Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
தீபாவளி பலகாரங்களால் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஜூஸ்கள்!
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் ஒருசில பானங்களை குடிப்பதால், செரிமான மண்டலம் சுத்தமாவதோடு, நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, ஒட்டுமொத்த உடலும் புத்துணர்ச்சி அடையும்.
தீபாவளி பண்டிகை பட்டாசுகளுக்கு மட்டும் பிரபலமானதல்ல, சுவையான பலகாரங்களுக்கும் தான். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் டயட்டுகளுக்கு ஒரு நாள் லீவு விட்டு, பலகாரங்களை வெளுத்து கட்டியிருப்பார்கள். ஒரே நாளில் உடல் ஆரோக்கியம் பற்றி எதையும் யோசிக்காமல் கண்டபடி சாப்பிடும் போது, பலர் செரிமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மேலும் உடலில் நச்சுக்களின் அளவும் அதிகரித்திருக்கும். எனவே பண்டிகை முடிந்த பின்னர், உடலை, குறிப்பாக செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.

ஒட்டுமொத்த உடலை மற்றும் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய சிறந்த வழி ஜூஸ்களைக் குடிப்பது தான். அதுவும் ருசியான மற்றும் ஆரோக்கியமான ஜூஸ்களை தேர்ந்தெடுத்து பண்டிகை முடிந்த பின்னர் குடிப்பதால், செரிமான மண்டலம் சுத்தமாவதோடு, நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, ஒட்டுமொத்த உடலும் புத்துணர்ச்சி அடையும். இப்போது தீபாவளிக்கு பின் உடலை சுத்தம் செய்ய உதவும் சில பானங்கள் குறித்து காண்போம். அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து குடியுங்கள்.

1. ஆரஞ்சு மற்றும் இஞ்சி ஜூஸ்
ஆரஞ்சு மற்றும் இஞ்சி மிகவும் அற்புதமான காம்போ. ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, நச்சு நீக்கும் பண்புகளும் ஏராளமாக உள்ளன. மறுபுறம் இஞ்சி செரிமான மண்டலத்தை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே ஆரஞ்சு ஜூஸில் இஞ்சி சாற்றினை சேர்த்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடியுங்கள்.

2. ஆரஞ்சு மற்றும் கேரட் ஜூஸ்
பண்டிகை காலம் முடிந்த பின்னர் உடலை சுத்தம் செய்ய வேண்டியது என்பது தற்போதைய காலத்தில் மிகவும் முக்கியம். அதற்கு ஆரஞ்சு மற்றும் கேரட் பெரிதும் உதவி புரியும். உங்கள் வீட்டில் ஆரஞ்சு, கேரட் இரண்டுமே இருந்தால், இரண்டையும் சாறு எடுத்து ஒன்றாக கலந்து குடியுங்கள். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் சிறப்பாக வெளியேற்றப்படும்.

3. புதினா, கிவி லெமனேடு
இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் இது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது. இவற்றில் புதினா உடலில் உள்ள நச்சுக்களை எதிரத்துப் போராட உதவும் மற்றும் இது அஜீரண கோளாறை சரிசெய்யக்கூடியது. மறுபுறம், கிவி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவி புரியும்.

4. மாதுளை ஜூஸ்
பலரும் மாதுளை அதன் சரியான நன்மையை அறியாமலேயே உட்கொள்கிறார்கள். குறிப்பாக மாதுளை வழங்கும் நன்மையைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் மாயங்களை ஏற்படுத்தும். வேண்டுமானால் இந்த மாதுளை ஜூஸுடன் சிறிது பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்க உதவும்.

5. இஞ்சி லெமன் ஜூஸ்
பண்டிகை முடிந்த மறுநாள், உங்களின் நாளை எலுமிச்சை மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

6. எலுமிச்சை மற்றும் புதினா கலந்த இளநீர்
பொதுவாக இளநீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அந்த இளநீருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது புதினாவை சேர்த்து கலந்து குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுவதோடு, உடல் நீண்ட நேரம் நீரேற்றத்துடன் இருக்கும்.

7. க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை
இன்று பலரும் தினமும் குடித்து வரும் ஓர் பானமாக க்ரீன் டீ உள்ளது. ஏனெனில் க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்தால், செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.

8. சியா விதைகள் மற்றும் ஆப்பிள் ஸ்மூத்தி
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்பார்கள். அந்த ஆப்பிளை அரைத்து, அத்துடன் நீரில் ஊற வைத்த சியா விதைகளை சேர்த்து குடித்து வந்தால், ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். அதுவும் இந்த பானத்தை பண்டிகை முடிந்த பின்னர் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications
