For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதெல்லாம் உடம்பில் உள்ள தீவிர பிரச்சனையைத் தான் சுட்டிக்காட்டுது-ன்னு தெரியுமா?

சில சமயங்களில் கால்களில் சந்திக்கும் பிரச்சனைகள் உடலினுள் உள்ள சில தீவிரமான பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும்.

|

உடலிலேயே அதிக பாரத்தை தாங்கும் ஓர் உறுப்பு என்றால் அது கால்கள் தான். ஒட்டுமொத்த உடலையும் நாள் முழுவதும் சுமக்கும் கால்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் தற்போது நிறைய பேர் கால்களில் தான் அதிக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பொதுவாக கடினமான வேலை, மோசமான ஊட்டச்சத்து அல்லது அதிகப்படியான அழுத்தம் போன்றவை ஒருவரது கால்கள் மற்றும் பாதங்களில் மாற்றங்களை உண்டாக்கும். இருப்பினும், சில சமயங்களில் கால்களில் சந்திக்கும் பிரச்சனைகள் உடலினுள் உள்ள சில தீவிரமான பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும்.

Leg Problems That Can Signal Serious Health Issues

எனவே தமிழ் போல்ட் ஸ்கை உடம்பில் உள்ள தீவிர பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டும் சில கால் பிரச்சனைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் அதுப்போன்ற பிரச்சனைகளை சந்திப்பவராயின் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

MOST READ: திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹெங்காவில் ஜொலித்த காஜல் அகர்வால்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை

ஒருவரது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்தால், உடலில் இருந்து நீர் வெளியேறாமல் உடலிலேயே தங்கும். இதன் விளைவாக எடிமா என்னும் நீர்த்தேக்க பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதி வீங்கியிருந்தால் அல்லது கை, கால் போன்ற உறுப்புக்களில் எலக்ட்ரோஷாக்கைப் போன்ற வலியை உணர்ந்தால், அதுவும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

சிரை பற்றாக்குறை

சிரை பற்றாக்குறை

சிரை பற்றாக்குறையின் போது, இரத்தமானது கைகால்களில் இருந்து இதயத்திற்கு சிரமங்களுடன் நகர்கிறது. சிரை வால்வுகள் பலவீனமாக அல்லது சேதமடைந்திக்கும் போது தான் இது நிகழ்கிறது. இதன் விளைவாக அது வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கணுக்கால் பகுதியில் மிகவும் தீவிரமான வீக்கம் ஏற்படுவதைத் தொடர்ந்து, கால்களின் நிறம் மாறுவதோடு, கால்கள் கனமாக இருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

இதய பற்றாக்குறை

இதய பற்றாக்குறை

இந்நிலையில் இதயத்தின் ஒன்று அல்லது இரண்டு அறைகள் இரத்தத்தை திறம்பட தள்ளும் திறனை இழக்கின்றன. அதனால் உடலின் கீழ் பகுதியில் இரத்தம் தேங்க ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக கால்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது.

இரத்த உறைவு (Thrombosis)

இரத்த உறைவு (Thrombosis)

ஒருவரது கால்கள் வீக்கத்துடனும், மிகவும் சூடாகவும், நிறம் மாறியும், வலியுடனும் இருந்து, பலவீனமாக இருப்பதை உணர்ந்தால், அது உடலில் இரத்த உறைவுக்கான அறிகுறியாகும். அதிலும் ஒன்று அல்லது இரண்டு கால்களின் வீக்கம் ஆழமான சிரை இரத்த உறைவைக் குறிக்கும். இது மிகவும் ஆபத்தானது. எனவே இம்மாதிரியான அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

கல்லீரல் பிரச்சனைகள்

கல்லீரல் பிரச்சனைகள்

கல்லீரல் பிரச்சனையில் ஆரம்ப கால அறிகுறி கால்களில் தான் தென்படும். ஒருவரது கல்லீரல் அசாதாரணமாக வேலை செய்தால், கால்கள் வீங்க ஆரம்பிக்கும் மற்றும் கால்களில் நரம்புகள் புடைத்து வெளிப்பட ஆரம்பிக்கும். குடல், மண்ணீரல், கணையம் மற்றும் கல்லீரலுக்கு இடையேயான இரத்த ஓட்டத்தில் சில சிக்கல்கள் இருப்பதால் இது நிகழ்கிறது.

தைராய்டு பிரச்சனைகள்

தைராய்டு பிரச்சனைகள்

கால் வீக்கம், தசை பிடிப்புகள் மற்றும் கால்கள் மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், அது தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனையின் அறிகுறியாகும். ஒருவர் இம்மாதிரியான அறிகுறிகளை சில நாட்களாக அனுபவிப்பதை உணர்ந்தால், உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது.

பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis)

பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis)

பெருந்தமனி தடிப்பின் போது, பாதங்கள் மிகவும் குறைவான அளவில் இரத்தத்தை பெறுவதால், கால்கள் வெளுத்து காணப்படுவதுடன், வலிமிக்கதாகவும் இருக்கும். பெரும்பாலான மக்கள் இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவார்கள். இருப்பினும், நீங்கள் இந்த அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, சிறு காயங்கள் ஏற்பட்டாலும், அது விரைவில் குணமாகாமல் தீவிரமான விளைவை உண்டாக்கும். குறிப்பாக கால்களில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வை அனுபவித்தால், அது நிச்சயம் சர்க்கரை நோயின் அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Leg Problems That Can Signal Serious Health Issues

Did you know leg health problems that can signal serious illnesses? Read on...
Desktop Bottom Promotion