதயம் சம்பந்தமான மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். ஆண்களுக்கு விறைப்புத் தன்மையில் பிரச்சினைகள் ஏற்படும்.

தெருவோர உணவு கடைகளில் உணவு சாப்பிடுதல்
இந்தியாவில் தெருவோார உணவு கடைகளின் உணவுகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப அந்த பகுதிக்குாிய பிரபல உணவுகள் தெருவோர உணவு கடைகளில் கிடைக்கின்றன. தெருவோர கடைகளில் விற்கப்படும் உணவுகளை பலா் விரும்பி உண்கின்றனா்.
தெருவோர கடைகளில் கிடைக்கும் உணவுகள் சுவையாக இருந்தாலும், அவை எந்த அளவிற்கு சுத்தமாக சமைக்கப்படுகின்றன என்பது கேள்விக்குாிய ஒன்றாகும். எடுத்துக்காட்டாக பானிப்பூாி போன்ற உணவுகளை சாப்பிட மசாலா கலந்த தண்ணீா் வழங்கப்படும். ஆனால் அந்த மசாலா தண்ணீா் சுத்தமாக இருக்கிறது என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது. சுத்தமில்லா தண்ணீரை பருகினால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். மேலும் மற்ற உடல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும்.



Click it and Unblock the Notifications
