கொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..

இந்தியாவிலும் நாளுக்கு தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாள் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்பட

உலகில் பல உயிர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகிக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் கொரோனா வைரஸிற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவைப் பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ், அந்நாட்டில் உள்ளோரை அதிகம் பாதித்ததை விட, மற்ற நாட்டினரைத் தான் அதிகம் பாதித்துள்ளது. தற்போது கொரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Things To Stock In Your Fridge During Coronavirus Lockdown

இந்தியாவிலும் நாளுக்கு தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாள் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பலரும் அடிக்கடி வெளியே கடைகளுக்கு செல்ல முடியாது. எனவே உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அவசியம் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். இங்கு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும், அதே சமயம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் வேளையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி மற்றும் தானியங்கள்

அரிசி மற்றும் தானியங்கள்

வீட்டில் எவற்றை ஸ்டாக் வைத்துள்ளோமோ இல்லையோ, கட்டாயம் அரிசி, கோதுமை, ஓட்ஸ், பருப்பு வகைகளை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். இவை எளிதில் கெட்டுப் போகாத உணவுப் பொருட்கள் மற்றும் 1-2 வாரத்திற்கும் மேலாக வைத்திருக்க ஏற்றது. அதோடு இவற்றில் உடலுக்குத் தேவையான புரோட்டீன், டயட்டரி நார்ச்சத்து மற்றும் ஆற்றல் போன்றவைகளும் நிரம்பியுள்ளன. ஆனால் இந்த பொருட்கள் ஈரப்பதம் இல்லாத இடத்தில் மற்றும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால், 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

காய்கறிகள்

காய்கறிகள்

வேர் காய்கறிகள் மற்றும் கனமான காய்கறிகளில் அன்றாடம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, நீண்ட நாட்கள் வைத்திருக்க ஏற்றது. எனவே உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சற்று அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள். இவற்றை ஈரப்பதமின்றி மற்றும் சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைக்க வேண்டும். கேரட் மற்றும் காலிஃப்ளவர் போன்றவற்றை ஃப்ரிட்ஜிலும், உருளைக்கிழங்கை வெளியேவும் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக காலிஃப்ளவரை சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்தால், நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.

பழங்கள்

பழங்கள்

நீண்ட நாட்கள் இருக்கும் பழங்களான வாழைப்பழம், ஆப்பிள், கிரேப் ஃபுரூட் மற்றும் ஆரஞ்சு போன்றவை ஊரடங்கு காலத்தில் வீட்டில் வாங்கி வைக்க ஏற்ற பழங்களாகும். இவை ஆரோக்கியமான பழங்கள் மட்டுமின்றி, இந்த பழங்களைக் கொண்டு வீட்டில் பல வெரைட்டியான ரெசிபிக்களை முயற்சித்து உட்கொள்ள முடியும். ஆரஞ்சு, கிரேப் ஃபுரூட் போன்றவை சிட்ரஸ் பழங்கள். இவற்றில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

விதைகள் மற்றும் நட்ஸ்

விதைகள் மற்றும் நட்ஸ்

விதைகளான பூசணி விதைகள், சியா விதைகள் போன்றவற்றில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அதோடு பாதாம், ஆப்ரிகாட் மற்றும் முந்திரி போன்றவற்றிலும் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. இவற்றை ஸ்நாக்ஸ் வேளையில், சாலட்டில் அல்லது காலை உணவில் சேர்த்து உட்கொள்ளலாம். இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, ஆரோக்கியம் பாழாகாமல் இருக்கும்.

முட்டைகள்

முட்டைகள்

தற்போது முட்டையின் விலை குறைவாக உள்ளது. முட்டை ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். இதை ஊரடங்கு காலங்களில் வீட்டில் ஸ்டாக் வைத்திருப்பது மிகவும் நல்லது. மேலும் இதை தினமும் உட்கொண்டு வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பாஸ்தா

பாஸ்தா

எங்கும் வெளியே செல்லாமல் வீட்டில் இருக்கும் போது, எப்போதும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்ள நிச்சயம் அலுத்துப் போகும். இம்மாதிரியான நேரங்களில் சற்று வித்தியாசமாக முயற்சிக்க நினைத்தால், பாஸ்தா ஒரு சிறப்பான தேர்வு. இதுவும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கக்கூடிய உணவுப் பொருள்.

இதர உணவுப் பொருட்கள்

இதர உணவுப் பொருட்கள்

* சீஸ்

* சாஸ் மற்றும் ஜாம்

* பால் பவுடர்

* முழு தானியம் மற்றும் சர்க்கரை குறைவாக சேர்க்கப்பட்ட செரில்கள்

* மசாலாப் பொருட்கள், உப்பு, சமையல் எண்ணெய்

குறிப்பு

குறிப்பு

காய்கறி மற்றும் பழக் கடைகள் திறந்திருக்கும் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று வாங்கி வந்து சாப்பிடுங்கள். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion