Latest Updates
-
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி?
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா?
பீட்ரூட் சாறு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் இருந்தாலும், அது அனைவருக்கும் பொருந்தாது.
நாம் அடிக்கடி உபயோகிக்கும் காய்கறிகளில் மிகவும் முக்கியமானது பீட்ரூட். பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. இதிலுள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும். பீட்ரூட் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றாலும், அதே சமயம் பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் பல பக்கவிளைவுகளும் ஏற்படும்.

எந்தவொரு காய்கறியும், பழமும் தீங்கானது அல்ல. நாம் அதனை எப்படி எடுத்துக்கொள்கிறோம், எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே அவற்றின் பலன்கள் நம்மை பாதிக்கிறது. பொதுவாக மக்கள் அனைவரும் பீட்ரூட் சாப்பிடலாம் என்றாலும், அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ளவது அவசியம். பீட்ரூட் ஜூஸ் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்
பீட்ரூட் சாறு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் இருந்தாலும், அது அனைவருக்கும் பொருந்தாது. பீட்ரூட்டில் அதிகளவு மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இவை நல்லதுதான் ஆனால் இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால் இவை அனைத்தும் உலோக சேர்மங்கள். இதனை அதிகம் சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் கணையத்தில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காய்கறியை அதிகமாக உட்கொள்வது கல்லீரலில் உலோக அயனிகளைக் குவிப்பதை ஏற்படுத்தும். பீட்ரூட்டை அதிக அளவில் உட்கொள்வது ஆரோக்கியமான நோயாளிகளுக்கு மட்டுமல்ல, உலோகக் குவிக்கும் நோய்களைக் கையாளும் நபர்களுக்கும் பல இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரக கற்கள்
பீட்ரூட்டில் ஆக்ஸலைட்டுகள் அதிகம் உள்ளது. எனவே அதிகளவு பீட்ரூட் உட்கொள்ளும்போது ஆக்ஸலைட்டுகள் உடலில் உள்ள கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு இறுதியில் சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், பீட்ரூட் சாப்பிடுவதை நிறுத்தக்கோரி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்.
நாள் முழுவதும் நாம் சாப்பிடும் உணவை வைத்தே சிறுநீரின் நிறம் மாறுபடும். அதிகளவு பீட்ரூட் சாப்பிடுவதால் சிறுநீரின் நிறம் சிகப்பு நிறத்தில் வரக்கூடும். இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் ஏற்படும். பீட்டூரியா என்பது ஆபத்தான நோயாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த அவசியத்தை இது உணர்த்துகிறது.

தோல் தடிப்பு
பீட்ரூட் சாப்பிடுவதால் சிலருக்கு தடிப்புகள், அரிப்பு, காய்ச்சல் போன்ற எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் குரல் வளையங்களில் சுருக்கம், மூச்சுக்குழாயில் அழற்சி போன்றவை கூட ஏற்படலாம். பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கும்போது இதுபோன்ற எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வில் கூறப்படுகிறது.

மலத்தின் நிறம் மாறுபாடும்
சில வகை கீரைகள் மற்றும் காய்கறிகள் நாம் உட்கொள்ளும்போது வெளிவரும் மலத்தின் நிறம் மாறுபாடும். பீட்ரூட் அதிகம் சாப்பிடும்போது சிகப்பு நிறத்தில் மலம் கழிக்க நேரிடும். நிறம் மாறி மலம் கழிப்பதுக்கூட பீட்டூரியாவின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற நாட்களில் மருத்துவரை சந்தித்து சமீபத்திய உணவு தேர்வுகள் பற்றி விவாதித்துக்கொள்ளலாம்.

வயிற்று வலி ஏற்படும்
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன. அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவை பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அதிக அளவு நைட்ரேட்டுகள் உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளும்போது அது வயிற்று வலிக்கு வழிவகுக்கும். பீட்ரூட் சாறு அதிகளவு உட்கொள்ளும் சிலருக்கு வயிற்று பிரச்சனையும் ஏற்படலாம்.

இரத்த அழுத்தம்
பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்தம் அழுத்தம் குறையும். ஆனால், இது ஒருவகையில் நல்லதாகவும் அமையும், தீங்காகவும் அமையும். இரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருக்கும்போது நீங்கள் பீட்ரூட் சாப்பிடுவதால், அது உங்கள் நிலையை மோசமாக்கலாம்.
ஏனெனில் பீட்ரூட் இரத்த அழுத்தத்தில் திடீர் சரிவை ஏற்படுத்தும். மேலும் இது இரத்த நாளங்களை நீர்த்துப் போக செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு காரணம் இதிலிருக்கும் நைட்ரேட்டுகள் ஆகும்.

கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் ஏற்படுத்தும்
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் கர்ப்ப காலத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் நைட்ரேட்டின் விளைவுகளுக்கு அதிக உணர்திறன் உடையவர்கள். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவு பீட்ரூட் உண்ணும்போது, இரத்தத்தில் மெத்தெமோகுளோபின் அளவு உயர்ந்து, ஆற்றல் இல்லாமை, தலைவலி, தலைச்சுற்றல், தோலின் நிறம் மாறுபடுதல் போன்றவை ஏற்படும்.
பீட்ரூட் சாறு முக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. ஆனால் அதன் அதிகப்படியான உட்கொள்ளல் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ள விரும்பினால் மருத்துவரின் அறிவுரைபடி உட்கொள்வது நல்ல விளைவுகள ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications