Latest Updates
-
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா? உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்... உடனே மருத்துவரை பாக்கணுமாம்!
தசையில் தாங்க முடியாத வலி, அதிக அளவு கழிவு நச்சுகள் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற தாதுக்களின் அளவு காரணமாக சிறுநீரகங்களால் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த முடியாது.
உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகம் போன்ற உடலின் முக்கிய உறுப்புகளை தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற சிறுநீரகத்தின் பல எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. அவை நுட்பமானவை அல்லது தீவிரமானவை என்பதைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கக்கூடாது. சிறுநீரகங்கள் உடலின் இரட்டை உறுப்புகளாகும், அவை இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன, உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்றுகின்றன. மனித உடலின் முழு இரத்தமும் ஒரு நாளைக்கு சுமார் 40 முறை சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது.

சிறுநீரகத்தின் உள்ளே பல முக்கியமான உயிரியல் செயல்பாடுகள் இருப்பதால், அவற்றின் செயலிழப்புக்கான அறிகுறிகளைக் கண்டறிவது இன்றியமையாதது. இதனால் நோய் அல்லது தொற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே சரிபார்க்கப்படும். சிறுநீரக பாதிப்பால், எந்தெந்த பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

சோர்வாக இருப்பது
சமீப நாட்களில் நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால், உங்கள் உடலில் நச்சுகள் உருவாகி இருக்கலாம். இதனால் உங்களுக்கு உடல் சோர்வு அதிகமாக ஏற்படலாம். நச்சுகள் உங்கள் உடலின் மற்ற உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கும் மற்றும் இரத்தத்தில் அசுத்தங்கள் இருப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

போதுமான தூக்கமில்லை
இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், சிறுநீரக நோயும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஸ்லீப் மூச்சுத்திணறல் அல்லது நல்ல அளவு தூக்கத்தை பெற முடியாமல் இருப்பது சிறுநீரக நோய்களுடன் மிகவும் தொடர்புடையது. நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

சரும பிரச்சனைகள்
வறண்ட, செதில்களாக மற்றும் அரிக்கும் தோல் போன்ற சரும பிரச்சனைகளை எந்த காரணமும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் சிறுநீரகங்களை பரிசோதிக்கவும். இரத்தத்தில் இருந்து நச்சுகளை அகற்றும் போது, சிறுநீரகங்கள் ஆரோக்கியமான சருமத்தையும் ஊக்குவிக்கிறது. நச்சுகள் குவிவது உடலில் உள்ள தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவைத் தொந்தரவு செய்யும், இது தோல் மற்றும் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

வீங்கிய பாதங்கள்
ஒரு ஆரோக்கியமற்ற சிறுநீரகம் உடலில் இருந்து நச்சுகளை முழுவதுமாக அகற்ற முடியாது. இதன் விளைவாக இந்த நச்சுகள் உடலில் குவிந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல, சோடியத்தின் கூடுதல் அளவு உடலில் இருந்து அகற்றப்படாவிட்டால், அது பாதங்கள், கணுக்கால் மற்றும் கால்களில் குவிந்து வீக்கமடைகிறது. கால்களின் வீக்கத்திற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வீக்கம் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

கண்களைச் சுற்றி வீக்கம்
உங்கள் கண்களைச் சுற்றி வீக்கத்தை நீங்கள் கவனித்தால், உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பரிசோதிக்கவும். சோடியம் படிதல் கால்கள் வீக்கத்தை ஏற்படுத்தும் போது, சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிறுநீரில் புரதங்கள் அகற்றப்படும் போது கண்கள் வீங்கிவிடும்.

தசை வலி
தசையில் தாங்க முடியாத வலி, அதிக அளவு கழிவு நச்சுகள் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற தாதுக்களின் அளவு காரணமாக சிறுநீரகங்களால் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த முடியாது. தசை வலிகளை இலகுவாகக் கையாளக்கூடாது. மேலும் இது பல அடிப்படை நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

சரியாக சுவாசிக்க இயலாமை
சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும் போது, நோயாளியால் சரியாக சுவாசிக்க முடிவதில்லை. இது எரித்ரோபொய்டின் எனப்படும் ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். ஹார்மோன்கள் உங்கள் உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கு சமிக்ஞை செய்கின்றன. அது இல்லாமல், நீங்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படலாம் மற்றும் மூச்சுத் திணறலை அனுபவிக்கலாம்.

சிறுநீர் கழிக்கும் அதிர்வெண்ணில் மாற்றம்
சிறுநீர் கழிக்கும் அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் பலர் சிறுநீரக நோயை யூகிக்கிறார்கள். கடந்த சில நாட்களில் உங்கள் சிறுநீர் கழித்தல் வழக்கமான அதிர்வெண்ணில் இருந்து அதிகரித்து அல்லது குறைந்திருந்தால், தாமதிக்க வேண்டாம், உடனே மருத்துவரை அணுகவும். சரியான நேரத்தில் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்வது, பெரிய உடல்நல பிரச்சனையில் இருந்து உங்களை காப்பாற்றும்.



Click it and Unblock the Notifications
