Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காது கேட்காதவர்களிடம் ஈஸியாகப் பேசுவது எப்படி?... என்ன செய்ய வேண்டும்?
காது கேட்காதவர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பது பற்றி மிக விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாதாரணமாக இயல்பான மனிதர்களிடம் தகவல்களைப் பரிமாறுவது, ஒரு விஷயத்தைப் புரிய வைப்பது நமக்குத் தெரியும். அதிலும் காது கேளாதவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிப் புரிய வைப்பது எவ்வளவு கஷ்டம்.

அப்படி காது கேட்காதவர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பது பற்றி மிக விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். குறிப்பாக, ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் நாள் உலக காது கேளாதோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துப் பரிமாற்றம்
ஒரு விஷயத்தை காது கேட்காதவர்களிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்றால், அதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களுடைய வேலை மிக எளிதாக இருக்கும்.

நேருக்கு நேராக
யாரிடம் பேசுகிறீர்களோ அவருக்கு நேருக்கு நேராக நில்லுங்கள். அவர்களுடைய கண்களை எதிர்நோக்கிப் பாருங்கள். வேறு எந்த பக்கமும் பார்த்துக் கொண்டு நிற்காமல், குறிப்பாக வாயை நன்கு திறந்து பேசுங்கள். வாயை மறைத்துப் பேசக்கூடாது.

சத்தமும் வெளிச்சமும்
காது கேளாதோர் பெரும்பாலும் நாம் என்ன பேசினாலும் நம்முடைய வாயசை வைத்து தான் அதிகமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். அதனால் அவர்களிடம் பேசும்போது, போதிய அளவில் சத்தத்துடன் பேசுகிறோமா என்பதோடு, போதிய வெளிச்சம் இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ள வேண்டும்.

இடைவெளி முக்கியம்
காது கேட்காதவர்களிடம் பேசுகின்ற பொழுது, குறிபிட்ட இடைவெளி விட்டு நிற்க வேண்டியது அவசியம். ஏனென்றால், ஒரு அடி அல்லது அதற்கும் மேல் இடைவெளி விட்டால் தான், உங்களுடைய உதட்டு அசைவு, உடல் அசைவுகளை வைத்து நீங்கள் சொல்வதை அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

தெளிவும் நிதானமும்
காது கேளாதவர்களிடம் பேசுகின்ற பொழுது, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அதை நிதானமாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள். அவசர அவசரமாகப் பேசாதீர்கள்.

ஒன்றுக்கு மேல்
ஒருவேளை நீங்கள் ஒருவரிடம் மட்டும் பேசாமல், ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் பேசுகிறீர்கள் என்றால், அப்போது உங்களுடைய கருத்துப் பரிமாற்ற முறையை மாற்றியே ஆக வேண்டும்.

திரும்பத் திரும்ப
ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் பேசுகின்ற பொழுது, சில விஷயங்களைத் திரும்பத் திரும்ப சொல்லுங்கள். ஏனென்றால் ஒருமுறை சொல்லும்போது, எல்லோருக்குமே புரிந்து கொள்ள முடியாது. அதனால் சில முறை திரும்பச் சொல்வது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

எழுதிக் காட்டுங்கள்
கூட்டமாக இருக்கின்றவர்களுக்கு சொல்லி ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்றால், பேப்பரிலோ அல்லது போர்டிலோ எழுதிக் காட்டுங்கள். அது அவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications