Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னும் பின்னும் மறக்காம இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. இல்ல ஆபத்தாயிடும்..
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை ஒருவர் போட்டுக் கொள்வதற்கு முன்னும், பின்னும் கட்டாயம் ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட தடுப்பூசி பணி நடந்து வரும் நிலையில், மக்கள் கோவிட் தடுப்பூசி போடுவதற்கு மிகவும் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் உள்ளனர். இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசியால் சந்திக்கக்கூடும் சில பக்கவிளைவுகளின் பட்டியல் வெளிவந்த பின்னரும், பலர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு முன்வருகின்றனர்.

இருப்பினும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை ஒருவர் போட்டுக் கொள்வதற்கு முன்னும், பின்னும் கட்டாயம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தில் கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் எடுக்கலாம்?
இந்தியாவில் கோவிட் தடுப்பூசியானது பொது மக்களுக்கு போடுவதற்கு 2021 ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2021 மார்ச் 1 ஆம் தேதி அன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி பணியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் போட்டு தொடங்கப்பட்டது. எந்த விதிவிலக்குகளும் இல்லாமல் வயதானவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் கூறி அனுமதி பெற வேண்டும்.

மருத்துவரின் அனுமதி தேவை
நீங்கள் இளமையாகவும், ஆரோக்கியமானவராகவும் இருந்தால் தடுப்பூசி போடுவதால் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படாது. இருப்பினும், 45 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் மற்றும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டவராக இருந்தால், மருத்துவரை அணுகி கொரோனா தடுப்பூசி எடுப்பது பாதுகாப்பானதா இல்லையா என்று கேட்க வேண்டியது முக்கியம். இந்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசியை "அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் மேற்பார்வையில்" தான் எடுக்க வேண்டும்.

தடுப்பூசிக்கு முன், நீங்கள் எடுக்கும் மருந்துகளுக்கு அனுமதி பெறவும்
மருத்துவரை அணுகுவதைத் தவிர, குறிப்பிட்ட மருந்துகளுக்கு அலர்ஜி இருந்தால், அதைப் பற்றி மருத்துவரிடம் கூறி, மருத்துவரின் அனுமதியைப் பெற வேண்டும். ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள், ஊசிகள் போன்றவற்றால் அலர்ஜி ஏற்படும் நோயாளிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசிக்கு முன், ஆரோக்கியமான உணவை உண்ணவும்
கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்பு நல்ல ஆரோக்கியமான உணவை உண்பது மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இதைத் தொடர்ந்து, உங்கள் மருத்துவரின் வழிகாட்டுதல்களின் கீழ் நீங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகளையும் எடுக்க வேண்டும்.

யாரெல்லாம் தடுப்பூசி எடுக்கக்கூடாது?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இரத்த பிளாஸ்மா சிகிச்சை அல்லது மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் வடிவில் கோவிட் சிகிச்சையைப் பெறுபவர்கள், கொரோனா தடுப்பூசி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தடுப்பூசிக்கு பின், உங்களை கவனிக்கவும்
நீங்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி எடுத்திருந்தால், ஒரு சுகாதாரப் பணியாளரால் உங்களை கண்காணித்து, உங்களுக்கு கொரோனா தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகளை சந்திக்கிறீர்கள் என்று சோதித்துப் பாருங்கள்.

லேசான பக்க விளைவுகளுக்கு பதற வேண்டாம்
கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னர், வலி, நமைச்சல், காய்ச்சல் அல்லது சோர்வுடன் சில அசௌகரியங்கள் அல்லது அலர்ஜியை சந்தித்தால், உடனே பதற்றம் அடைய வேண்டாம். ஏனெனில் இவையெல்லாம் தடுப்பூசியானது நோயெதிர்ப்பு மண்டலத்துடன் வினைபுரியும் போது, அது வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் தான்.

கொரோனா தடுப்பூசிக்கு பின் தவறாமல் பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்
கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னர், மாஸ்க் அணியத் தேவையில்லை என்று நினைத்துவிட வேண்டாம். எப்படி தடுப்பூசிக்கு முன் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடித்தீர்களோ, அதைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு கண்ட இடங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும் மற்றும் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications