Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
இந்த பிரச்சனை இருந்தா தான் ஒருவர் வாயை திறந்து தூங்குவாங்களாம்.. உங்களுக்கு இருக்கா-ன்னு பாருங்க..
உடலில் வேறு பிரச்சனைகள் இருந்தாலும், ஒருவர் வாயை திறந்து தூங்கக்கூடும். இப்போது அந்த பிரச்சனைகள் என்னவென்பதைக் காண்போம்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தூங்குவோம். சிலர் தூங்கும் போது வாயைத் திறந்து கொண்டு தூங்குவார்கள். பெரும்பாலும் தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கும் போது, வாயின் வழியே சுவாசிக்க முனைந்து, வாயை திறந்து கொண்டு தூங்க நேரிடுகிறது. பெரும்பாலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) பிரச்சனையை கொண்டவர்கள் தான் வாயைத் திறந்து தூங்குவார்கள். ஆனால் இந்த பிரச்சனை இல்லாத பலரும் வாயைத் திறந்து கொண்டு தூங்குவதுண்டு. அது ஏன் தெரியுமா?

குறிப்பாக நேராக தூங்குபவர்கள் பலர் இந்த மாதிரி வாயை திறந்து தூங்குவார்கள். ஏனெனில் நேராக தூங்கும் போது, மூக்கில் உள்ள இரத்த நாளங்கள் இரத்தத்தால் நிரப்பப்படுகிறது. இதனால் மூக்கில் உள்ள இரத்த நாளங்கள் வீங்கி, காற்று செல்லும் பாதை சுருங்குகிறது. இதன் விளைவாக மூக்கின் வழியே சுவாசிப்பது சிரமமாகி, எளிதாக சுவாசிப்பதற்கு ஒருவர் தன்னை அறியாமலேயே வாயை திறந்து தூங்குகிறார். இது மட்டுமின்றி, உடலில் வேறு பிரச்சனைகள் இருந்தாலும், ஒருவர் வாயை திறந்து தூங்கக்கூடும். இப்போது அந்த பிரச்சனைகள் என்னவென்பதைக் காண்போம்.

ஆஸ்துமா
நுரையீரலில் ஏற்படும் அழற்சியால் உண்டாவது தான் ஆஸ்துமா. இப்பிரச்சனை உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமத்தையும், மூச்சுத்திணறலையும் சந்திப்பார். ஆஸ்துமா குணமாவதற்கு நீண்ட காலம் எடுக்கும். மற்றும் அதனால் ஏற்படும் நெரிசலானது மெதுவாகவே குறையும். இந்த சூழ்நிலையில் உடலானது வாய் வழியாக சுவாசிக்க பழகுகிறது. ஆகவே தான் ஆஸ்துமா நோயாளிகள் தூங்கும் போது வாயை திறந்து தூங்குகிறார்கள்.

மன அழுத்தம்
எப்போது ஒருவர் அதிக மன அழுத்தம் மற்றும் கவலை அல்லது பதட்டத்துடன் இருக்கிறாரோ, அவர் தூங்கும் போது, வாயைத் திறந்து கொண்டு தூங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில், அதிக கவலையில் இருக்கு போது, அவர் வேகமாகவும் ஆழமாகவும் சுவாசிப்பார். இந்நிலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் தூங்கும் போது வேகமாக சுவாசிப்பதால் வாயை திறந்து தூங்க நேரிடுகிறது.

அலர்ஜி
வாயைத் திறந்து கொண்டு ஒருவர் தூங்குவதற்கு மற்றொரு காரணம் அலர்ஜி ஆகும். ஒருவருக்கு எப்போது அலர்ஜி ஏற்படுகிறது தெரியுமா? உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது உடலைப் பாதுகாக்க உடலினுள் நுழைந்த வெளிநாட்டுப் பொருட்களை எதிர்த்துப் போராடும் போது அலர்ஜி ஏற்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில், ஒருவர் தூங்கும் போது, அவர் வேகமாக சுவாசித்து, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளை வெளியேற்ற முயற்சிப்பார். இதன் விளைவாக தூக்கத்தில் வாய் வழியாக சுவாசிக்க நேரிடுகிறது.

சளி மற்றும் இருமல்
அதிக சளி பிடித்து மூக்கடைப்பு ஏற்பட்டால், உடலானது ஆக்ஸிஜனைப் பெற வாய்வழியாக சுவாசிக்க முனைகிறது. இது தவிர சளியுடன் கூடிய சைனஸ் பிரச்சனையைக் கொண்டவர்களும், வாய் வழியாக சுவாசிக்கின்றனர். மொத்தத்தில் சளி பிடித்திருக்கும் போது, ஒருவர் தூங்கினால், அவர்கள் வாயை திறந்து தூங்குவார்கள்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனையைக் கொண்டவர்கள் தூக்கத்தில் வாயை திறந்து கொண்டு தூங்கலாம். நீங்களும் வாயை திறந்து கொண்டு தூங்குவீர்களா? அப்படியானால் உங்களுக்கும் இப்பிரச்சனைகளுள் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
