For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் அதிகாலை 4 மணிக்கு முழிப்பு வருதா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு...

கல்லீரல் பிரச்சனையின் நன்கு அறியப்பட்ட அறிகுறி தான் தூக்க கலக்கம். அதிகாலை 1 மணி முதல் 4 மணிக்குள் ஒருவர் தினமும் தூக்கத்தில் இருந்து விழித்தால், அதற்கு காரணம் கல்லீரல் பிரச்சனை தான்.

|

மனித உடலில் கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய உறுப்பாகும். இது சுமார் 3 பவுண்டுகள் எடை கொண்டது. இந்த கல்லீரல் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் இது ரப்பர் போன்று இருக்கும். இந்த கல்லீரல் விலா எலும்பு கூட்டால் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான பல வேலைகளை செய்கிறது. அதில் இரத்தத்தை வடிகட்டுவது, நச்சுப் பொருட்களான ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களை உடைத்தெறிவது போன்றவை அடங்கும். மேலும் கல்லீரல் பித்தநீரை உற்பத்தி செய்கிறது. இந்த பித்த நீர் கொழுப்புக்களை ஜீரணிக்கவும், கழிவுகளை எடுத்து செல்லவும் உதவுகிறது.

Waking Up Between 1am And 4 am Could Signal Liver Problem

ஆனால் தற்போது கல்லீரலில் நிறைய பேர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதில் ஒருவரது கல்லீரலினுள் கொழுப்பு செல்கள் தேங்கியிருந்தால், அது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயாகும். இந்த பிரச்சனை இருந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்பு செல்கள் கல்லீரலின் செயல்பாட்டை குறைத்து, உடலில் நச்சுக்களை தேங்க வைக்கும். பெரும்பாலும் இந்த நோய் இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது அவ்வளவு எளிதில் முடியாது. இருப்பினும், கல்லீரல் ஒரு ஆபத்தில் இருந்தால் அது ஒரு முக்கியமான அறிகுறியை தூக்கத்தின் போது வெளிக்காட்டும்.

நேச்சர் அண்ட் சயின்ஸ் ஆஃப் ஸ்லீப்பின் இதழின் படி, கல்லீரல் பிரச்சனையின் நன்கு அறியப்பட்ட அறிகுறி தான் தூக்க கலக்கம். அதிகாலை 1 மணி முதல் 4 மணிக்குள் ஒருவர் தினமும் தூக்கத்தில் இருந்து விழித்தால், அதற்கு காரணம் கல்லீரல் பிரச்சனை தான் என்று மருத்துவ நிபுணர் மற்றும் சிரோபிராக்டருமான டாக்டர். பிரையன் லூன் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Waking Up Between 1am And 4 am Could Signal Liver Problem

Non-alcoholic fatty liver disease: The most common cause of waking up between 1am and 4am is a liver problem. Read on to know more...
Story first published: Saturday, December 10, 2022, 10:43 [IST]
Desktop Bottom Promotion