Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
மூன்றே நாட்களில் உடலில் உள்ள புழுக்களை அழிக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!
குடல் புழுக்களின் பிரச்சனையை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும். அதோடு சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்ற வேண்டும். இப்போது அந்த வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.
தற்போதைய மோசமான வாழ்க்கை முறை, கெட்டுப் போன உணவை உண்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் அசுத்தமான நீரைக் குடிப்பது போன்றவற்றால் வயிற்றில் புழுக்கள் உருவாகின்றன. ஒருவரது வயிற்றில் புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான். இருந்தாலும், வயிற்றில் புழுக்ள் இருந்தால், அது வயிற்றில் திடீர் வலி, பசியின்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

பொதுவாக 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தான் புழு பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். ஆகவே தான் குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை புழு மருந்து/பூச்சி மருந்து கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றில் புழுக்கள் அதிக இருந்தால், அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். சில நேரங்களில் அதிகப்படியான புழுக்களால் வயிற்றில் காயங்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த புழுக்களின் பிரச்சனையை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும். அதோடு சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்ற வேண்டும். இப்போது அந்த வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.

செலரி
உங்கள் வயிற்றில் அல்லது உங்கள் குழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், செலரி நல்ல தீர்வைத் தரும். ஏனெனில் செலரியில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது பூச்சிகளை அழிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1/2 டீஸ்பூன் செலரி பவுடர் சேர்த்து கலந்து, அதை ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட, 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து உட்கொண்டு வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இப்படி இரவு தூங்கும் முன் செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

வேப்பிலை
வேப்பிலையும் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் திறன் கொண்டுள்ளது. ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. ஆகவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

கேரட்
கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு, குடலியக்கத்திற்கும் நல்லது. அதற்கு கேரட்டை தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றில் உள்ள புழுக்களை மலத்தின் வழியாக எளிதில் வெளியேற்ற உதவும்.

பப்பாளி விதை
பப்பாளியில் பாப்பைன் என்னும் நொதி பொருள் உள்ளது. அதுவும் பப்பாளியின் விதைகளை அரைத்து, அதை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வர, வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். இல்லாவிட்டால், பாப்பாளியின் இலைகளை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.

ஓமம்
ஓம விதைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம், குடல் புழுக்கள் அழிந்து வெளியேற்றப்படுமாம். குழந்தைகளுக்கு கொடுப்பது என்றால் ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது வெல்லத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

பூண்டு
பூண்டு பயன்படுத்தியும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம். அதற்கு பூண்டை அரைத்து, அதில் கல் உப்பு சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பூண்டு பால் கூட குடிக்கலாம். இவ்வாறு செய்தால், குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களின் வயிற்றில் உள்ள புழுக்களும் அழிந்துவிடும்.

துளசி
உங்கள் உடலில் எவ்வித புழுக்களும் இருக்கக்கூடாது என்று விரும்பினால், துளசியைப் பயன்படுத்துங்கள். அதற்கு தினமும் துளசியை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு வேளை துளசி இலைகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளை
மாதுளையின் தோல்களுக்கு வயிற்றுப் புழுக்களை அழிக்கும் திறன் உள்ளது. அதற்கு மாதுளையின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஒரு நாளைக்கு 2 வேளை நீரில் கலந்து குடித்து வர, சில நாட்களில் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

பாகற்காய் ஜூஸ்
பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வருவதன் மூலம் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம் இல்லாவிட்டால் பாகற்காயின் விதைகளை உலர்த்தி அரைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிடலாம்.

கிராம்பு
கிராம்பு குடல் புழுக்களை அழிப்பதோடு, அதன் முட்டைகளையும் அழித்து, மீண்டும் குடல் புழு பிரச்சனை வராமல் தடுக்கும். அதற்கு ஒரு கப் சுடுநீரில் 1-2 கிராம்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரை குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால், புழு பிரச்சனை இல்லாமல் வாழலாம்.



Click it and Unblock the Notifications
