Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...
ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலைக்கும், நோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. கிரகங்களின் கூட்டணி பார்வை சேர்க்கை நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பரிகாரம் உள்ளது.
இன்றைக்கு புதிது புதிதாக நோய்களால் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்வதைப் போல ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் சென்று பரிகாரம் தேடுகின்றனர். ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலைக்கும், நோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. கிரகங்களின் கூட்டணி பார்வை சேர்க்கை நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பரிகாரம் உள்ளது.
மூட்டு வலி எனப்படும் ஆர்த்தடைடீஸ் பாதிப்பு அனைத்து வயதினரையும் தாக்குகிறது. ஆர்த்தடீஸ் எனப்படும் முடக்குவாத நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 12ஆம் தேதி உலக ஆர்த்ரைடிஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது கூட வாத நோயை போக்கும் மூட்டு கை கால் வலிகளை நீக்கும். ஜோதிட ரீதியாக ஆர்த்தடீஸ் நோய் ஏன் வருகிறது என்றும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

மூட்டு வலி மாத்திரை மருந்துகளும், இடுப்பு வலி கை கால் சுளுக்கு வலிக்கு விற்பனையாகும் மருத்து மாத்திரைகளும் தைலங்களும் கோடிக்கணக்கில் வருமானத்தை தருகின்றன. மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. வீக்கம் கண்ட பகுதி சிவந்தும் வெப்பமாகவும் இருக்கும்.
மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். காய்கறிகள் வெட்டும் வேலையைக் கூட செய்ய முடியாது. இதற்குக் காரணம் மரபியல் ரீதியாகவும் உள்ளது. இன்றைக்கு சாப்பிடும் உணவுகளும் காரணமாக உள்ளன.

சத்தான உணவுகள்
மூட்டு வீக்கம் அதை சுற்றி சிவப்பு தோன்றுவது ஆர்த்தரடீஸ். மூட்டு தேய்ந்து போவது. மூட்டு வலியைத்தான் கால் வலி என்கின்றனர். இளம் வயதினருக்கு ருமடாய்டு ஆர்த்தரடைடீஸ். இது உணவினால் வருவது. டயட் ரொம்ப முக்கியம். சாப்பிடற உணவு முக்கியம். சத்தான உணவு. அசிட்டிக் உணவு மட்டன், சிக்கன், சாப்பிடக்கூடாது. கீரை நிறைய சாப்பிடனும் கால்வலி குறையும். ஆஸ்திரியோ ஆர்த்தடைடீஸ் மூட்டில் அடிபடாமல் பார்க்கணும்.

பரம்பரை நோய்
அடிப்படையினால் வருவது நடக்க முடியாமல் போவது கை கால்கள் வீங்கி வலி வருவது கஷ்டப்படுவது ருமடாய்டு ஆர்த்தடைடீஸ். காலையில் எழுந்து வேலை செய்ய முடியாது கொடுமையானது. அம்மாவிற்கு பாட்டிக்கு அதே போல இருந்தால் இந்த நோய்கள் வரும். நாம் சாப்பிடும் உணவு குடிக்கும் தண்ணீர் கூட இதற்கு காரணமாக இருக்கும்.

சனியினால் வரும் வாத நோய்
ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கு ஜாதகத்தில் மந்தன் எனப்படும் சனீஸ்வரனே காரணம் என்றாலும் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது.

எலும்புக்கு காரகம்
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய எலும்போடு தொடர்புடைய கிரகங்கள் லக்னத்தில் நின்று சனியோடு தொடர்பு கொள்ளும்போது வாத நோய் ஏற்படுகிறது. சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது, சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது, சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது வாத நோயை தரும். சனியும் செவ்வாயும் 6, 8 அல்லது 12 வீட்டில் நிற்பது மூட்டுவலியை ஏற்படுத்தும்.

முதுகு வலி, மூட்டு வலி
ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை எற்படுத்துகிறது. பத்தாம் வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இணைந்தாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.

கால்சியம் சத்து குறைவு
எலும்புகளில் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்றாலும் கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இணைவு பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தபடுவது பாதிப்பை ஏற்படுத்தும்.

சனியால் வரும் நோய்கள்
சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது பாதிப்பை ஏற்படுத்தும். லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது மூட்டுவலியை ஏற்படுத்தும். மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு மூட்டு வலி வரும். எட்டில் புதன் நின்றால் சுவாச கோளாறு, வாயுத்தொல்லை, கை கால் முடக்கவாதம் பாதிப்பு ஏற்படுகிறது.

சூரிய நமஸ்காரம்
சூரிய பகவானை தினசரியும் காலையில் வணங்குவது நல்லது. சூரிய நமஸ்காரம் வாத நோய் ஏற்படுவதை தடுக்கும். புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவகிரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு சாப்பிடுவது நல்லது. முதியவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யலாம். செருப்பு, குடை கைத்தடி தானமாக தரலாம்.

தன்வந்திரி பூஜை
வித விதமான வரங்களை அள்ளித்தரும் விஷ்ணுவின் திருத்தலமான ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நல்வாழ்வு பெற ஹோமம் நடைபெறுகிறது. திருவோணம் தினத்தன்று ஹோமத்திலும் தன்வந்திரி ஹோமத்திலும் பங்கேற்கலாம். நீரிழிவு நோய் கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெறுகிறது. தீபாவளியை முதல்நாள் தன்வந்திரி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் யாகங்கள் நடைபெறுகிறது. இந்த யாகங்களில் பங்கேற்கலாம்.

தீபாவளி நல்லெண்ணெய் குளியல்
சனியினால் ஏற்பாடும் பாதிப்பை சரிசெய்ய சனிபகவானை சரணடைவதுதான் நல்லது. சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றலாம். சனிஸ்வரபகவானுக்கு உகந்த சனி கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை ஸ்நானம் செய்யலாம். இதில் நல்லெண்ணைய் சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவதால் மூட்டு தேய்மானத்தை குறைக்கிறது. தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஊறவைத்து வெந்நீரில் குளிங்க வாத நோய் முடக்குவாதம் கட்டுப்படும். பெரியவங்க காரணம் இல்லாம எந்த சம்பிரதாயத்தையும் செய்திருக்க மாட்டாங்கதானே.



Click it and Unblock the Notifications