Latest Updates
-
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம்
உங்க அம்மா நீண்ட நாள் ஆரோக்கியமா உங்க கூட இருக்கணுமா? அப்ப அன்னையர் தினத்தன்று இத செய்யுங்க போதும்.!
Mother's Day 2023: அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தன்னை உலகிற்கு கொண்டு வந்த தங்களின் அம்மாவிற்கு விலைமதிப்பற்ற பரிசை வழங்க வேண்டுமென நினைப்பார்கள். அதில் சிலர் விலையுயர்ந்த புடவையை தங்கள் அம்மாவிற்கு வாங்கி கொடுப்பார்கள்.
இன்னும் சிலர் தங்கள் அம்மாவிற்கு விலையுயர்ந்த போனை வாங்கித் தருவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவை உண்மையிலேயே விரும்புகிறீர்கள் என்றால் இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

உங்கள் அம்மா நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், அவர்களுக்கு மற்ற பரிசுகளை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, அவர்களை மருத்துவமனைக்கு அழைததுச் சென்றால் அவர்களின் உடல்நிலையை கவனித்து, அவருக்கு தேவையான அனைத்து மருத்து பரிசோதனைகளையும் செய்யுங்கள்.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. தற்போதைய பிஸியான வாழ்க்கை முறையால், தாய்மார்கள் தங்களின் பிரச்சனைகளை வெளியே சொல்லமாட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவுடன் நேரத்தை செலவிட்டு, அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்து அவரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதை விட சிறந்த அன்னையர் தின பரிசாக வேறு எதுவும் இருக்க முடியாது.

இதய பரிசோதனை
50 வயது ஆகிவிட்டாலே ஒவ்வொருவருமே ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ECG, Echo, EKG (எலக்ட்ரோ கார்டியோகிராம்) BP மற்றும் TMT போன்ற சோதனைகளை தவறாமல் செய்து பார்க்க வேண்டும். இதனால் இதய நோயின் அபாயத்தை முன்னரே அறிந்து, அதை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம்.

இரத்த அழுத்த பரிசோதனை
உயர் இரத்த அழுத்தம் என்னும் பிரச்சனையானது எவ்வித அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், இது அமைதியாக ஆளை கொல்லக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. ஆகவே தான் சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலும்பு அடர்த்தி பரிசோதனை
60 வயதாகிவிட்டால், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரையும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் தொடங்கி பெரும் கஷ்டப்படுத்தும். மேலும் இந்த வயதில் தான் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயமும் அதிகம். எனவே ஆண்டிற்கு ஒருமுறை எலும்பு அடர்த்தி பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உளவியல் பரிசோதனை
40-45 வயதில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிற்கிறது. இதனால் இந்த வயதில் பெண்கள் மனநிலை மாற்றங்கள், மன இறுக்கம், தூக்கமின்மை, எரிச்சலுணர்வு போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக இந்த வயதில் 75% பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கொலஸ்ட்ரால் பரிசோதனை
ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் கொலஸ்ட்ரால் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும். சர்க்கரை நோய், இதயம் அல்லது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையில் பேரில் விரைவில் பரிசோதனைகளை செய்யுங்கள்.

கண் பரிசோதனை
வயதிற்கு ஏற்ப கண்களில் கண்புரை அல்லது க்ளுக்கோமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே வயது அதிகரிக்கும் போது 6 மாதத்திற்கு ஒருமுறை கண்களை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications
