Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
நுரையீரல் புற்றுநோயின் அபாயகரமான சில எச்சரிக்கை அறிகுறிகள்!
புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் நுரையீரல் புற்றுநோயை மூச்சுக்குழாய் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை புற்றுநோய் தான் உலகெங்கிலும் உள்ள புற்றுநோய் இறப்புக்களில் கிட்டத்தட்ட 25-30 சதவீதம் ஆகும்.
புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் நுரையீரல் புற்றுநோயை மூச்சுக்குழாய் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த புற்றுநோயை நுரையீரலுக்குள் மூச்சுக்குழாய்களில் ஏற்படுகிறது. மேலும் இது புற்றுநோய்களின் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். அதோடு இந்த வகை புற்றுநோய் தான் உலகெங்கிலும் உள்ள புற்றுநோய் இறப்புக்களில் கிட்டத்தட்ட 25-30 சதவீதம் ஆகும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, 40 வயதிற்குட்பட்டவர்கள் இடையே நுரையீரல் புற்றுநோய் வருவது மிகவும் குறைவு. ஆனால் வயது அதிகரிக்கும் போது, இந்த புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கின்றன. நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து அதிகரிப்பதற்கு என்ன காரணம்? ஒவ்வொருவரும் கட்டாயம் கவனிக்க வேண்டிய இந்த வகை புற்றுநோயின் அபாய அறிகுறிகள் என்ன? இதுப்போன்ற உங்களின் மனதில் எழும் கேள்விகளுக்கான விடைகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நுரையீரல் புற்றுநோய் - மிகவும் பயங்கரமான புற்றுநோய்
உடலின் குறிப்பிட்ட உறுப்புக்களில் உள்ள செல்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் போது தான் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இது உறுப்பின் உட்புற அல்லது வெளிப்புறத்தில் வீக்கம் உருவாக வழிவகுக்கும். பின் அந்த வீக்கமானது கட்டிகளை உருவாக்குகின்றன. இந்த கட்டிகள் இரண்டு வகைகளாகும். அவை தீங்கற்றவை மற்றும் வீரியம் மிக்கவை.
தீங்கற்ற கட்டிகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல. அவற்றை குணப்படுத்திவிட முடியும். ஆனால் வீரியமிக்க கட்டிகள் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடியவை. இந்த கட்டிகள் தான் புற்றுநோயின் ஆரம்ப கட்டமாகும்.

நுரையீரல் புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்
உலகளவில் புற்றுநோயால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோயால் தான் அதிகம் மரணமடைந்துள்ளனர். இந்த வகையான புற்றுநோய் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரையுமே பாதிக்கும். ஆகவே இப்போது இந்த வகையான புற்றுநோய் ஒருவருக்கு வருவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். கீழே அதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பதால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல் தான். புகைப்பிடிப்பதால் நுரையீரல் அதன் ஆரோக்கியத்தை முற்றிலும் இழந்து, பல்வேறு நோய்கள் நுரையீரலைத் தாக்குகின்றன. அறிக்கைகளின் படி, நுரையீரல் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 90% புகைப்பிடிப்பதால் தான் ஏற்படுகிறது. ஆனால், இதில் ஒரு சிறிய திருப்பம் உள்ளது. அது என்னவெனில் புகைப்பிடிக்காதவர்களுக்கும் இந்த வகை புற்றுநோய் வரலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

நச்சுக்களின் வெளிப்பாடு
புகைப்பிடிப்பதால் மட்டும் தான் நுரையீரல் புற்றுநோய் வரும் என்று நினைக்கக்கூடாது. இது தவிர, ஆர்சனிக், யுரேனியம், அஸ்பெஸ்டாஸ் அல்லது ரேடான் போன்ற கன உலோகங்களின் வெளிப்பாட்டினாலும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

குடும்ப வரலாறு
மற்ற வகை புற்றுநோயைப் போலவே, நுரையீரல் புற்றுநோயும் பரம்பரை வாயிலாகவும் வரக்கூடும். நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகமாக புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடும் போது, மரபணு மாற்றத்துடன் கூடிய நவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

மாசடைந்த சுற்றுச்சூழல்
காற்று மாசுபாட்டினாலும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய புற்றுநோய்கள் வரக்கூடும். சமீபத்திய அறிக்கை ஒன்றில், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக 45 முதல் 55 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே நீங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றி மாசடைந்த காற்று இருந்தால், வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இமனால் நுரையீரலில் நச்சுக்கள் நுழைவதைத் தடுக்கலாம்.

நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது. ஆனால் படிப்படியாக அறிகுறிகளானது வெளிப்பட ஆரம்பிக்கும். கீழே கட்டாயம் கவனிக்க வேண்டிய சில நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நாள்பட்ட இருமல்
நீங்கள் பல மாதங்களாக இருமலால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதை சாதாரணமாக நினைத்து விடாமல், உடனே அதை தீவிரமாக எடுத்து கவனிக்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட இருமல் நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப மற்றும் முதல் அறிகுறியாகும்.

சுவாசிப்பதில் சிரமம்
நீங்கள் சமீப காலமாக சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? மூச்சுத் திணறல் அல்லது மார்பு நெரிசல் போன்றவை நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளாகும். ஆகவே இத்மாதிரியான உணர்வை நீங்கள் அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சளியில் இரத்தம்
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி இருமலின் போது இரத்தத்தை எதிர்பாக்கலாம். ஏன் என்று நீங்கள் கேட்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரல் புற்றுநோய் உள்ள நோயாளி நாள்பட்ட இருமல் காரணமாக சுவாச பாதையில் கீறல்கள் ஏற்பட வழிவகுத்து, இதன் விளைவாக இருமலின் போது இரத்தத்தை வரவழைக்கிறது.

பிற அறிகுறிகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை தவிர, விவரிக்க முடியாத முதுகு வலி, திடீர் மனச்சோர்வு, தீவிரமான மனநிலை மாற்றங்கள், விவரிக்கப்படாத எடை இழப்பு மற்று களைப்பு போன்ற அறிகுறிகளைப் பார்க்கும் போது, உஷாராகிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











