Latest Updates
-
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
உடலில் உள்ள அழுக்கை வெளியேற்றணுமா? அப்ப இதெல்லாம் போட்டு வெந்நீரில் 20 நிமிடம் பாதத்தை ஊற வையுங்க...
உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் எண்ணற்ற நன்மைகள் கொண்ட உடல் நச்சகற்றும் வழிகள் உள்ளன. உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை நீக்க பாதங்களில் நச்சகற்றும் சிகிச்சை ஒரு சிறப்பான தீர்வாக
உடலில் போதிய செயல்பாடுகள் இல்லாமல் இருக்கும் போது அது பல வழிகளில் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்புடன் இருப்பது உடல் மற்றும் மனதை இயங்க வைக்க மிகவும் அவசியமான ஒரு அம்சமாகும். நீங்கள் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நாட்களில் உங்கள் உடலில் கழிவுகள் படிந்து விட நேரிடுகிறது. நீங்கள் நீண்ட நேரம் ஓய்வாக இருந்தபின் உடலில் பல்வேறு இடங்களில் வலி ஏற்படுவதை உணர்ந்திருக்கலாம். இதனால் சோம்பல், தலைவலி மற்றும் மனஅழுத்தம் கூட ஏற்படலாம்.

வீட்டில் இருந்தபடி வேலை செய்பவர்கள் இந்த பாதிப்பிற்கு அதிகம் ஆளாகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் வேலை செய்யும் போது ஏற்படுத்தி கொள்ளும் மோசமான அங்க நிலைகள் மற்றும் குறைவான உடல் செயல்பாடுகள் ஆகியவையாகும். சில நேரங்களில், மோசமான மனநிலை, பாத வலி போன்றவை உங்கள் தூக்கத்தைப் பாதிக்கலாம். இதனால் உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்கலாம்.
இந்த காலகட்டத்தில் உங்கள் உடலில் படிந்துள்ள கழிவுகளை அகற்றுவது அவசியம். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் எண்ணற்ற நன்மைகள் கொண்ட உடல் நச்சகற்றும் வழிகள் உள்ளன. உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை நீக்க பாதங்களில் நச்சகற்றும் சிகிச்சை ஒரு சிறப்பான தீர்வாகும். பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் தளர்ந்து எல்லா உறுப்புகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.

பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவது எப்படி?
வீட்டில் இருந்து கொண்டே பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்ற சில எளிமையான வழிகள் உள்ளன. இந்த வழிகளானது வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியானதாக இருக்கும். அவற்றை இப்போது காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் கொண்டு பாதங்களில் உள்ள கழிவுகளை நீக்குங்கள்:
உங்கள் சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு பொருள் ஆப்பிள் சீடர் வினிகர். உங்கள் பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்ற இந்த வினிகர் உதவுகிறது.
* ஒரு டப் வெந்நீரில் ஒரு கப் வினிகர் சேர்க்கவும்.
* பிறகு அந்த நீரில் 2 ஸ்பூன் கல் உப்பு, 3-4 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இந்த நீரில் உங்கள் பாதங்களை 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பிறகு கால்களை நீரில் இருந்து எடுத்து சுத்தமான டவல் கொண்டு துடைத்து ஏதாவது க்ரீம் அல்லது மாய்ஸ்சுரைசர் தடவவும்.

இது எப்படி வேலை செய்கிறது?
* நீருக்குள் உங்கள் பாதங்களை ஊறவிடுவதால் நரம்புகள் மென்மையாகிறது. பாத வலியை குணப்படுத்த வெந்நீர் ஒரு சிறந்த தீர்வாகும்.
* மேலும் கூடுதலாக இதில் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்ப்பதால் பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உயர்கிறது.
* இதன் காரணமாக உடலின் தசைகள் தளர்வுற்று இரவில் நல்ல உறக்கம் கிடைக்கிறது. அதே நேரம், கல் உப்பு பயன்படுத்துவதால் வலி குறைகிறது.

எலுமிச்சை மற்றும் கடுகு எண்ணெய்:
பாதங்களில் நச்சுக்களை அகற்றுவதால் ஒட்டுமொத்த உடலின் கழிவுகளும் அகற்றப்படுகிறது. எலுமிச்சை சாறு, கடுகு எண்ணெய் , இமாலயன் உப்பு மற்றும் வெந்நீர் பயன்படுத்தி மற்றொரு வழிமுறையில் பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
* இந்த வழிமுறையில் எண்ணெய், உப்பு மற்றும் எலுமிச்சை கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும்.
* 5-10 நிமிடங்கள் உங்கள் பாதங்களை மசாஜ் செய்த பின்னர், ஒரு டப்பில் வெந்நீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
* வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, அதில் சிறிதளவு கல் உப்பு அல்லது இமாலயன் உப்பு என்று கூறப்படும் பிங்க் உப்பு, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து அந்த நீரில் உங்கள் பாதங்களை 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
* இப்படி செய்வதால் உங்கள் பாதங்களில் உள்ள கழிவுகள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உடலும் சுத்தம் செய்யப்படுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது?
* இமாலயன் உப்பில் இரும்பு, அயோடின், சோடியம் குளோரைடு மற்றும் இதர பல்வேறு கனிமங்கள் உள்ளன. இந்த உப்பை நீரில் சேர்ப்பதால் அதில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து சருமத்தில் உள்ள சிறு துவாரங்கள் வழியாக உடலுக்குள் நுழைகின்றன.
* பேக்கிங் சோடா பயன்படுத்துவதால் சருமம் மென்மையாக மாறி, கிருமிகள் கொல்லப்படுகின்றன. உங்கள் மனஅழுத்தத்தைப் போக்கவும் இந்த வழிமுறை உதவுகிறது.

பாதங்களில் கழிவகற்றும் இந்த சிகிச்சை உண்மையில் வேலை புரிகிறதா?
இந்த வகை பாதங்களில் கழிவகற்றும் சிகிச்சை உண்மையில் சிறப்பாக வேலை புரிகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வழிமுறையில், உடலில் உள்ள எல்லா கழிவுகளும் பாதம் வழியாக வெளியேறுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றைப் பின்பற்றுவதால் உங்கள் உடலில் நச்சுகள் அகற்றப்பட்டு உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications
