Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
தொப்புள்கொடி இரத்தத்தைப் பயன்படுத்தி எச்.ஐ.வி-யை குணப்படுத்தும் புதிய சிகிச்சை - அசத்தும் ஆய்வாளர்கள்
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் கொடிய வைரஸான எச்.ஐ.வி-யில் இருந்து பரிபூர்ணமாக குணமடைந்த உலகின் மூன்றாம் நபராகவும், முதல் பெண்ணாகவும் அமெரிக்க நோயாளி ஒருவர் உள்ளார்.
உலகிலேயே குணப்படுத்த முடியாத மற்றும் உயிரைப் பறிக்கும் கொடிய நோயாக எய்ட்ஸ் இருந்தது. ஆனால் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் கொடிய வைரஸான எச்.ஐ.வி-யில் இருந்து பரிபூர்ணமாக குணமடைந்த உலகின் மூன்றாம் நபராகவும், முதல் பெண்ணாகவும் அமெரிக்க நோயாளி ஒருவர் உள்ளார். இந்த பெண் 2017 ஆம் ஆண்டு லுகேமியா நோயால் கண்டறியப்பட்டவர். இவர் இயற்கையாகவே எச்.ஐ.வி-யை எதிர்க்கும் ஒரு நன்கொடையாளரிடமிருந்து தொப்புள் கொடி இரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்து குணமானவர் என்று நியூயார்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் டென்வரில் நடந்த மாநாடு ஒன்றில், தொப்புள்கொடி இரத்தத்தைக் கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் எச்.ஐ.வி-யை குணப்படுத்தலாம் என்ற வழக்கு முன்வைக்கப்பட்டது. அதோடு இந்த எச்.ஐ.வி சிகிச்சை பரவலாக கிடைக்கக்கூடியது என்றும் மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

எச்.ஐ.வி என்றால் என்ன?
எச்.ஐ.வி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கும் கொடிய நோய்த்தொற்று ஆகும். இது சிடி 4 எனப்படும் உடலின் நோயெதிர்ப்பு செல்களை அழித்து, நோய்த்தொற்றுக்கு பதிலளிக்க உதவுகிறது. எச்.ஐ.வி சிடி4 செல்களைத் தாக்கியவுடன், அது உயிரணுக்களை நகலெடுத்து அழிக்கத் தொடங்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பயன்படுத்திக் கொள்ளும் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எச்.ஐ.வி எவ்வாறு பரவுகிறது?
இந்த எச்.ஐ.வி வைரஸிற்கு இரத்தம், விந்து, யோனி திரவங்கள், மலக்குடல் திரவங்கள் மற்றும் தாய்ப்பால் போன்றவை கேரியர்களாக இருக்கலாம். மேலும் பாதுகாப்பற்ற உடலுறவு, அசுத்தமான இரத்தத்தை உடலில் ஏற்றுவது, ஊசிகளை பகிர்வது மற்றும் கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுகிறது.

நியூயார்க் நோயாளி
2013 ஆம் ஆண்டில் நியூயார்க் நோயாளி என்று அழைக்கப்படும் கலப்பின பெண்ணுக்கு எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பெண் வைரஸ் அளவைக் குறைப்பதற்கு ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை எடுத்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு, இப்பெண்ணுக்கு லுகேமியா இருப்பது கண்டறியப்பட்டது. அவரது புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக, இப்பெண்ணுக்கு எச்.ஐ.வி-க்கு இயற்கையான எதிர்ப்பைக் கொண்ட ஒருவரிடம் இருந்து தொப்புள்கொடியின் இரத்தத்தை மருத்துவர்கள் மாற்றினார்கள். அப்போது இருந்து, இந்த பெண்ணிற்கு ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தொப்புள்கொடி இரத்த மாற்று அறுவை சிகிச்சை
தொப்புள்கொடியில் இருந்து வரும் இரத்தத்தில் எச்ஐவி-யைத் தடுக்கும் ஒரு பிறழ்வு உள்ளது என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. மேலும் இந்த சிகிச்சைக்கு வேண்டிய இரத்தமானது ஓரளவு பொருந்திய நன்கொடையாளரிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் எலும்பு மஜ்ஜையைப் பயன்படுத்தி செய்யப்படும் இதேப்போன்ற மாற்று அறுவை சிகிச்சைக்கு சரியான பொருத்தம் தேவைப்படுகிறது.
கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் (யுசிஎல்ஏ) டாக்டர் யுவோன் பிரைசன் மற்றும் பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் டெபோரா பெர்சாட் தலைமையிலான அமெரிக்க அடிப்படையிலான ஆய்வின் ஒரு பகுதியாக, இந்த நோயாளி இருந்தார். இந்த ஆய்வில் நாடு முழுவதும் இருந்து புற்றுநோய் மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்த 25 எச்ஐவி நோயாளிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், புற்றுநோய் நோயெதிர்ப்பு செல்களை அழிக்க நோயாளிகள் முதலில் கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சில நிபுணர்களின் கூற்றுப்படி, எச்ஐவியுடன் வாழும் பெரும்பாலான மக்களுக்கு புதிய மாற்று முறை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த தொப்புள்கொடி இரத்த சிகிச்சை ஏன் சிறந்தது?
இந்த தொப்புள்கொடி சிகிச்சை இரண்டு காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கது. முதலாவதாக, எச்ஐவி நோயாளிக்கு தொப்புள் கொடியின் இரத்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது இதுதான் முதல் முறை. மேலும் இந்த சிகிச்சையை இன்னும் பரவலாக கிடைக்கச் செய்யலாம் என்று மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டாவதாக, இந்த சிகிச்சை மேற்கொள்ள நோயாளி ஒரு நடுத்தர வயது கலப்பினப் பெண். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நன்கொடையாளர்கள் காகசியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிகிச்சைக்கு சரியான பொருத்தங்கள் தேவையில்லை, ஓரளவு பொருத்தங்கள் இருந்தாலே போதும்.

முதல் இரண்டு எச்ஐவி நோயாளிகள் எப்படி குணமடைந்தனர்?
உலகிலேயே முதன்முதலாக 2007 ஆம் ஆண்டில் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு எச்.ஐ.வி நோயால் குணமடைந்த முதல் நபர் பெர்லினைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் ஆவார். 2020 ஆம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த ஆடம் காஸ்டில்ஜோ எச்.ஐ.வி நோயால் குணமடைந்த இரண்டாவது நபர் ஆவார். இந்த இருவருமே எச்.ஐ.வி-க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும அசாதாரண மரபணுவைக் கொண்ட நன்கொடையாளர்களிடம் இருந்து மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெற்றனர்.
எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, இந்த இரண்டு நோயாளிகளும் கடுமையான பக்க விளைவுகளை சந்தித்தனர். அதில் கிராஃப்ட்-வெர்சஸ்-ஹோஸ்ட் நோய் அடங்கும். அதுவும் பிரவுன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிட்டத்தட்ட இறந்துவிட்டார். ஆனால் நியூயார்க் நோயாளி தொப்புள்கொடி இரத்த மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் மருத்துவமனையில் இருந்து 17 நாட்களிலேயே டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார். மேலும் இவருக்கு கிராஃப்ட்-வெர்சஸ்-ஹோஸ்ட் நோய் எதுவும் உருவாகவில்லையாம்.



Click it and Unblock the Notifications