Latest Updates
-
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா?
பூண்டு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக இருந்தாலும், இது அனைவருக்கும் நன்மையை மட்டுமே தரும் என்று கூற முடியாது. குறிப்பாக இது அனைவருக்குமே பொருந்தாதாம். ஒருசில பிரச்சனைகள் இருப்பவர்கள் பூண்டு சாப்பிடக்கூடா
பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது தான் பூண்டு. இத்தகைய பூண்டு மனித உடலில் பல மாயங்களை செய்யக்கூடிய உணவுப் பொருள். பல மருத்துவ முறைகளில், குறிப்பாக ஆயுர்வேதத்தில் பூண்டு நோய்களை குணப்படுத்தும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய பூண்டு செரிமானத்தை மேம்படுத்துவது, கொலஸ்ட்ராலைக் குறைப்பது, சளியை அகற்றுவது, புற்றுநோய் செல்களை அழிப்பது, இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, கல்லீரலைப் பாதுகாப்பது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளை வழங்கக்கூடியது.
பூண்டு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக இருந்தாலும், இது அனைவருக்கும் நன்மையை மட்டுமே தரும் என்று கூற முடியாது. குறிப்பாக இது அனைவருக்குமே பொருந்தாதாம். ஒருசில பிரச்சனைகள் இருப்பவர்கள் பூண்டு சாப்பிடக்கூடாதாம். இக்கட்டுரையில் யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்போமா...!

கல்லீரல் நோய்கள்
ஹெபடைடிஸைத் தடுப்பதற்கு பலரும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இருப்பினும், ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு பூண்டு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் பூண்டு ஹெபடைடிஸ் வைரஸில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, பூண்டில் உள்ள சில கூறுகள் வயிறு மற்றும் குடல்களைத் தூண்டிவிடும், செரிமான பாதையில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும். இதன் விளைவாக ஹெபடைடிஸ் நோயாளிகளிடம் குமட்டல் அறிகுறி அதிகரிக்கும். அதோடு, பூண்டில் உள்ள நிலையற்ற கூறுகள் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபினைக் குறைத்து, இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு நல்லதல்ல.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், பூண்டு கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஒருவேளை அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் பூண்டு சாப்பிட்டால், பூண்டில் உள்ள காரப் பண்புகள், குடலைத் தூண்டிவிடும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு இன்னும் தீவிரமாகி, நிலைமை மேலும் மோசமாகும்.

கண் நோய்கள்
க்ளுக்கோமா, கண் புரை, வெண்படல அழற்சி மற்றும் பிற கண் நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள், அன்றாட டயட்டில் குறைவான அளவிலேயே பூண்டு சாப்பிட வேண்டும். பல நாட்களாக பூண்டுகளை அதிக அளவில் உட்கொண்டால் கல்லீரல் சேதமடைவதோடு, கண்களும் பாதிக்கப்படுவதாக சீன மருத்துவத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. பூண்டுகளை அதிகமாக அன்றாடம் எடுத்தால், அதனால் மோசமான கண் பார்வை, நினைவிழப்பு போன்ற மோசமான அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அன்றாடம் அளவாக பூண்டு எடுப்பதோடு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளான இறைச்சி கல்லீரல், தோல் நீக்கப்பட்ட இறைச்சி, முட்டை, பால், கேரட், தக்காளி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

நெஞ்செரிச்சல்
அமெரிக்கா சர்வதேச புற்றுநோய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, நற்பதமான பூண்டு பற்களை வெறும் வயிற்றில் உட்கொண்டால் நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடுமாம். ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்ட அறிக்கையின் படி, பூண்டில் உள்ள குறிப்பிட்ட கூறுகள் இரைப்பை உணவுக்குழாய் அழற்சி நோயை உண்டாக்குமாம்.

வாய் துர்நாற்றம்
உங்களுக்கு ஏற்கனவே வாய் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறதா? அப்படியானால் அதற்கு நீங்கள் சாப்பிடும் பூண்டு கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் பூண்டுகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் பூண்டில் உள்ள சல்பர் என்னும் பொருள் தான்.

இரத்தக்கசிவு
பூண்டு இயற்கையாகவே இரத்தத்தை மெலிதாக்கும். ஆகவே பூண்டுகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, அத்துடன் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளான ஆஸ்பிரின் போன்றவற்றை எடுப்பவராயின், உடல் நிலைமை மோசமாகும். ஏனெனில் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் பூண்டு சேரும் போது, உடலினுள் இரத்த கசிவின் அபாயம் அதிகரிக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால், அது விரைவில் பிரசவ வலியை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகம் உட்கொண்டால், தாய்ப்பாலின் சுவை மாறி, குழந்தை பால் குடிக்க மறுக்க வாய்ப்புள்ளது.

தலைச்சுற்றல்
நிபுணர்களின் படி, பூண்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த அழுத்தம் ஒருவருக்கு மிகவும் குறைவாக இருந்தால், அவர்கள் அடிக்கடி தலைச்சுற்றி மயக்கம் போடக்கூடும்.

அதிக வியர்வை
பல்வேறு ஆய்வுகளில், பூண்டுகளை ஒருவர் பல வருடங்களாக அதிகம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கக்கூடும். எனவே உங்களுக்கு வியர்வை அதிகமாக இருப்பதற்கு, நீங்கள் சாப்பிடும் பூண்டு கூட காரணமாக இருக்கலாம்.

யோனி தொற்றுகள்
யோனியில் ஏற்பட்ட ஈஸ்ட் தொற்றுக்களை சரிசெய்ய பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் பூண்டு அதிகம் சாப்பிட்டால், யோனியில் உள்ள மென்மையான திசுக்களை எரிச்சலூட்டப்பட்டு, ஈஸ்ட் தொற்று நோயை தீவிரமாக்கிவிடும். எனவே கவனமாக இருங்கள்.

ஹைஃபெமா (Hyphema)
பூண்டு பற்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது ஹைஃபெமாவிற்கு வழிவகுக்கும். அதாவது இது கண்ணின் முன்புற அறைக்குள் இரத்தக் கசிவை ஏற்படுத்தும் ஒரு நிலை (கருவிழி மற்றும் கார்னியாவிற்கு இடைப்பட்ட இடைவெளி). இந்த நிலை தீவிரமானால் பார்வையையே இழக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications