Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வேகமா கரைக்கணுமா? அப்ப இதுல ஏதாவது ஒன்ன குடிங்க...
உடல் பருமனுக்கு காரணமான கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில பானங்கள் உள்ளன. அந்த பானங்களைக் குடித்தால், மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, செரிமானம் சீராக நடைபெற்று, உடல்
உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமான ஒரு செயல். இதற்கு உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் முழுமையான ஈடுபாடு அவசியமானது. தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, முறையான டயட்டை மேற்கொண்டு வர வேண்டியது முக்கியம்.
உடல் பருமன் மற்றும் அதிகளவு உடல் எடை போன்ற பிரச்சனைகளால் இன்று உலகில் ஏராளமானோர் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளான இதய நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும். எனவே உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உடல் பருமனுக்கு காரணமான கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில பானங்கள் உள்ளன. அந்த பானங்களைக் குடித்தால், மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, செரிமானம் சீராக நடைபெற்று, உடல் எடையும் குறையும். இப்போது அந்த பானங்கள் எவையென்று காண்போம்.

புதினா டீ
தேவையான பொருட்கள்:
* புதினா - 1 கையளவு
* க்ரீன் டீ - 7 கப்
* எலுமிச்சை துண்டுகள் - சில
செய்முறை:
ஒரு ஜாரில் க்ரீன் டீ, புதினா இலைகள் மற்றும் எலுமிச்சைத் துண்டுகளைப் போட்டு, ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இந்த பானத்தைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், சில வாரங்களில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 1/2 கப்
* ஆளி விதை - 1/4 கப்
* ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
* பால் - 1/2 லிட்டர்
* யோகர்ட் - 1 கப்
செய்முறை:
பிளெண்டரில் அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பானத்தை ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு முன்பும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வர நல்ல பலனைக் காணலாம்.

மசாலா டீ
தேவையான பொருட்கள்:
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
* பட்டைத் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த டீயை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனால் செரிமானம் மேம்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரையும்.

ஃபுரூட் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* ராஸ்ப்பெர்ரி - 1 கப்
* கிரேப்ஃபுரூட் - 2
* அன்னாசிப்பழ துண்டுகள் - 2
செய்முறை:
பிளெண்டரில் அனைத்துப் பொருட்களையும் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை சில மணிநேரங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புக்கள் கரையும்.

சாக்லேட் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
* சாக்லேட் பவுடர்
* பால் - 1/2 லிட்டர்
* ஓட்ஸ் - 1/2 கப்
* அமரந்த் - 1/4 கப்
* தேன் - சுவைக்கேற்ப
செய்முறை:
பிளெண்டரில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த ஸ்மூத்தியை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.

ஆப்பிள் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
* க்ரீன் ஆப்பிள் - 1
* கிரேப்ஃபுரூட் - 1 (ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்)
* எலுமிச்சை - 1 (ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - 1 கப்
* தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பிளெண்டரில் ஆப்பிளுடன், இதர பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை டம்ளரில் ஊற்றி, தேன் சேர்த்து கலந்து, காலை உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு - 1
* வாழைப்பழம் - 1
* கொழுப்பு குறைவான யோகர்ட் - 1/2 கப்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வே பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* ஆளிவிதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பிளெண்டரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு ஒருசேர அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் குடித்து வந்தாலே, குறுகிய காலக்கட்டத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
