Latest Updates
-
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
உங்களுக்கு ஏற்கனவே கொரோனா இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
சமீபத்திய ஆய்வின் படி, ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா இருந்தால், அது உணர்த்தும் 5 அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன், மில்லியன் கணக்கான இந்த தொற்றுநோயுடன் மக்கள் பல்வேறு சிக்கல்களையும் அனுபவித்து வருகிறார்கள். காய்ச்சல் முதல் தொண்டைப்புண், சோர்வு வரை, கொரோனாவின் மிதமானது முதல் அபாயகரமான அறிகுறிகளாக உள்ளன. மேலும் SARS-CoV-2 என்னும் கோவிட்-19 ஒரு சுவாச நோயாக இருந்தப்போதிலும், இவற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் காய்ச்சல் அல்லது ஜலதோஷம் போன்ற பிற சுவாச தொற்றுக்களின் அறிகுறிகளையும் கொண்டுள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. என்ன தான் சிலர் கொரோனாவின் அறிகுறிகளைப் புறக்கணித்தாலும், காலப்போக்கில் சிலர் அதிலிருந்து எளிதில் குணமடைந்தும் விடுகின்றனர்.

சிலர் கொரோனாவின் மிதமான அறிகுறிகளை கொண்டிருக்கையில், மற்றவர்கள் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள். அதற்காக அனைவருமே தங்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சமீபத்திய ஆய்வின் படி, ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா இருந்தால், அது உணர்த்தும் 5 அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆய்வு
அன்னல்ஸ் ஆஃப் கிளினிக்கல் அண்ட் டிரான்ஸ்லேஷனல் நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 412 நோயாளிகளை மருத்துவ வல்லுநர்கள் கவனித்ததில், 82 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் நரம்பியல் பிரச்சனைகளின் அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுதவிர, ஏற்கனவே கொரோனாவுடன் தொடர்பு கொண்ட தனிநபர்களுக்கு குறிப்பிட்ட 5 அறிகுறிகள் வெளிப்பட்டதாகவும் கூறுகின்றனர். கீழே அந்த அறிகுறிகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளன.

தலைவலி
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) படி, கோவிட்-19 இன் பொதுவான அறிகுறிகளின் பட்டியலில் தலைவலியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி கொரோனாவால் ஏற்படும் தலைவலியானது லேசானது முதல் கடுமையானது வரை தாங்க முடியாத அளவில் இருக்கலாம்.

தசை வலி
அன்னல்ஸ் ஆஃப் கிளினிக்கல் அண்ட் டிரான்ஸ்லேஷனல் நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களில் 44.8 சதவீதம் பேர் கோவிட் -19 இன் விளைவாக தசை வலியை அனுபவித்துள்ளனர். இது தவிர, இத்தகைய தசை வலி நீண்ட கோவிட்-இன் அறிகுறியாகும்.

மனக் குழப்பம்
ஆய்வில் பங்கேற்றவர்களிடையே மனக் குழப்பமும் ஒரு அறிகுறியாக பதிவாகியுள்ளது. இந்த அறிகுறி கோவிட்-19 இன் குறைவாக அறியப்பட்ட மற்றும் மிகவும் அரிதான அறிகுறிகளில் ஒன்று என்றாலும், ஆய்வின் போது தன்னார்வலர்களில் சுமார் 31.8 சதவீதம் பேர் மனக் குழப்பத்தை அனுபவித்துள்ளனர்.

வாசனை மற்றும் சுவை இழப்பு
வாசனை மற்றும் சுவை இழப்பு என்பது ஒரு அசாதாரண அறிகுறியாக இருந்தாலும், பெரும்பாலான கோவிட் நோயாளிகளிடையே அதிகம் இந்த அறிகுறி காணப்படுகிறது. இது ஒரு அசௌகரியமான நிலையாக இருக்கலாம். இருப்பினும், ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்று என்பதை மறவாதீர்கள்.

கண் அழற்சி அல்லது கண் வலி
கொரோனா பாசிட்டிவ் காட்டிய பெரும்பாலான மக்கள் கண்களில் வலியை அனுபவித்துள்ளதாக புகாரளிக்கின்றனர். ஆனால் இதற்கு ஊடரங்கின் காரணமாக, டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்ற திரையில் நீண்ட நேரம் செலவழித்ததாலும் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், கொரோனா நோயாளிகள் கண் வலியை அனுபவித்ததால், இதுவும் கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications
