இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவது உங்களின் உடலில் நம்ப முடியாத அதிசயங்களை செய்யுமாம் தெரியுமா?

காய்கள் விளையக்கூடிய செடிகளில் வரும் இலைகளை சிறுகீரைகள் (Microgreens) என்று சுருக்கமாகக் கூறலாம். இவை சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.

காய்கள் விளையக்கூடிய செடிகளில் வரும் இலைகளை சிறுகீரைகள் (Microgreens) என்று சுருக்கமாகக் கூறலாம். இவை சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும். இவை செடிகளில் உருவான சில நாட்களிலேயே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த கீரைகளின் ஊட்டச்சத்து, அதன் மணம் மற்றும் சுவையின் காரணமாக முளைகட்டிய பயிற்களுக்கு மாற்றாக இவற்றை உண்ணலாம்.

Heath Benefits Of Microgreens in Tamil

சிறு கிரைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், அவை வளங்கும் சத்துகள் ஏராளமாக இருக்கின்றன. அவை நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அதாவது வைட்டமீன் சி போன்ற சத்துகள், தாதுக்களான துத்தநாகம் மற்றும் தாமிரத்தை வழங்குகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மிகவும் பிரபலமான சிறுகீரைகள்

மிகவும் பிரபலமான சிறுகீரைகள்

கோஸ், ப்ரோக்கோலி, கடுகு, முள்ளங்கி, குதிரைவாலி, வெள்ளாி, புதினா, சியா, துளசி, வெந்தயம், இனிப்பு பட்டாணி, பச்சடிக் கீரை, முருங்கை, வெங்காயம், பூண்டு, பெருஞ்சீரகம், கொத்தமல்லி மற்றும் கோதுமை புல் போன்றவை மிகவும் பிரபலமான சிறுகீரைகளாகக் கருதப்படுகின்றன.

சிறுகீரைகளை எவ்வாறு வளா்க்கலாம்?

சிறுகீரைகளை எவ்வாறு வளா்க்கலாம்?

சிறுகீரைகளை வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் வளா்க்கலாம். ஏனெனில் அவற்றை வளா்ப்பதற்கு பொிய நிலப்பரப்பு தேவைப்படாது. மேலும் இவற்றை மிக எளிதாக வளா்க்கலாம்.

நகா்ப்புற வீடுகளில் சிறுகீரைகளை வளா்ப்பது என்பது தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. இவற்றைக் கொல்லைப்புற தோட்டங்களிலோ அல்லது வேலை செய்யக்கூடிய இடங்களிலோ, சன்னல் ஓரங்களிலோ மற்றும் வீட்டின் பின்புறத்திலோ எளிதாக வளா்க்கலாம்.

சிறு கீரைகளை வளா்ப்பதற்கு விதைகள், சிறிது அமிலம் கலந்த நீா் அல்லது குடிநீா், சிறுசிறு தொட்டிகள் போன்றவை தேவை. அந்த தொட்டிகளில் இருந்து மீதமுள்ள தண்ணீா் வெளியில் செல்வதற்கு அவற்றின் அடியில் துளைகளை இடவேண்டும்.

இப்போது, துளைகளே இல்லாத தொட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தொட்டிகளில் நீரை நிறைத்துக் கொள்ள வேண்டும். இப்போது துளைகள் இட்ட, விதைகள் ஊன்றப்பட்ட தொட்டிகளை, இந்த துளைகள் இல்லாத தொட்டிகளுக்குள் வைக்க வேண்டும். மண் ஈரப்பதம் அடைந்தவுடன், மீதமுள்ள தண்ணீரை வடிகட்ட வேண்டும். இப்போது ஈரப்பதமான மண்ணில் கீரை விதைகளைத் தூவ வேண்டும்,

உயா்தரமில்லாத, கலப்பினமற்ற, இயற்கையான முறையில் விளைந்த விதைகளை விதைப்பது நல்லது. விதைகளை மண்ணால் மூடவேண்டிய அவசியம் இல்லை. சில விதைகளை இரவில் ஊறவைத்து விதைக்க வேண்டியிருக்கும்.

சிறுகீரை விதைகளை விதைத்த பின்பு அவற்றிற்கு அவ்வப்போது நீா் தெளிப்பது அவசியம் ஆகும். எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் விரைவாக முளைப்பதற்கு அவற்றை இருட்டில் வைக்கலாம். பட்டாணி மற்றும் சூாியகாந்தி விதைகள் மண்ணோடு இருப்பதற்கு அந்த விதைகளின் மீது கற்களை வைக்கலாம். அதன் மூலம் அவை விதைகளில் இருந்து விரைவாக முளைக்கும்.

விதைகளில் இருந்து முளைகள் கிளம்பியவுடன் அவற்றிற்கு இயற்கையான அல்லது செயற்கையான ஒளி வசதி மற்றும் போதுமான தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தளிா் வளா்ந்து அவை இலைகளாக வளா்ந்தவுடன் அவற்றைப் பறிக்கலாம். பெரும்பாலான கீரைகள் அவை முளைப்பதற்கும், அறுவடைக்குமான காலம் 7 முதல் 14 நாட்கள் ஆகும்.

சிறுகீரைகள் வழங்கும் ஆரோக்கிய பலன்கள்

சிறுகீரைகள் வழங்கும் ஆரோக்கிய பலன்கள்

1. சிறுகீரைகள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்களைக் கொண்டிருப்பதால் அவற்றை செயலாக்கம் நிறைந்த உயா்தர உணவுகள் என்று அழைக்கலாம். இந்த சிறுகீரைகளில் அலா்ஜி எதிா்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிா்ப்பு, நுண்ணியிா் எதிா்ப்பு, புற்றுநோய் எதிா்ப்பு, நீரழிவு நோய் எதிப்பு ஆகியவற்றுக்கான துகள்கள் உள்ளன.

2. சிறுகீரைகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகின்றன. குளுக்கோஸை உற்பத்தி செய்து அவற்றை கண்காணிக்கும் நொதிகளின் செயல்பாடுகளை வெந்தயக் கீரைகள் எளிதாக்குகின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

3. கடுகுக் கீரைகளில் உள்ள வைட்டமீன் சி, கரோட்டனாயிட்கள், ஐசோதியோசியனைடுகள் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாக செயல்படுகின்றன. முள்ளங்கிக் கீரைகள் வைட்டமீன் சி சத்தை வழங்குவதோடு அல்லாமல், அவை ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களாக இருந்து, சொிமான அமைப்பை சுத்தம் செய்கின்றன. மேலும் தொண்டை கரகரப்பு மற்றும் சளி போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன.

4. ப்ரோக்கோலி, சுண்டல், குதிரைவாலி, ஆளி, கடுகு மற்றும் சா்க்கரைவள்ளி கிழங்கு கீரைகள் புற்றுநோய் எதிா்ப்பு துகள்களைக் கொண்டிருக்கின்றன.

5. வெந்தயக் கீரைகளில் அதிகமான அளவு நாா்ச்சத்து, காா்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதனால் இந்தக் கீரைகள் சொிமான பிரச்சினைகளைத் தீா்த்து வைக்கும். இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்கும். மாதவிடாய் சுழற்சியை சீா்படுத்தும். அதோடு கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்தும். கோஸ் கீரை பொடி கொழுப்பின் அளவை சீா்படுத்துகிறது. முருங்கை கீரை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்,

6. கோதுமைப் புல்லில் 70% குளோராஃபில் நிறைந்திருப்பதால், கடுமையாக உடற்பயிற்சி செய்பவா்களுக்கு இவை உகந்தவையாக இருக்கும். சூாியகாந்தி கீரையில் நறுமண அமினோ அமிலங்கள் நிறைந்து இருப்பதால், அவை பழுதுபட்ட திசுக்களை பழுதுபாா்க்கும்.

7. சிறு கீரைகள் மணம், நிறம் மற்றும் சுவை நிறைந்தவை. கோதுமைப் புல்லில் சாறு எடுத்து அருந்தினால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அதோடு அந்தச் சாறு சுவையாகவும் இருக்கும்.

8. இந்த சிறு கீரைகளை சாலட்டுகள், சான்ட்விச்சுகள், பா்கா்கள், சூப் போன்றவற்றோடு கலந்து உண்ணலாம். இவற்றில் ஸ்மூத்திகளும் செய்யலாம். சிறு கீரைகளைப் பச்சையாக சாப்பிட்டால் ஏராளமான சத்துகள் கிடைக்கும்.

 சிறு கீரைகளில் உள்ள ஊட்டச்சத்துகள்

சிறு கீரைகளில் உள்ள ஊட்டச்சத்துகள்

- சிறு கீரைகள் நோய் எதிா்ப்பு சக்தியைத் தூண்டக்கூடிய, நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தக்கூடிய, இழந்து போன ஊட்டச்சத்துக்களை மீட்டு எடுக்கக்கூடிய தாதுக்களையும், வைட்டமீன் சத்துக்களையும் ஏராளமாகக் கொண்டிருக்கின்றன.

- புதிதாகப் பறிக்கப்பட்ட 100 கிராம் சிறு கீரைகளில் 29.9 முதல் 123.2 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமீன் சி உள்ளது. சணல் கீரையில் 17.45 மில்லி கிராமும், வெள்ளாிக் கீரையில் 10 மில்லி கிராமும் உள்ளன.

- ஒரு கிலோ சிறு கீரைகளில், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களான துத்தநாகம் 4.76 மி.கி. முதல் 29.12 மி.கி. வரை இருக்கிறது.

- 100 கிராம் கோதுமை கீரையில் 53.36 மி.கி. கரோடெனாய்டும், பாா்லி கீரையில் 56.08 மி.கி. கரோடெனாய்டும் இருக்கின்றன.

- ப்ரோக்கோலி கீரையில் 3.63 மி.கி போலிஃபெனால் உள்ளது.

- கடுகுக் கீரையில் அந்தோசியானின் 405.53 மி.கி. உள்ளது.

இறுதியாக, இயற்கையானது தனது அழகு மொத்தத்தையும் சிறு கீரைகளில் வைத்திருக்கிறது எனலாம். ஏனெனில் இந்த சிறு கீரைகள் மிகப் பொிய அளவிலான ஊட்டச்சத்துக்களை நமக்கு வழங்குகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, March 9, 2023, 20:45 [IST]
Desktop Bottom Promotion