For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெப்பசோர்வால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?உங்களின் இந்த செயல்கள் இதனை தூண்டுமாம்

வெப்பச்சோர்வு என்பது உங்கள் உடல் அதிக வெப்பமடையும் போது அது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பதோ அல்லது குளிர்விக்கவோ முடியாத நிலையாகும்.

|

அனைவருக்குமே உடல் சூடு என்பது இயற்கையாக இருக்கும். நமது உடலில் குறிப்பிட்ட அளவு வெப்பம் எப்பொழுதும் இருக்க வேண்டும் அதுதான் நமக்கு ஆரோக்கியமானதும் கூட. ஆனால் சிலரின் உடலில் அதிக வெப்பம் இருக்கும் அல்லது அதிக வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை இருக்கும். சூரிய ஒளியில் சிறிது நேரம் நடந்தால் கூட அவர்களுக்கு மயக்கம் வந்துவிடும். வெப்பம் அவர்களின் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை வேகமாக உறிஞ்சும். இதனை வெப்பச்சோர்வு என்று அழைப்பார்கள்.

Signs That Your Body Is Overheating

வெப்பச்சோர்வு என்பது உங்கள் உடல் அதிக வெப்பமடையும் போது அது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பதோ அல்லது குளிர்விக்கவோ முடியாத நிலையாகும். இது பொதுவாக பெரும்பாலான நபர்களுக்கு 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். அதிக வெப்பமான நிலை பொதுவாக நீண்ட காலத்திற்கு தீவிர வெப்பத்தை வெளிப்படுத்துவதால் ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெப்பச்சோர்வு என்றால் என்ன?

வெப்பச்சோர்வு என்றால் என்ன?

உங்கள் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, உங்கள் உடலின் மேற்பரப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூடுதலாக, உங்கள் உடலை குளிர்விக்க, வியர்வை வீதம் மற்றும் சுவாச விகிதங்கள் அதிகரிக்கும். இவை அனைத்தும் இதயத்தில் கூடுதல் பணிச்சுமையை உருவாக்கி, உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

ஏன் இது ஆபத்தானது?

ஏன் இது ஆபத்தானது?

அதிக வெப்பம் ஆபத்தானது, ஏனென்றால் இது சூரியனால் தூண்டப்படும் பிற சிக்கல்களுக்கு ஆரம்பப்புள்ளியாகும். அதிக வெப்பமடையும் போது, நீங்கள் அதிக வியர்த்தால், விரைவாக நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் உங்கள் உடல் உங்கள் துளைகள் வழியாக அதிக அளவு தண்ணீரை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இழக்கிறது. நீரிழப்பு மேலும் இதயத்தில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இதயம் ஏற்கனவே சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை செலுத்துவதில் கடுமையாக உழைத்து வருவதால், இது உங்கள் இதயத்திற்கு ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். அதிக வெப்பமான நிலை உடலின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் மென்மையான திசுக்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது: மூளையில் மற்றும் உடல் முழுவதும் உள்ள நரம்பு செல்கள். இது குழப்பம், நினைவாற்றல் குறைபாடு மற்றும் நினைவு இழப்புக்கு வழிவகுக்கும். இதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிகமாக வியர்ப்பது

அதிகமாக வியர்ப்பது

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விகிதத்தில் வியர்வை வரும், உங்களுக்கு எவ்வளவு வியர்க்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். உண்மையில் உங்கள் வியர்வை உங்கள் உங்களின் ஆரோக்யத்தைப் பற்றி நிறையக் கூறும். உங்கள் வியர்வையின் அளவு நீங்கள் மாறும்போது அதனை எச்சரிக்கையாக கொள்ள வேண்டும். நமது உடலே அதனை குளிர்விக்க வியர்வை மூலம் முயற்சிக்கும். ஆனால் உங்கள் உடலில் அதிக நீரழிப்பு ஏற்பட்டால் வியர்வை வெளிப்படுவது நிறுத்தப்படும், இது மிகவும் ஆபத்தானது ஏனெனில் உடல் தன்னை குளிர்விக்கும் திறனை இழந்து, உள் வெப்பநிலை உயரத் தொடங்கும், இது வெப்ப அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உங்கள் உடல் வியர்வையை வெளியிடவில்லை என்றால் உங்கள் உடலை மற்ற வழிகளின் மூலம் குளிர்விக்கலாம்.

MOST READ: சிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது? புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா?

தலைசுற்றுதல்

தலைசுற்றுதல்

உங்கள் அதிக உடல் வெப்பமாவதற்கான அறிகுறி உங்கள் மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். மூளையில் உள்ள நுட்பமான நரம்பு திசுக்கள் வெப்பமடைவதால், தலைவலி, குழப்பம், மன சோம்பல், தலைச்சுற்றல் ஆகியவை ஏற்படுகின்றன. கூடுதலாக, உடலில் உள்ள நரம்பு திசுக்கள் தவறாக செயல்படத் தொடங்கலாம், இது பலவீனமான இயக்கம் அல்லது நகர இயலாமைக்கு வழிவகுக்கும். குமட்டல், தலைவலி போன்ற வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் நிழலில் அமர்ந்து ஓய்வெடுங்கள். உங்கள் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த அதிக தண்ணீரை குடிக்கவும்.

வெப்பத் தடிப்புகள்

வெப்பத் தடிப்புகள்

வெப்பத் தடிப்புகள் என்பது விரும்பத்தகாத மற்றும் அசாதாரண சிவத்தல் ஆகும், இது உங்கள் உடலுக்கு ஒரு இடைவெளி தேவை என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். "வியர்வைக் குழாய்கள் தடைசெய்யப்படும்போது, பெரும்பாலும் கனமான ஆடைகளால் வெப்ப வெடிப்பு ஏற்படுகிறது, மேலும் வியர்வை சருமத்தின் கீழ் சிக்கி, சிவப்பு தடிப்புகள் ஏற்படுகிறது. தளர்வான ஆடைகள், கோடைகாலத்தில் லேசான ஆடைகளை அணிவது இதனைத் தடுக்கும்.

தசைப்பிடிப்பு

தசைப்பிடிப்பு

சாதாரண செயல்பாடுகளின் போது கூட உங்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அது உங்களுக்கான எச்சரிக்கை ஆகும். வெப்ப சோர்வுக்கான ஆரம்ப அறிகுறிகள் சில நமது பெரிய தசைக் குழுக்களில் ஏற்படுகின்றன, இது பிடிப்பு அல்லது வலி நிறைந்த தசைப்பிடிப்பாக இருக்கலாம். இது வெப்பமான காலநிலைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், எலெக்ட்ரோலைட் குறைபாடுகள் அல்லது நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. உங்களின் எந்தெந்த செயல்கள் இதனை அதிகரிக்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிக நேரம் வெளியே சுற்றுவது

அதிக நேரம் வெளியே சுற்றுவது

விடுமுறை நாட்களில் நாம் சூரிய ஒளியில் இருக்கும் நேரம் இரட்டிப்பாகும். நீண்ட நேரம் வெயில் சுற்றுவது, தண்ணீரில் விளையாடுவது போன்றவை உங்கள் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை வெளியேற்றும். பகல் நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். குறிப்பாக உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாதபோது இது அதிகமாக ஏற்படும்.

MOST READ: சாதுக்கள் ஏன் நீளமான முடி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

மது அருந்துவது

மது அருந்துவது

மது அருந்துவது உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை துரிதப்படுத்தும், மேலும் இது வெளிப்புறத்தில் இருக்கும்போது உங்கள் உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனை சரிசெய்ய ஒவ்வொரு கிளாஸ் மது அருந்திய பிறகும் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவது இந்த நீரிழப்பைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs That Your Body Is Overheating

Here is the warning signs that your body is overheating and ways your are making it worse.
Story first published: Tuesday, September 24, 2019, 14:44 [IST]
Desktop Bottom Promotion