For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவிலிருந்தும் இந்த பருவ கால காய்ச்சலிருந்தும் உங்கள பாதுகாக்க இந்த ஒருபொருள் போதுமாம்...!

|

வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். இது ஒரு வலுவான சுவர் போன்றது. இது நமது உடலை நோய்களை உருவாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது. மேலும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு நோய், தொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் குறைந்த நேரத்தில் காயத்திலிருந்து உங்களை மீட்க உதவுகிறது.

இது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். அதனால்தான் வல்லுநர்கள் எப்போதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். உலகம் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயுடன் போராட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், காய்ச்சல் காலம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பது இன்னும் முக்கியமானது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அஜ்வைனை எப்படி பயன்படுத்துவது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதா செய்வது எளிது

காதா செய்வது எளிது

நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்புவது என்னவென்றால், இது ஒரு நேரத்தை எடுக்கும் செயல்முறையாகும். இது நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அடையப்படுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்போது சுத்தமாக சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் தூங்குவது ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் சில விஷயங்கள். இருப்பினும், உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு நீங்கள் கொஞ்சம் ஊக்கமளிக்க விரும்பினால், அஜ்வைன் கதாவை (கேரம் விதைகள்) முயற்சிக்க வேண்டும்.

இந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்... நீங்க எந்த ராசி?

அஜ்வைன் (கேரம் விதைகள்)

அஜ்வைன் (கேரம் விதைகள்)

கேரம் விதைகள் என்றும் அழைக்கப்படும் அஜ்வைன் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் காணப்படும் பொதுவான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். கேரம் விதைகள் கசப்பான சுவை மற்றும் வலுவான நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன. இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது. இது பெரும்பாலும் ஊறுகாய் மற்றும் சட்னிகளில் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ பண்புகள்

மருத்துவ பண்புகள்

சிறிய விதைகள் சக்திவாய்ந்த மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. இது செரிமான மற்றும் மலமிளக்கிய பிரச்சினைகளுக்கு உதவும் ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு முகவர். அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், குளிர் மற்றும் இருமல் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதிலும் பயனளிக்கும் என்று அறியப்படுகிறது. அஜ்வைனில் உள்ள நொதிகள் செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தும் இரைப்பை சாறுகளின் வெளியீட்டை ஊக்குவிக்கின்றன.

காதாவை எவ்வாறு தயாரிப்பது?

காதாவை எவ்வாறு தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

  • 1/2 டீஸ்பூன் அஜ்வைன் விதைகள்
  • 5 துளசி இலைகள்
  • 1/2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்
  • 1 தேக்கரண்டி தேன்

ஆண்களே! இந்த டயட் உங்க விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதோடு உடல் எடையையும் குறைக்குமாம் தெரியுமா?

செய்முறை

செய்முறை

ஒரு கடாயை எடுத்து அதில் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி, கேரம் விதைகள், கருப்பு மிளகு மற்றும் துளசி இலைகளை சேர்க்கவும். 5 நிமிடம் தண்ணீர் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து, கலவையை வடிகட்டவும். அதில் தேனைச் சேர்ப்பதற்கு முன் கலவையை சிறிது நேரம் குளிர்விக்க வேண்டும். பின்னர், காதாவை நன்றாக கலந்து குடிக்கவும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மிதமாக உட்கொண்டால் அஜ்வைன் ஆரோக்கியமான ஒன்று. ஒரு நாளில் அதிகளவு அஜ்வைன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த காதாவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும். சிலர் தங்கள் உணவில் அஜ்வைனை சேர்க்கும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்

  • நீங்கள் தாய்ப்பால் கொடுத்தால் அல்லது கர்ப்பமாக இருந்தால் இந்த கதாவைத் தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய இருந்தால், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த கதா குடிப்பதை நிறுத்துங்கள்.
  • அஜ்வைனுக்கு இரத்தத்தை மெலிக்கும் பண்புகள் உள்ளன. எனவே, நீங்கள் இரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொண்டிருந்தால் அல்லது இரத்த சம்பந்தப்பட்ட ஏதேனும் சிக்கல்களால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இந்த கலவையை குடிக்க வேண்டாம்.
  • கல்லீரல் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This easy immunity-boosting kadha for flu season

Here we are talking about this easy immunity-boosting kadha is all you need in this flu season.