Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? இனி உங்களுக்கு கொரோனா வந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதுதாங்க...
தற்போது உலகளவில் பல திருப்புமுனை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுஎன்ன வழக்குகள் என்றால், தடுப்பூசி போட்டவர்களையும் கொரோனா பாதிக்கிறது மற்றும் அவர்களில் பெரும்பாலானோர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகும்.
இன்று வரை கொரோனா வைரஸ் பல கொடிய உருமாற்றங்களை அடைந்து மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நம்மிடம் இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதில்லை என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே கொரோனாவின் புதிய பிறழ்வுகள் தடுப்பூசிகளில் பொருத்தப்பட்ட ஆன்டிபாடிகளில் இருந்து எளிதில் தப்பிக்கக்கூடும். ஆகவே தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

தற்போது உலகளவில் பல திருப்புமுனை வழக்குகள் பதிவாகியுள்ளன. அது என்ன வழக்குகள் என்றால், தடுப்பூசி போட்டவர்களையும் கொரோனா பாதிக்கிறது மற்றும் அவர்களில் பெரும்பாலானோர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகும். அதோடு தடுப்பூசி போடப்படாதவர்களுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது, அது தீவிரத்தன்மை, மருத்துவமனையில் சேர்க்கும் ஆபத்து மற்றும் இறப்பு அபாயம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுகிறது. மேலும் தடுப்பூசி போட்ட பின் கொரோனா வந்தால், அது உணர்த்தும் அறிகுறிகளில் வேறுபாடுகள் இருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

தடுப்பூசியும்... நோய்த்தொற்றின் அபாயமும்...
தடுப்பூசியின் வேலை கொரோனா வைரஸிற்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை வழங்கி, பாதுகாப்பு அளிக்கும் ஆன்டிபாடிகளை உடனடியாக வழங்குவதாகும். இருப்பினும், தடுப்பூசிகள் நூறு சதவீத பாதுகாப்பை வழங்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால் இவை நோய்த்தொற்றுக்களின் அபாயம், பரவும் வீதம், தீவிர அளவு மற்றும் இறப்பு ஆகியவற்றின் ஆபத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட்டாலும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் மற்றும் நீங்கள் போட்ட தடுப்பூசி வகையைப் பொறுத்து, தீவிரம் மற்றும் அறிகுறிகள் வேறுபடக்கூடும் என்பதை மறவாதீர்கள்.

இங்கிலாந்து கணக்கெடுப்பு
இங்கிலாந்தை மையமாக கொண்ட ஜோ சிம்ப்டம் ஸ்டடி ஆப் இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதில் பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவுகளில் உள்ள அறிகுறிகளை வழக்கமாக ஆய்வு செய்தது. அதில் தடுப்பூசி போட்டவர்கள் குறிப்பாக சில அறிகுறிகளால் பாதிக்கப்படுவதாகவும், அப்படி சந்திக்கும் அறிகுறிகள் கவனிக்கப்படாமல் போகலாம் என்பது தெரிய வந்தது.
ஆகவே தடுப்பூசி போட்டாலும் நோய்த்தொற்றின் ஆபத்து இருக்கும் என்பதால், தடுப்பூசிக்கு பின் தாக்கும் கொரோனா வைரஸின் அறிகுறிகளை அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.

தலைவலி
SARS-COV-2 வைரஸின் பொதுவான அறிகுறிகளில் தலைவலியும் ஒன்றாகும். மேலும் இது டெல்டா வகை கொரோனாவின் அறிகுறியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் கொரோனா நோய்த்தொற்று இருந்தால், அதனால் வீக்கம் ஏற்பட்டு, அதன் விளைவாக தலைவலி ஏற்படலாம். சில சமயங்களில் தசை வலி மற்றும் உடல் வலி போன்றவற்றையும் சந்திக்கலாம். ஒருவருக்கு தலைவலி 3 நாட்களுக்கு மேல் நீடித்திருந்தால், அது குறிப்பிட்ட வகையான விறைப்பு, உணர்ச்சியற்ற வலி, கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தி, வழக்கமான செயல்பாட்டை பாதிக்கும்.

மூக்கு ஒழுகல்
மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு போன்ற சளிக்குரிய அறிகுறிகளை சந்தித்தால், அதை புறக்கணிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் உடலினுள் நுழையும் வைரஸ் அதன் தாக்குதலில் பிறழ்ந்து வலுவடைகையில், மூக்கு ஒழுகுதல் போன்ற மேல் சுவாச அறிகுறிகளை சந்திக்கலாம். எனவே உங்களுக்கு இதுப்போன்ற அறிகுறி தடுப்பூசி போட்ட பின் ஏற்பட்டால். உடனே பரிசோதனை செய்யுங்கள்.

தும்மல்
பல ஆய்வுகளின் படி, கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடையே தும்மல் பிரச்சனை இருப்பது ஒரு விசித்திரமான அறிகுறியாக கூறப்படுகிறது. ஏனெனில் கொரோனா தடுப்பூசி போட்டு தும்மல் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு பரிசோதித்தத்தில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தும்மல் கொரோனா நோய்த்தொற்றில் உன்னதமான அறிகுறி இல்லை என்றாலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளானது தும்மல் தடுப்பூசி போட்டவர்களிடையே காணப்படும் கொரோனா அறிகுறியாகும் என்று சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இதுக்குறித்து விரிவாக அறிய வல்லுநர்கள் முயற்சித்தும் வருகின்றனர்.

தொண்டை புண்
காய்ச்சல், இருமல் போன்றவை கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்ப மற்றும் முக்கியமான அறிகுறிகளாக இருக்கும் போது, தொண்டை எரிச்சல் அல்லது தொண்டை புண்ணும் கொரோனா அறிகுறியாக இருக்கக்கூடும். மேலும் இது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அறிகுறியும் கூட. பொதுவாக தொண்டை புண் அழற்சி அல்லது பருவக்கால நோய்த்தொற்றுகளின் அறிகுறியாகும் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கும் இது ஏற்படும். ஆகவே நீடித்த தொண்டை வலி, குரல் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது உணவு விழுங்குவதில் சிரமம் ஆகியவற்றை அனுபவித்தால், அது உடனே கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

கொரோனாவின் மற்ற அறிகுறிகளும் இருக்குமா?
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் தடுப்பூசி போட்டவர்களிடையே காணப்பட்ட அறிகுறிகளாகும். அதோடு கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றமடைந்து, பிறழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, குமட்டல், தலைச்சுற்றல், சோர்வு மற்றும் தசை வலி போன்ற பிற அறிகுறிகளையும் அனுபவிக்கக்கூடும். இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்கலாம் அல்லது லேசான நோய்த்தொற்றுடன் போகலாம். எதுவாயினும், தடுப்பூசி போட்ட பின்னர் உங்களுக்கு கொரோனா இருப்பது போன்று சந்தேகம் கொண்டால், சற்றும் யோசிக்காமல் பரிசோதனை செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications