Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நுரையீரல் எப்பவும் வலிமையா இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..
நுரையீரலை ஒருவர் வலுவாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஆனால் இன்று நம்மை அறியாமலேயே நுரையீரலின் வலிமையைக் கெடுக்கும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். அந்த உணவுகள் உண்பதைத் தவித்தால், நுரையீரலை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.
மனித உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. நுரையீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், நாம் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனை சரியாக சுவாசிக்க முடியாமல் உயிரை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே நுரையீரலின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். ஏற்கனவே புகைப்பிடித்து பலரது நுரையீரல் மோசமான நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தொற்று நுரையீரலை அதிகம் சேதப்படுத்தக்கூடியது என்பதை அனைவரும் அறிவோம்.

தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த கொரோனா பருவகால நோயாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எதுவாயினும், நுரையீரலை ஒருவர் வலுவாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஆனால் இன்று நம்மை அறியாமலேயே நுரையீரலின் வலிமையைக் கெடுக்கும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். அந்த உணவுகள் உண்பதைத் தவிர்த்தால், நுரையீரலை வலுவாக வைத்துக் கொள்ளலாம். இப்போது நுரையீரலின் வலிமையை கெடுக்கும் அந்த உணவுகளைக் காண்போம்.

ஆல்கஹால்
தற்போதைய நவீன உலகில் ஆல்கஹால் அருந்துவது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஆல்கஹாலை அருந்தினால், அது கல்லீரல் மற்றும் நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும். அதுவும் ஆல்கஹாலில் சல்பைட் இருந்தால், அது ஆஸ்துமாவை ஏற்படுத்தும். அதோடு நுரையீரல் செல்களை சேதப்படுத்தும். நீங்கள் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

குளிர்பானங்கள்
இன்று பலவகையான குளிர்பானங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த பானங்களை நீங்கள் அதிகம் வாங்கி குடிப்பவராயின், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் இவற்றில் சர்க்கரை ஏராளமான அளவில் உள்ளது. அதே நேரத்தில், ஒருவர் வாரத்திற்கு 5 பானங்களுக்கும் அதிகமாக குடித்தால், அவர் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

அதிகப்படியான உப்பு
உணவின் சுவையை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் உணவில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்பவராயின், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் உப்பு என்பது சோடியம். அதிகப்படியான சோடியம் ஆஸ்துமாவின் அறிகுறிகளைத் தூண்டும். ஆகவே உணவில் குறைவான அளவில் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி
முட்டைக்கோஸ் மற்றும் ப்ராக்கோலி ஆகிய இரண்டும் மிகவும் ஆரோக்கியமான காய்கறிகள் தான். ஆனால் நீங்கள் அசிடிட்டி மற்றும் உப்புசத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்து, சுவாசிப்பதில் சிக்கலை சந்தித்தால், இந்த காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது நுரையீரலை மோசமாக பாதிக்கும்.

எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகள்
அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகளை உட்கொள்வதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அதே வேளையில் இம்மாதிரியான உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும். உடல் பருமன் அதிகரித்தால், அது நுரையீரலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆகவே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதை உடனே தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications