Latest Updates
-
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி?
விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கா? அப்ப இந்த மாதிரி பூண்டு சாப்பிடுங்க.. வயாகரா மாதிரி வேலை செய்யும்..
அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் பூண்டு வயாகராவைப் போன்று பாலுணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடலுறவில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவும்.
ஆண்கள் பெரும்பாலும் தாங்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏன் மருத்துவர்களிடம் கூட அதைப் பற்றி சொல்ல தயக்கம் கொள்வார்கள். தற்போது ஏராளமான ஆண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனையாக விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளது. இந்த பிரச்சனை உள்ள ஆண்களால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட முடியாது. எனவே இப்பிரச்சனை உள்ள ஆண்கள் அதற்கு வயாகராவை எடுப்பார்கள். வயாகராவை எடுக்கும் ஆண்களால் நீண்ட நேரம் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடியும்.

ஆனால் நம் வீட்டு சமையலறையிலேயே ஒரு நேச்சுரல் வயாகரா உள்ளது என்பது தெரியுமா? ஆம், அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் பூண்டு வயாகராவைப் போன்று பாலுணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடலுறவில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவும். பாலுணர்ச்சியை அதிகரிக்க பூண்டு பற்களை எப்படி உட்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். கீழே பூண்டு கொண்டு எப்படி வயாகராவை தயாரிப்பது என்றும், பூண்டு எப்படி ஒரு ஆணின் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்க உதவுகிறது என்பதையும் சற்று விரிவாக காண்போம் வாருங்கள்.

விறைப்புத்தன்மை பிரச்சனையின் அறிகுறிகள்
ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டும். அவை:
* விறைப்புத்தன்மை ஏற்படுவதில் சிரமம்
* நீண்ட நேரம் விறைப்புத்தன்மை பராமரிப்பதில் சிரமம்
* பாலியல் ஆசை குறைவது
* குற்ற உணர்வு
* சுய மரியாதை பிரச்சனைகள்

பூண்டு எப்படி ஆண்களின் கருவளத்திற்கு நல்லது?
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
பூண்டு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இது ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை போக்க உதவுகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில், பூண்டில் உள்ள குறிப்பிட்ட கூறுகள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை உடலின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக ஆணுறுப்பில் அதிகம் பாயச் செய்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது
எலிகளைக் கொண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியில் பூண்டில் உள்ள வேதிப்பொருள், எலிகளின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் பூண்டுகளை எடுக்கும் போது, அது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஆண்களின் ஆண்மையையும் அதிகரிக்க உதவும்.

விந்தணு சேதத்தைத் தடுக்கும்
பூண்டில் அல்லிசின் மற்றும் செலினியம் அதிகமாக உள்ளது. அதில் அல்லிசின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் விந்தணுக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. செலினியம் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

பூண்டுகளைக் கொண்டு வயாகரா தயாரிப்பது எப்படி?
பூண்டுகளை இரண்டு வழிகளில் உட்கொள்வதன் மூலம் வயாகராவாக செயல்படும். அந்த வழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
#1 பூண்டு பானம்
இந்த பானம் தயாரிப்பதற்கு 3 பூண்டு பற்களை தட்டி, பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் குளிர வைத்து, பின் சுவைக்கேற்ப தேன் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும். ஒருவேளை இப்படி சாப்பிட பிடிக்காவிட்டால், 3 பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் தேன் கலந்த பாலை குடிக்கலாம்.

#2 பச்சை பூண்டு
பூண்டின் அதிகபட்ச நன்மைகளைப் பெற சிறந்த வழி, அவற்றை பச்சையாக சாப்பிடுவது தான் என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அதுவும் பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டதும் ஒரு டம்ளர் நீரை குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications