Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
உங்க விரல்களை இப்படி தேயுங்க.. உங்க உடம்புல ஏற்படும் அதிசயத்தைப் பாருங்க...
நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உடலின் சில முக்கிய உறுப்புகள் ஒவ்வொரு விரல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நம் கை விரல்களை தேய்ப்பதன் மூலம் உடலில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என்பது தெரியுமா? ஆம் நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உடலின் சில முக்கிய உறுப்புகள் ஒவ்வொரு விரல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தான் குறிப்பிட்ட பகுதியில் மசாஜ் செய்யும் போது சில பிரச்சனைகள் சரியாகின்றன. இந்த விரல் முறை ஒரு பண்டைய ஜப்பானிய வைத்திய முறையாகும். நமது ஒவ்வொரு விரலும் ஒன்று அல்லது இரண்டு உறுப்புக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வலியில் இருந்து நிவாரணமானது 5 நிமிடத்தில் கிடைக்கும்.

இந்த ஜப்பானிய முறையில் கையில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம், ஒருவரது உணர்ச்சிகளில் சமநிலையை கொண்டு வர முடியும் என்று நம்பப்படுகிறது. அதுவும் ஒரு விரலை 3-5 நிமிடங்கள் தேய்ப்பதன் மூலம், அந்த விரலுடன் இணைக்கப்பட்டுள்ள உறுப்புக்களில் தாக்கம் ஏற்படுகிறது. அதாவது இந்த முறையைக் கொண்டு தலை வலி, செரிமான பிரச்சனை, இதய பிரச்சனை போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். இப்போது எந்த பிரச்சனைக்கு எந்த விரலை தேய்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.

பெருவிரல்
நமது பெருவிரல் என்று அழைக்கப்படும் கட்டை விரலுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் சரும பிரச்சனைகள், தலை வலி, வயிற்று வலி, வாய்வு தொல்லை மற்றும் நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால், உங்கள் பெருவிரலை 3-5 நிமிடம் தேய்ப்பதன் மூலம் நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

ஆள்காட்டி விரல்
நமது ஆள்காட்டி விரல் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே செரிமான பிரச்சனைகள், தசை வலி, பல் வலி, முதுகு வலி போன்றவற்றால் அவதிப்படும் போது, ஆள்காட்டி விரலை 3-5 நிமிடம் தேய்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

நடுவிரல்
நமது நடுவிரல் கல்லீரலுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தலைவலி, உடல் சோர்வு, ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் வலி அல்லது இரத்த ஒட்ட பிரச்சனை போன்றவற்றை எதிர்கொண்டால், நடுவிரலை 3-5 நிமிடம் தேய்ப்பதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மோதிர விரல்
மோதிர விரல் நுரையீரல் மற்றும் பெருங்குடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஆஸ்துமா, பிற சுவாச பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் அல்லது செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் போது, இந்த மோதிர விரலை தேய்ப்பதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுண்டு விரல்
சுண்டு விரல் இதயம் மற்றும் சிறுகுடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் இதய நோய், எலும்பு பிரச்சனை அல்லது தொண்டை புண் போன்ற பிரச்சனைகளை சந்தித்தால், சுண்டு விரலை தேய்த்திடுங்கள்.

உணர்வுகள் கட்டுப்படும்
விரல்களை மசாஜ் செய்யும் போது, அது நமது உணர்வுகளுடனும் விளையாடுகிறது. அதாவது ஒவ்வொரு விரலை தேய்க்கும் போது, அது நமது குறிப்பிட்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
* பெருவிரல் - கட்டை விரல் என்னும் பெருவிரலை தேய்க்கும் போது, அது கவலை மற்றும் மனச்சோர்வை போக்க உதவுகிறது.
* ஆள்காட்டி விரல் - பயம், அசௌகரியம் மற்றும் மனக்குழப்பத்தைப் போக்க உதவுகிறது.
* நடுவிரல் - எரிச்சலுணர்வு மற்றும் உறுதியற்ற தன்மையைப் போக்க உதவுகிறது.
* மோதிர விரல் - சோகம், பயம் மற்றும் அவநம்பிக்கையில் இருந்து விடுவிக்கிறது.
* சுண்டு விரல் - சுண்டு விரலை தேய்க்கும் போது, அது கவலை, பதட்டம் மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்றவற்றில் இருந்தும் விடுபட உதவுகிறது.



Click it and Unblock the Notifications
