Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
கொரோனா, எபோலாவை விட கொடியது 'சப்பரே வைரஸ்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
எச்சரிக்கை! பொலிவியாவில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவக்கூடிய கொடிய வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எச்சரிக்கை! பொலிவியாவில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவக்கூடிய கொடிய வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொடிய சப்பரே வைரஸ் தற்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா மற்றும் 2004 ஆம் ஆண்டு அச்சுறுத்திய எபோலாவை விட கொடியது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பொலிவியாவில் எபோலா போன்ற இரத்தக்கசிவு காய்ச்சலை உண்டாக்கக்கூடிய வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரிய வகை வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா அச்சத்துடன் தங்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கும் வேளையில் இம்மாதிரியான ஒரு புதிய கொடிய வைரஸ் குறித்த செய்தி வெளிவந்திருப்பது, பலருக்கும் பீதியைக் கிளப்புகிறது என்றே கூற வேண்டும்.

சப்பரே வைரஸ் என்றால் என்ன?
சப்பரே வைரஸ் காய்ச்சலானது எபோலா காய்ச்சலை உண்டாக்கும் அரேனா வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் எலிகள் மூலமாக பரவக்கூடியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட எலி மற்றும் அதன் சிறுநீர், எச்சில் போன்ற நீர்த்துளிகளுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம், இந்த வைரஸ் மக்களுக்கு பரவுகிறது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது எளிதில் பரவுகிறது. அதுவும் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகளுடன் தொடர்பு கொள்ளும் போது மட்டுமே இந்த வைரஸ் பரவுகிறது.

சப்பரே வைரஸ் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்த கோவிட்-19 போன்ற தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டது தான் சப்பரே வைரஸ். சில நாட்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதார சங்கத்தின் (American Society of Tropical Medicine and Hygiene) வருடாந்திர கூட்டத்தின் போது, 2019 இல் சப்பரே வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்த போது, இது மனிதனுக்கு மனிதன் பரவலாம் என்று கண்டுபிடித்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.

சப்பரே வைரஸ் என்ற பெயர் எவ்வாறு வந்தது?
சப்பரே வைரஸ் பொலிவியாவில் உள்ள லா பாஸுக்கு கிழக்கே அமைந்துள்ள சப்பரே பகுதியில் இருந்தது. இந்த பகுதியில் தோன்றியதால், இதற்கு சப்பரே வைரஸ் என்று பெரியரிடப்பட்டது. இந்த வைரஸ் 2004 ஆம் ஆண்டு வெடித்த எபோலா போன்ற ஒரு இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியவை.

CDC தொற்றுநோயியல் நிபுணர் கூற்று...
சப்பரே வைரஸ் லா பாஸில் உள்ள மூன்று சுகாதார பணியாளர்களுக்கு பரவியிருந்தது. அதில் ஒருவர் இறந்துவிட்டார். இதுக்குறித்து விரிவாக ஊடகங்களுடன் பேசிய CDC தொற்றுநோயியல் நிபுணர் கெய்ட்லின் கோசாபூம், ஒரு இளம் மருத்துவ குடியிருப்பாளர், ஆம்புலன்ஸ் மருத்துவர் மற்றும் ஒரு இரைப்பை குடலியல் நிபுணர் என மூவரும் வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளை சந்தித்த பின்னர், அவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். மேலும் இந்த வைரஸானது பல உடல் திரவங்களில் கொண்டு செல்லக்கூடும் என்று நம்புவதாக கூறினார்.

சப்பரே வைரஸின் அறிகுறிகள் என்ன?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) படி, வைரஸானது மனித உடலினுள் நுழைந்தும், பாதிக்கப்பட்ட நபர் காய்ச்சல், அடிவயிற்று வலி, தலை வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, ஈறுகளில் இரத்தக்கசிவு, வாந்தி, சரும அரிப்பு மற்றும் கண்களுக்கு பின் நாள்பட்ட வலி போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும்.
சப்பரே வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் என்பதால், எதிர்காலத்தில் இது ஒரு பெருந்தொற்றாக உருவெடுக்கக்கூடும். எனவே இந்த வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியது சி.டி.சி-யின் சுகாதார நிபுணர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

சப்பரே வைரஸிற்கான சிகிச்சை
தற்போது சப்பரே வைரஸிற்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் சரியான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை பின்பற்றினால், எப்பேற்பட்ட வைரஸும் நம்மை அண்டாது.



Click it and Unblock the Notifications