For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..

ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானத்தை கையில் ஏந்தியவாறு ஒரு போட்டோவைப் போட்டுள்ளார்.

|

கடந்த சில நாட்களில் நாம் கற்றுக் கொண்ட ஆரோக்கியம் குறித்த முக்கியமான ஒரு விஷயம் என்றால் அது நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம். அதுவரை நாம் நமது நோயெதிர்ப்பு மண்டலம் குறித்து கவலைப்படாமல், அதற்கு தீங்கு விளைவிக்கும் மோசமான வாழ்க்கைமுறை பழக்கங்களைக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில், நோயெதிர்ப்பு சக்தியின் மகிமையை உணர்ந்துள்ளோம். மேலும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க பல ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம்.

Do You Know What Rakulpreet Singh Drinks To Boost Immunity? Know The Recipe

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை, பலரும் தங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறோம். அதில் நடிகை ரகுல்ப்ரீத் சிங் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர் அருந்தும் ஒரு பானம் குறித்து பகிர்ந்து கொண்டார். உங்களுக்கு அவர் எந்த பானத்தை குடிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்பெஷல் பானம்

ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்பெஷல் பானம்

ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானத்தை கையில் ஏந்தியவாறு ஒரு போட்டோவைப் போட்டு, அத்துடன் அந்த ரெசிபியை அவருக்கு சொல்லிக் கொடுத்த ஊட்டச்சத்து நிபுணரும், நீரிழிவு கல்வியாளருமான ராஷிசௌத்ரிக்கு நன்றியைத் தெரிவித்து, அந்த ரெசிபியின் செய்முறையையும் குறிப்பிட்டிருந்தார்.

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* மஞ்சள் தூள்

* இஞ்சி

* மிளகு

* பட்டை

* கிராம்பு

* தேன்

* தண்ணீர் - 500 மிலி

செய்முறை:

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, அடுப்பில் வைக்க வேண்டும்.

* நீர் சற்று சூடானதும், அதில் தேனைத் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

* நீரானது பாதியாக குறைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, பானத்தைக் குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை வடிகட்டி, அதில் சுவைக்குத் தேவையான தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் ஒரு கப் குடிக்க வேண்டும்.

காபி, டீ-க்கு சிறந்த மாற்று

காபி, டீ-க்கு சிறந்த மாற்று

ரகுல் ப்ரீத் சிங் இந்த பானம் மிகவும் சுவையானது என்றும், இதை தினமும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். காபி மற்றும் டீ உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில் அதில் காப்ஃபைன் உள்ளது. எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க நினைத்தால், இனிமேல் வீட்டில் காபி, டீ-க்கு பதிலாக இந்த பானத்தை தயாரித்துக் குடியுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம்

நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம்

நோயெதிர்ப்பு சக்தி குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதற்கு காரணம், கொடியா கொரோனா வைரஸிற்கு எந்த ஒரு தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்றிக் கொண்டால், அதிலிருந்து மீள்வதற்கு நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும். ஆகவே தான் மருத்துவர்கள், பிரதமர்கள், பிரபலங்கள் என அனைவருமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களையும், உணவுப் பொருட்களையும் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா நோயாளிகள்

கொரோனா நோயாளிகள்

உலகெங்கிலும் கொரோனா வைரஸால் 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 31 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ளனர். மேலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளன. நம் ஆரோக்கியம் நம் கையில் தான் உள்ளது என்பதை மறவாமல், சமூக விலகலைக் கடைப்பிடித்து, நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்தும் உணவுகள் மற்றும் பானங்களை தினமும் உட்கொண்டு, கொரோனாவை அண்டாமல் தடுப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rakul Preet Singh Shares a Simple and Effective Immunity Boosting Drink: Here's is the recipe

Actress Rakulpreet Singh shares the recipe of the immunity-booster drink that she is loving these days. Read on...
Desktop Bottom Promotion