Latest Updates
-
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா?
இந்த ஒரு பொருள் உங்க தொப்பைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா?
உடல் பருமனைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் புளி. ஆம், புளி ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.
நீங்கள் இதுவரை உடல் பருமனைக் குறைக்கும் பல வழிகளைப் படித்திருப்பீர்கள். படித்ததோடு, அதை முயற்சித்தும் பார்த்திருப்பீர்கள். அதில் உடல் பருமனைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் புளி. ஆம், புளி ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். புளி என்றதுமே பலருக்கும் அதன் புளிப்புச் சுவை தான் நினைவிற்கு வரும். அதே சமயம் அதை சாப்பிடவும் ஆசை எழுவதும் உண்டு.

புளியை ரசம், சட்னி என்று பலவற்றில் சேர்த்து சாப்பிடலாம். சிலருக்கு புளி சாதம் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அத்தகைய புளி ஒருவருக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது என்பது தெரியுமா? குறிப்பாக தொப்பையைக் குறைக்க உதவி புரியும். இப்போது நாம் பார்க்கப் போவது புளியால் நாம் பெறும் நன்மைகளைப் பற்றியும், உடல் எடையைக் குறைக்க எவ்வாறு உதவி புரிகிறது என்பதையும் தான்.

ஊட்டச்சத்துக்களின் புதையல்
புளி என்பது ஊட்டச்சத்துக்களின் புதையல் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை நிறைநதுள்ளது என்பது தெரியுமா? அதோடு கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து போன்றவையும் உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வெளிப்புற நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

ஆயுர்வேத மருந்து
ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாக புளி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒரு துண்டு புளியை சாப்பிடுவது, அசிடிட்டி, இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அதே சமயம் சமையலில் புளியை சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள் மற்றும் கபம்-வாதம் குறைபாடுகள் தடுக்கப்படும். சமீபத்திய ஆய்வு ஒன்றில், புளி குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளை நீக்க உதவுவது தெரிய வந்துள்ளது.

ஏன் புளியை அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்?
உடல் பருமன் குறையும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், உங்கள் டயட்டில் கட்டாயம் புளியை சேர்க்க வேண்டும். இது உடல் எடையைக் குறைக்கும் முயற்சிக்கு உதவும். புளியில் உள்ள ஹைட்ரோசிட்ரிக் என்னும் அமிலம், கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலும் புளி ஒருவரது ஆவலைக் கட்டுப்படுத்தும்.

புற்றுநோய்
புளி புற்றுநோய்க்கு நல்லது என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், புளி புற்றுநோயை எதிர்க்கும் உணவுப் பொருள் என்று ஆயுர்வேத நிபுணர்கள் நம்புகின்றனர். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் டார்டாரிக் அமிலத்தை உள்ளடக்கியது. டார்டாரிக் அமிலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியவை.

இரத்த சர்க்கரை கட்டுப்படும்
புளி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. மேலும் இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். உங்கள் அன்றாட உணவில் புளியை சேர்க்கும் போது, அது கார்போஹைட்ரேட் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் சர்க்கரை நோயின் பார்டரில் இருந்தால் அல்லது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க நினைத்தால், புளிச்சாறு அல்லது புளி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

கல்லீரலுக்கு நல்லது
புளி கல்லீரலுக்கு மிகவும் நல்லது. உங்களின் மெட்டபாலிசம் பலவீனமாக இருப்பது போல் உணர்ந்தால், புளியை அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் மேம்படுத்தப்பட்டு, எடை இழப்புக்கும், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவும்.

இரத்த அழுத்தம்
உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்தம் இரண்டுமே மிகவும் அபாயகரமானது. இதை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைத்தால், புளியை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். புளியில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுவதுடன், இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கும் உதவும்.

எச்சரிக்கை
புளி எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதை அளவாக உட்கொள்ள வேண்டும். அதிகளவில் எடுத்தால், அதனால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக அல்லது குறிப்பிட்ட நோய்க்கான மருந்துகளை அன்றாடம் எடுப்பவராயின், புளியை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications