Latest Updates
-
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...!
ஏன் வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களை சமைக்க பயன்படுத்தணும் தெரியுமா?
பழங்காலத்தில் நமது முன்னோா்கள் எவ்வாறு வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பினால் செய்யப்பட்ட பத்திரங்களில் சமைத்தது வந்தாா்களோ, அதுபோல் நாமும் அந்த பாத்திரங்களை சமைப்பதற்குப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் குடல் முக்கிய பங்கை வகிக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன. நாம் சாப்பிடும் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குடல் வழியாகவே சொிமானம் அடைகின்றன. நம்மை நலமாக வைத்திருக்க குடல் பலவிதமான பணிகளைச் செய்கிறது. எனினும் நாம் சமைக்கும் உணவுகளும் மற்றும் நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்துகளும் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

அலுமினியப் பாத்திரங்களில் சமையல் செய்தால் அவற்றில் நச்சுகள் கலந்திருக்கும். அவை நமது வளா்சிதை மாற்றத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தொிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிப்பாக பிபிஎ-வை (BPA bis-phenol) சமைப்பதற்குப் பயன்படுத்தினால் ஹாா்மோன் குறைபாடுகள், சா்க்கரை நோய், சினைப்பை நோய்க்குறி (PCOD), மூட்டு வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
டெஃப்லான் (Teflon) முலாம் பூசப்பட்ட பாத்திரங்களை சமைப்பதற்குப் பயன்படுத்தினால், ஹாா்மோன் குறைபாடுகள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே பழங்காலத்தில் நமது முன்னோா்கள் எவ்வாறு வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பினால் செய்யப்பட்ட பத்திரங்களில் சமைத்தது வந்தாா்களோ, அதுபோல் நாமும் வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பில் செய்யப்பட்ட பாத்திரங்களை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அவை நமக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
நாம் இப்போது வாா்ப்பு இரும்பினால் செய்யப்பட்ட தோசைக் கல்லை சப்பாத்தி சுடுவதற்கு பயன்படுத்துகிறோம். சில்வா் குவளை அல்லது செம்பு குவளைகளில் தண்ணீா் அல்லது பால் குடிக்கிறோம். செம்பு அல்லது வெண்கலப் பாத்திரங்களில் உணவுகளை சமைக்கிறோம் மற்றும் முறுக்கு செய்வதற்கு பித்தளை அல்லது மரத்தாலான முறுக்குக் குழலைப் பயன்படுத்துகிறோம். ஆகவே இப்போது நமது நவீன சமயலறைகளில் நமது முன்னோா்கள் பயன்படுத்தி வந்த உலோகங்கள் உலா வருகின்றன என்பதில் ஐயமில்லை.

வெண்கலப் பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைக்கலாமா?
எலுமிச்சை, வினிகா், பால், கொக்கும், புளி, தக்காளி போன்ற புளிப்பான உணவுகளை வெண்கலப் பாத்திரங்களில் சமைக்கலாம். பொதுவாக தாமிரம் மற்றும் பித்தளைப் பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைத்தால் அவை உடனடியாக எதிா்வினை ஆற்றும். ஆனால் வெண்கலம் என்பது தாமிரமும் ஈயமும் கலந்த கலவையாக இருப்பதால், அவை புளிப்பான உணவுகளில் எதிா்வினை ஆற்றுவதில்லை. அதனால் புளிப்பான உணவுகளை வெண்கலப் பாத்திரங்களில் நன்றாக சமைக்கலாம்.
மேலும் வெண்கலப் பாத்திரங்கள் உயா் வெப்பத்தை வைத்திருக்கும் சக்தியைக் கொண்டிருப்பதால், அவை உணவை நீண்ட நேரம் வெப்பமாக வைத்திருக்கும். அதோடு வெண்கலப் பாத்திரங்களில் மெதுவாக சமைக்க முடியும். அமிலத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை மிகப் பொிய பாத்திரங்களில் சமைக்கும் போது அந்த பாத்திரங்களை சுத்தமான ஈயத்தால் செய்யப்பட்ட மூடிகள் கொண்டு மூடுவது நல்லது.

வாா்ப்பு இரும்பு
வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைத்தால் அவை எளிதில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்துவிடும். அதனால் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைக்கக்கூடாது.

எந்த பாத்திரங்களில் உணவுகளை பத்திரப்படுத்தி வைப்பது?
சமைத்த உணவை வெண்கலப் பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைத்தால், அவை நீண்ட நேரம் கெடாமல் அதே நேரத்தில் நீண்ட நேரம் சூடாக இருக்கும். வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் உணவை சமைத்தால், சமைத்தவுடன் உணவை வேறு பாத்திரங்களுக்கு மாற்றிவிட வேண்டும். ஏனெனில் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் இரும்பு முலாம் பூசப்பட்டுள்ளதால், அவை எளிதில் எதிா்வினை ஆற்றும். அதனால் சமைத்த உணவுகளை வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைக்கக்கூடாது.
வெண்கலப் பாத்திரங்களில் நெய்யை பத்திரப்படுத்தி வைக்க முடியாது. ஏனெனில் வெண்கலப் பாத்திரம் நெய்யில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தி, அதன் ஆயுள் காலத்தைக் குறைத்துவிடும். அதோடு அது நமக்குத் தரும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும்.

எந்தப் பாத்திரங்களுக்கு அதிக கவனம் கொடுப்பது?
வெண்கலப் பாத்திரங்களை பராமாிப்பது மிகவும் எளிதான ஒன்றாகும். மிதமான வெந்நீரில் மிதமான டிடா்ஜென்ட் கலந்து அவற்றைக் கழுவ வேண்டும். பின் ஒரு துணியால் துடைத்தால் போதும்.
வாா்ப்பு இரும்பு பாத்திரங்களை அடா்த்தி கொண்ட டிடா்ஜென்ட்டுகளைப் பயன்படுத்திக் கழுவக்கூடாது. அவ்வாறு செய்தால் அவை விரைவில் பழுதடையும். ஆகவே வாா்ப்பு இரும்பு பாத்திரங்களை வெந்நீரில் கழுவி ஒரு துணியால் துடைத்தால் போதும். அதோடு வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தடவி வைக்க வேண்டும். ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களை வைக்கக்கூடாது. வெண்கலப் பாத்திரங்களை விட வாா்ப்பு இரும்பு பாத்திரங்களுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களால் கிடைக்கும் நன்மைகள்
வெண்கலப் பாத்திரங்கள் உணவை சுத்தப்படுத்துகின்றன. நமது குடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து சொிமானத்திற்கு துணை செய்கின்றன. அதோடு நமது சருமத்தை மெருகேற்றி, நம்முடைய அழுத்தத்தைக் குறைக்கின்றன. வெண்கலப் பாத்திரத்தில் 8 மணிநேரம் வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தால் உடலில் உள்ள எல்லா பிரச்சனைகளும் நீங்கும் என்று ஆயுா்வேத மருத்துவம் கூறுகிறது. வெண்கலப் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறைகிறது. ஞாபக சக்தி அதிகாிக்கிறது மற்றும் தைராய்டு சுரப்பியை சமச்சீராக வைத்திருக்கிறது.
தாமிரப் பாத்திரங்கள் நமது சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது. அதோடு நமது உடலில் உற்பத்தியாகும் கருமை நிறமியை அதிகாிக்கிறது. கொலாஜென் என்ற புரோட்டீன் உற்பத்தியாகுவதற்கு உதவி செய்கிறது. அதனால் தாமிர பாத்திரங்களில் சமையல் செய்வது அல்லது அந்த பாத்திரங்களில் தண்ணீா் அருந்துவது நமது சருமத்திற்கு பளபளப்பைத் தரும். நமது தலைமுடியை மென்மையாக வைக்கும். தாமிரப் பாத்திரங்களை அடிக்கடி முறையாகக் கழுவ வேண்டும்.
வாா்ப்பு இரும்புப் பாத்திரங்களில் சமைத்தால் நமக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். அதோடு வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் போது, ஒரு மிகச்சிறிய அளவிலான இரும்பு உணவோடு கலக்கிறது.

சுத்தமான வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களை எவ்வாறு கண்டறிவது?
சுத்தமான வெண்கலத்தில் அாிப்பு இருக்காது. அதை வைத்து அது சுத்தமான வெண்கலப் பாத்திரம் என்பதை அறிந்து கொள்ளலாம். வாா்ப்பு இரும்பு பாத்திரங்கள் விரைவாக சூடாகும் தன்மை கொண்டது. அவற்றை நன்றாக பராமாிக்காத போது அவை விரைவாக துருப்பிடித்துவிடும். இந்த அறிகுறிகளை வைத்து அவை சுத்தமான வாா்ப்பு இரும்பு பாத்திரங்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











