Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா? அப்ப உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
உயர் கொலஸ்ட்ராலுடன் தொடர்புடைய ஒரு அறிகுறி தான் இடுப்பு வலி. இன்று நிறைய பேர் இடுப்பு வலியால் அவதிப்படுகிறார்கள். எனவே இனிமேல் உங்களுக்கு இடுப்பு வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகி கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்துப் பாருங்க
தற்போதைய காலகட்டத்தில் ஃபாஸ்ட் புட் உணவுகளை மக்கள் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளாது ஆரோக்கியமற்றது மற்றும் இவற்றில் கெட்ட கொழுப்புக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிகமாக இருந்தால், இதய நோயின் அபாயம் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவிர்ப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும்.

அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடிய ஒரு பிரச்சனை தான் உயர் கொலஸ்ட்ரால். ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் அந்த அறிகுறிகளை நாம் கவனிப்பதில்லை. ஏனெனில் அவையெல்லாம் நாம் தினந்தோறும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்றே இருக்கும். அப்படிப்பட்ட உயர் கொலஸ்ட்ராலுடன் தொடர்புடைய ஒரு அறிகுறி தான் இடுப்பு வலி. இன்று நிறைய பேர் இடுப்பு வலியால் அவதிப்படுகிறார்கள். எனவே இனிமேல் உங்களுக்கு இடுப்பு வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகி கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்துப் பாருங்கள்.

கொலஸ்ட்ரால் எப்படி இடுப்பு தசைகளை பாதிக்கிறது?
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அது இரத்த நாளங்களில் ப்ளேக்குகளை உருவாக்கும். இந்த ப்ளேக்குகள் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். இப்படி இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, உடலில் உள்ள பல தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல், அப்பகுதியில் வலியைத் தூண்டிவிடும். இந்நேரத்தில் அதிகளவு வேலையை செய்யும் போது, கடுமையான வலியை சந்திக்க நேரிடுகிறது.
அப்படி உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் பாதிக்கப்படக்கூடிய தசைகளில் ஒன்று தான் இடுப்பு தசைகள். உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பலர் கடுமையான இடுப்பு வலியை ஆரம்ப காலத்தில் சந்தித்ததாக கூறியுள்ளனர்.

இடுப்பு தசைகளுக்கும், கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு
பெரும்பாலானோர் இடுப்புப் பகுதியில் வலியை அனுபவித்தால், அது பெரும்பாலும் சிறுநீரக பிரச்சனை அல்லது எலும்பு பிரச்சனையாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதை சாதாரணமாக விட்டுவிடுகிறார்கள். இதற்கு காரணம் நிறைய பேருக்கு கொலஸ்ட்ராலுக்கும், இடுப்பு தசைகளுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி தெரியாமல் இருப்பது தான்.
ஆனால் இரத்த நாளங்களில் ப்ளேக்குகள் உருவாகும் போது, அது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் தடையை ஏற்படுத்தி பெருந்தமனி தடிப்பு நோயை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, இடுப்பு, கால்கள் மற்றும் பாதங்களையும் பாதிப்பதாக சுகாதார அறிக்கைகள் கூறுகின்றன.

உயர் கொலஸ்ட்ரால் இருந்தால் எப்போதெல்லாம் இடுப்பு வலி ஏற்படும்?
நீங்கள் லேசான மற்றும் சிறிய வேலைகளை செய்தாலும் இடுப்பு பகுதியில் கடுமையான வலியை சந்தித்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். அதாவது நீங்கள் நடக்கும் போது கடுமையான இடுப்பு வலியை அனுபவிக்கலாம். இது தவிர இந்த வலியானது மெதுவாக பிட்டம், தொடை மற்றும் கணுக்கால் வரையும் பரவலாம். ஆனால் வலியின் தீவிரம் மற்றும் வலியை அனுபவிக்கும் பகுதி போன்றவை ஒவ்வொருவருக்கும் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளுக்கு ஏற்பட மாறுபடும். பெரும்பாலும் இந்த வலியானது ஓய்வு எடுத்தால் போய்விடும். ஆனால் மீண்டும் நடக்கும் போது வலியை சந்திக்கக்கூடும்.

உயர் கொலஸ்ட்ராலுடன் தொடர்புடைய பிற அறிகுறிகள்
உடலில் கொலஸ்ட்ரால் வரம்புக்கு மீறி அதிகமாக இருந்தால், இடுப்பு பகுதிக்கு கீழே பிற அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும். அவை:
* கால்களில் முடி உதிர்தல்
* கால்கள் அடிக்கடி மரத்துப் போதல்
* கால்விரல் நகங்கள் உடைதல்
* கால்களில் ஏற்படும் காயங்கள் ஆறாமல் இருத்தல்
* கால்கள் வெளிர் நிறத்தில் மாறுதல்
* சருமம் பளபளப்பாக காணப்படுதல்
* ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை
* கால் தசைகள் சுருங்குதல் போன்றவை ஆகும்.

உயர் கொலஸ்ட்ராலை எப்படி குறைப்பது?
ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் ஒருவர் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை நன்கு அறிந்து உண்ண வேண்டும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் செயற்கை பொருட்கள் நிரம்பிய உணவுகள் தான். இது தவிர கேக், பிஸ்கட், சாசேஜ், கொழுப்புள்ள இறைச்சி, க்ரீம், சீஸ், வெண்ணெய் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications