Latest Updates
-
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்..
இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்.. இல்லைன்னா ஆபத்தாயிடும்.. உஷார்..
சத்துக்கள் அதிகம் நிறைந்த பால் ஒருசிலருக்கு தீங்கு விளைவிக்கும். இப்போது யாரெல்லாம் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.
நாம் சிறு வயதில் இருந்தே பால் குடிப்பது நல்லது, தினமும் பால் குடித்தால் வலுவாக இருக்கலாம் என்று நம் பெற்றோர்கள் சொல்லி கேட்டிருப்போம். பாலில் கால்சியம் அதிகம் இருப்பதால், அது எலும்புகளை வலிமையாக்க மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது. அத்துடன், பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி12 மற்றும் சத்துக்களான தையமின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்றவையும் உள்ளன. இவை அனைத்துமே உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களாகும்.

ஒருவர் தினமும் பால் குடித்து வருவதன் மூலம், மலச்சிக்கல், மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் அப்படிப்பட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்த பால் ஒருசிலருக்கு தீங்கு விளைவிக்கும். இப்போது யாரெல்லாம் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் கொண்டவர்கள் பால் குடிக்கக்கூடாது. ஏனெனில் இத்தகையவர்களால் பாலை எளிதில் செரிமானம் செய்ய முடியாது. மேலும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் கொண்டவர்கள் குறைவான அளவிலேயே புரோட்டீன் உணவுகளை உண்ண வேண்டும். பாலில் புரோட்டீன் அதிகளவில் இருப்பதால், இது அஜீரண கோளாறு, அசிடிட்டி, உடல் சோர்வு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

வாய்வு தொல்லை
பாலில் லாக்டோஸ் உள்ளது. இது சில சமயங்களில் செரிமானத்தை பாதிக்கலாம். இதன் காரணமாக, அதிகளவு பால் குடிப்பதால் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் அல்லது வாய்வு தொல்லை போன்றவற்றை உண்டாக்கலாம். ஆகவே ஏற்கனவே வாய்வு பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி
பாலில் உள்ள லாக்டோஸ் காரணமாக சிலருக்கு அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். இதன் காரணமாக சருமத்தில் அரிப்பு, சொறி சிரங்கு, சுவாசிப்பதில் சிரமம் அல்லது உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே யாருக்காவது அலர்ஜி பிரச்சனை இருந்தால், பால் குடிப்பத்தை தவிர்ப்பதே நல்லது.

உடல் பருமன்
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், குறைவான அளவிலேயே பாலை குடிக்க வேண்டும். ஏனெனில் பாலில் கொழுப்பு அதிகமாக உள்ளது. அதிகளவு பாலைக் குடித்தால் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கி, உடல் பருமனை இன்னும் அதிகரிக்கும்.

சரும பிரச்சனைகள்
அதிகளவிலான பாலைக் குடிப்பது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் இது முகப்பருக்கள் அதிகம் வருவதற்கான வாய்ப்பை அதிகரித்து, முக அழகையே பாழாக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே அதிக முகப்பருக்கள் வருமாயின், பால் அதிகம் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

பிற பிரச்சனைகள்
மேற்கூறிய பிரச்சனைகளைத் தவிர, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அல்லது மூட்டு வீக்க பிரச்சனையைக் கொண்டவர்கள், பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகளவிலான பால் குடிப்பதால், சிலர் கல்லீரலில் வீக்கம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதோடு நார்த்திசு கட்டி பிரச்சனைகளையும் சந்திக்கலாம் என்று கூறுகின்றனர். ஆகவே அதிகளவில் பால் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
