Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நீங்கள் உங்கள் உணவில் அதிக உப்பு சேர்க்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
நீங்கள் உங்கள் உணவில் அதிகளவு உப்பு சேர்த்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் உங்களின் உணவில் அதிக உப்பு சேர்ப்பதை தெரிந்து கொள்ளலாம்.
உணவின் சுவையைக் கூட்ட உப்பு அவசியமான ஒன்று. ஆனால் உணவில் அதிக உப்பு சேர்க்கப் பழகினால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆரம்பத்திலேயே உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொண்டால், வயது அதிகரிக்கும் போது சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக தற்போது இரத்த அழுத்தம் வயதான அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால், உணவில் சேர்க்கும் உப்பை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வர வேண்டும்.

நீங்கள் உங்கள் உணவில் அதிகளவு உப்பு சேர்த்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் உங்களின் உணவில் அதிக உப்பு சேர்ப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆய்வுகளின் படி, ஒரு நாளைக்கு ஒருவர் 6 கிராம் உப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 7.2 கிராம் உப்பை அன்றாடம் எடுக்கிறார்கள். கீழே நீங்கள் அதிகமாக உப்பு உட்கொள்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகமாக சிறுநீர் கழிப்பது
அடிக்கடி நீங்கள் சிறுநீர் கழிக்கிறீர்களா? அப்படியானால் அது நீங்கள் அதிகளவு உப்பை உணவில் சேர்க்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். பெரும்பாலும், நள்ளிரவு நேரத்தில் எழுந்து சிறுநீர் கழிக்கக்கூடும். இருப்பினும், இம்மாதிரி சிறுநீர் கழிப்பது சிறுநீரக தொற்று, டைப்-2 சர்க்கரை நோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியும் கூட. எனவே இதன் சரியான காரணம் என்னவென்பதை அறிய சோதனை செய்து பாருங்கள். எதுவாயினும், அதிக உப்பு உணவில் சேர்த்தாலும், சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதை மறவாதீர்கள்.

தொடர்ச்சியான தாகம்
ஒருவர் அதிகளவு உப்பை உணவில் சேர்த்தால், அவர் தொடர்ச்சியான தாகத்தை உணரக்கூடும். அதிக சோடியம் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அது உடலின் திரவ சமநிலையில் இடையூறை ஏற்படுத்தி, தாகத்தை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்வதற்கான ஒரே சிறந்த வழி அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும்.

விசித்திரமான பகுதிகளில் வீக்கம்
அதிகளவு உப்பை உட்கொள்வது, உடலின் வெவ்வேறு பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். காலையில் உங்கள் முகம் வீங்கி காணப்படுவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் அதிக உப்புள்ள உணவை உண்பது விரல்கள் மற்றும் கணுக்கால் பகுதியைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான வீக்கமானது உடலின் திசுக்களில் அதிகளவு திரவங்கள் நிரம்பியிருப்பதால் ஏற்படுகிறது. இதை எடிமா என்றும் அழைப்பர். இந்த எடிமா பிரச்சனை அதிக உப்பு உட்கொள்வதை உணர்த்தும் ஓர் முக்கிய அறிகுறியாக நம்பப்படுகிறது. இதற்கு ஒரு எளிய தீர்வு என்னவென்றால், அது உணவில் உப்பைக் குறைப்பதாகும்.

இன்னும் உப்பு வேண்டுமென்ற உணர்வு எழுவது
ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும், உங்கள் உணவில் உப்பு இன்னும் சேர்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா? நீங்கள் உணவை பார்க்கும் போது சலிப்பாக உணர்கிறீர்களா? அப்படியானால், அதற்கு காரணம் நீங்கள் அதிக உப்பை உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கமாக இருக்கலாம். உணவில் அதிக உப்பு சேர்த்து வந்ததால், காலப்போக்கில் உங்கள் நாவில் உள்ள சுவை மொட்டுகள் அந்த சுவையுடன் ஒத்துபோகும் போகின்றன. இதன் விளைவாகவே உங்களுக்கு உணவில் இன்னும் அதிக உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் எழுகிறது.

அடிக்கடி லேசான தலைவலி
நீங்கள் அடிக்கடி லேசான தலைவலியை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால், இந்த தலைவலி நீரிழப்பு தூண்டப்படுவதால் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதிகளவு உப்பை உட்கொள்ளும் போது, நீரிழப்பு காரணமாக அடிக்கடி லேசான தலைவலியை ஏற்படுத்தும். இந்த தலைவலியை அதிக தண்ணீர் அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம்.

உப்புள்ள உணவுகளின் மீது நாட்டம்
உணவில் உப்பை அதிகம் சேர்த்து வந்ததால், உங்கள் சுவை மொட்டுகள் உப்பு சுவைக்கு ஏற்றவாறு மாறி, மீண்டும் மீண்டும் உப்புள்ள உணவுகளை உண்ண வேண்டுமென்ற நாட்டத்தை எழ வைக்கும். அதனால் தான் உங்களுக்கு திடீரென்று உப்புள்ள வேர்க்கடலை, சிப்ஸ் மற்றும் பிற உப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் எழுகிறது.



Click it and Unblock the Notifications
