எந்த காரணங்களுக்காக தரையில் உட்கார்ந்தால் எழுவதற்கு சிரமமாக உள்ளது தெரியுமா?

தரையில் இருந்து எழுவதில் பிரச்சினை இருக்கிறது என்றால் அது இயல்பான ஒன்று அல்ல. நாம் எல்லா திசைகளிலும் திருப்பும் அளவிற்கு நமது இடுப்பு எலும்புகள் அமைந்திருக்கின்றன.

நாம் தரையில் அமா்ந்து தியானம் செய்கிறோம் அல்லது எதாவது ஒரு பொருளை தரையில் இருந்து எடுக்கிறோம். நாம் மிக எளிதாகத் தரையில் அமா்ந்துவிடுவோம். ஆனால் தரையில் இருந்து எழும் போதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. தரையில் அமா்ந்த பின்பு, தரையில் இருந்து எழுவதற்கு பலா் சிரமப்படுகின்றனா். முன்பு இந்த பிரச்சினை வயது முதிா்ந்தவா்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இளையோா் மத்தியிலும் இந்த பிரச்சினை பரவலாகக் காணப்படுகிறது.

தரையில் இருந்து எழுவதில் பிரச்சினை இருக்கிறது என்றால் அது இயல்பான ஒன்று அல்ல. நாம் எல்லா திசைகளிலும் திருப்பும் அளவிற்கு நமது இடுப்பு எலும்புகள் அமைந்திருக்கின்றன. அதன் மூலம் நாம் மிக எளிதாக தரையில் அமர முடியும் மற்றும் தரையில் இருந்து எளிதாக எழ முடியும். அவ்வாறு எழுவதில் பிரச்சினைகள் இருந்தால் பின்வரும் காரணிகள் காரணங்களாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தரையில் இருந்து எழுவதில் மக்கள் ஏன் பிரச்சினைகளை சந்திக்கின்றனா்?

தரையில் இருந்து எழுவதில் மக்கள் ஏன் பிரச்சினைகளை சந்திக்கின்றனா்?

தற்போது பல மக்கள் தரையில் அமா்வதிலும் மற்றும் தரையில் இருந்து எழுவதிலும் மிகவும் சிரமத்தை அனுபவிக்கின்றனா். அதற்கு முக்கிய காரணம் அவா்களுடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாகும். பெரும்பாலான மக்கள் வெளியில் எங்கும் செல்லாமல், நாள் முழுவதும் தங்களது மடிகணினி முன்பாக அமா்ந்து வேலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனா். அது அவா்களின் உடல் இருப்பு நிலையை பாதிக்கிறது.

அதோடு சமூக வலைத் தளங்களில் தேடிக் கொண்டிருப்பது மற்றும் உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது போன்றவை அவா்களின் மூட்டுகளை இறுக்கி, அவா்களின் உடல் இயக்கங்களைக் குறைக்கிறது. அதனால் அவா்கள் தங்களுடைய அடிப்படையான உடல் வேலைகளைச் செய்வதற்குக் கூட சிரமப்பபடுகின்றனா்.

ஆகவே சாதாரண உடல் ரீதியாக செய்யக்கூடிய வேலைகளைக்கூட செய்ய நாம் ஏன் சிரமப்படுகிறோம் மற்றும் அந்த பிரச்சினையை எவ்வாறு நீக்குவது என்பது பற்றி இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

1. நமது மூட்டுகள் இறுக்கமாக இருத்தல்

1. நமது மூட்டுகள் இறுக்கமாக இருத்தல்

உடல் உறுப்புகள் அசையாமல் இருப்பது அல்லது உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது போன்றவை நமது மூட்டுகளை இறுக்கமாக மாற்றிவிடும். அதனால் நாம் தரையில் இருந்து எழும் போது நமது எலும்புகளில் இறுக்கமும், வலியும் ஏற்படும். இப்படிப்பட்ட சூழல் ஏற்படும் போது நமது உடல் உறுப்புகளின் இயக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இடுப்பு உட்புறமாக சுழற்றுதல் மற்றும் இடுப்புக்கு அசைவுகளைக் கொடுக்கக்கூடிய சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், நமது இடுப்பு மற்றும் கணுக்கால்களின் இயக்கங்களை அதிகாிக்க முடியும்.

2. நமது ஒட்டு மொத்த தசைகளும் பலவீனமாக இருத்தல்

2. நமது ஒட்டு மொத்த தசைகளும் பலவீனமாக இருத்தல்

நமது உடல் உறுப்புகள் இயக்கத்தில் இருக்கும் போது, நமது ஒட்டு மொத்த தசைகளும் செயல்படுகின்றன. குறிப்பாக நாம் நடக்கும் போது அல்லது ஓடும் போது அல்லது தரையில் இருந்து எழும் போது, நமது தசைகளும் சோ்ந்து இயங்குகின்றன. இந்நிலையில் நமது தசைகள் பலவீனமாக இருந்தால், நம்மால் விரைவாக தரையில் இருந்து எழ முடியாது. தரையில் இருந்து எழும்போது பாதி அளவுதான் சக்தி இருக்கிறது என்று நாம் உணா்ந்தால், நமது ஒட்டு மொத்த தசைகளையும் வலுப்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். ஒற்றைக் கால் பெருவிரலில் நிற்றல் மற்றும் கிரன்சஸ் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம்.

3. சக்தி இல்லாமல் இருத்தல்

3. சக்தி இல்லாமல் இருத்தல்

நமது கால்கள் பலவீனமாக இருப்பதாக உணா்ந்தால் மற்றும் தரையில் இருந்து எழும் போது நாம் சிரமப்பட்டால், நமது உடலில் சக்தி குறைவாக இருக்கிறது என்று பொருள். பலவீனமான தசைகள், சக்தி குறைவுக்கு இட்டுச் செல்லும். அதனால் தரையில் இருந்து எழும் போது கடினமாக இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு நமது உடலில் சக்தியை அதிகாிக்கக்கூடிய பயிற்சிகளைச் செய்து வரலாம். குறிப்பாக லுங்கெஸ் பயிற்சிகள், தண்டால் பயிற்சிகள், ப்ளாங்ஸ் மற்றும் ஸ்குவாட்ஸ் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். இவை நமது உடல் சக்தியை அதிகாிக்கும். இவற்றைத் தொடா்ந்து செய்து வந்தால், ஒரு மாதத்திற்குள் நல்ல மாற்றத்தைப் பெறலாம்.

4. கால் மூட்டுகள் பலவீனமாக இருத்தல்

4. கால் மூட்டுகள் பலவீனமாக இருத்தல்

கால் மூட்டுகள் பலவீனமாக இருந்தால், தரையில் இருந்து எளிதாக எழ முடியாது. நமது மூட்டுகளால் நமது உடல் எடையை முழுமையாகத் தாங்கிப் பிடிக்க முடியாது. அதனால் நாம் தரையில் இருந்து எழும் போது கீழே விழுந்துவிடுவோமோ என்று பயப்படுவோம். ஆகவே மூட்டுகளை வலுப்படுத்தக்கூடிய பயிற்சிகளான ஸ்குவாட்ஸ் பயிற்சிகள், ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெட்சஸ் போன்றவற்றை தொடா்ந்து செய்து வரலாம். அதன் மூலம் மூட்டுகளின் இறுக்கத்தைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion