For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருந்துகளானது, குறிப்பிட்ட வயதை சேர்ந்தவர்களுக்காக மட்டுமே தவிர, அனைத்து வயதினருக்கும் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

|

தற்போது ஆன்லைனில் மட்டுமின்றி, மருந்து கடைகளில் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் பல மாத்திரைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் சில எதிர்பார்க்கும் பலனைக் கொடுத்தாலும், பல பொய்யானதாகவே இருக்கும். இன்று ஒரு பிரச்சனைக்கு பல பெயர்களில் மருந்துகளானது கடைகளில் விற்கப்படுகிறது. அப்படி விற்கப்படும் மருந்துகளை மருத்துவரிடம் கேட்காமலேயே பலர் வாங்கி சாப்பிடுகின்றனர்.

Side Effects Of Impotence Medication

குறிப்பாக ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் மாத்திரைகளை எடுப்பது பற்றி ஆண்கள் மருத்துவரிடம் கேட்பதே இல்லை. இப்படி மருத்துவரிடன் பரிந்துரையின்றி போடும் மாத்திரைகளால், நன்மைகளை விட தீமையை அதிகம் சந்திக்கக்கூடும் என்பதை மறக்க வேண்டாம். அதிலும் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருந்துகளானது, குறிப்பிட்ட வயதை சேர்ந்தவர்களுக்காக மட்டுமே தவிர, அனைத்து வயதினருக்கும் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இம்மாதிரியான மருந்து மாத்திரைகளை எடுக்கும் முன் கட்டாயம் மருத்துவரிடம் கேட்க வேண்டியது அவசியம்.

MOST READ: ஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப மறக்காம இத படிங்க...

இக்கட்டுரையில் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளைப் போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்மை சக்தி என்றால் என்ன?

ஆண்மை சக்தி என்றால் என்ன?

ஆண்மை சக்தி என்பது விறைப்புத்தன்மையைக் குறிக்கிறது. இன்று பல ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். எனவே இப்பிரச்சனையில் இருந்து விடுபட பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு, மருந்து கடைகளுக்கு சென்று தங்கள் இஷ்டத்திற்கு மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவதால், விறைப்புத்தன்மை பிரச்சனை சரியாகும் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறானது.

MOST READ: முன்கூட்டியே விந்து வெளியேறுகிறதா? அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...

ஒருவருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை எந்த காரணங்களுக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சொல்லப்போனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே முதலில் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்தால் தான், அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்து அப்பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.

நீங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துபவராயின், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையில் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: இந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா?

தலைவலி

தலைவலி

விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் மாத்திரைகளை உண்பதால் ஏற்படும் பொதுவான ஒரு பக்க விளைவு தான் தலைவலி. இதற்கு காரணம், இந்த மாத்திரைகளால் திடீரென்று இரத்தத்தில் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுவது தான். பெரும்பாலும் அனைத்து வகையான விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் மாத்திரைகளாலும் இந்த பக்க விளைவு ஏற்படும்.

செரிமான மண்டல பிரச்சனைகள்

செரிமான மண்டல பிரச்சனைகள்

விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளால் சந்திக்கும் மற்றொரு பக்க விளைவு செரிமான மண்டலத்தில் தான். அதில் பெரும்பாலும் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கும் ஏற்படும். ஆனால் டயட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தினால், இதன் தாக்கத்தைக் குறைக்கலாம். அதுவும் காப்ஃபைன் பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றிற்கு பதிலாக, நீர் அல்லது ஜூஸைக் குடிப்பது நல்லது.

MOST READ: ஆண்களே! இந்த இரண்டையும் ஒன்னா சாப்பிட்டா, ஆண்மைப் பெருகும் தெரியுமா?

தலைச் சுற்றல்

தலைச் சுற்றல்

உடலில் திடீரென்று நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும் போது தலைச்சுற்றல் ஏற்படும். பொதுவாக விறைப்புத்தன்மையை சரிசெய்யும் மாத்திரைகளால் லேசான தலைச்சுற்றலை சந்திக்கக்கூடும். இருப்பினும் தலைச்சுற்றல் ஏற்பட்டால், அன்றாட செயல்பாடுகளில் அசௌகரியத்தை உண்டாக்கும். பல நேரங்களில் இம்மாத்திரையால் மயக்கம் ஏற்படலாம். இப்படி மயக்கம் ஏற்பட்டால், அது மாத்திரையின் தீவிர விளைவால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரையை எடுத்து, மயக்க உணர்வைப் பெற்றால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

பார்வை பிரச்சனை

பார்வை பிரச்சனை

விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மருந்துகள் கண் பார்வையில் கூட மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். அதிலும் உங்களுக்கு ரெட்டினால் கோளாறு இருந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளை கட்டாயம் உட்கொள்ளக்கூடாது.

MOST READ: ஆண்களே! விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா? இந்த ஜூஸ் குடிங்க...

உடல் வலி

உடல் வலி

விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளை எடுக்கும் சிலர் கடுமையான தசை வலியால் நாள்முழுவதும் அவஸ்தைப்படக்கூடும். எனவே இந்த மாதிரியான வலியால் கஷ்டப்பட்டால், OTC வலி நிவாரணிகளைத் தான் எடுக்க வேண்டும்.

ஆகவே எப்போதும் மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால், கஷ்டத்தை தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Impotence Medication

Here are some side effects of impotence medication. Read on...
Desktop Bottom Promotion